25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1536927640
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா முகத்தை பட்டு போல மாற்றும் முன்னோர்களின் மூலிகை குறிப்புகள்…!

அன்றாட வேலை பளுவில் நம்மையே நாம் மறந்து இயங்கி கொண்டிருக்கின்றோம். வேலை பளுவின் காரணத்தால் உடலின் ஊட்டசத்துக்களும் குறைந்து, பல வகையான நோய்களும் நம்மை பற்றி கொள்கிறது. இவை உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு முகத்தின் அழகையும் கெடுத்து விடுகிறது. அந்த வகையில் நம் முக அழகை பாதிக்க கூடிய அன்றாட செயல்கள் பல இருக்கின்றன.

முக அழகை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக எண்ணற்ற வேதி பொருட்களை வாங்கி முகத்தில் பூசி கொள்கின்றோம். அவை அனைத்தும் முக அழகை கெடுக்க கூடியதாகும். இந்த பதிவுவில் முக அழகை மேம்படுத்தும் நம் முன்னோர்களின் மூலிகை முறைகள் பற்றி தெளிவாக காண்போம்.

உன்னத மூலிகை முறை..! பல்வேறு அழகு கலை சாதனங்கள் இன்று சந்தையில் வந்து குவிந்தாலும், இயற்கை ரீதியான அழகு என்பதே முதன்மையானது. நம் முன்னோர்களின் இயற்கை மூலிகைகள் அற்புத தன்மையை அதிகம் கொண்டதாகும். அவை அனைத்தும் சருமத்தின் அழகை இரு மடங்கு கூட்டுமாம். மேலும், முகத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதாம்.

நலம் தரும் கற்றாழை..! மூலிகைகளில் பல வகை உண்டு. ஒரு சில உடல் ஆரோக்கியத்தை மட்டும் மேம்படுத்தும். ஒரு சில முக ஆரோக்யத்தை மட்டும் மேம்படுத்தும். இவை இரண்டையும் சமநிலையில் வைக்கும் தன்மை கற்றாழைக்கு உள்ளதாம். முகத்தில் கற்றாழை ஜெல்லை தடவி வந்தால் முகம் பொலிவு பெறும். மேலும் சருமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீங்கும்.

சந்தன அழகு..! முகத்தை பொலிவு பெற செய்யும் இந்த முன்னோர்களின் மருத்துவத்தை நாம் நிச்சயம் வீட்டில் செய்து வர வேண்டும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகப்பருக்கள், கீறல்கள் என அனைத்தையும் போக்க கூடியதாம்.

தேவையானவை :- 1 டீஸ்பூன் சந்தனம் 1 டீஸ்பூன் தேன் கை நிறைய முளைக்கீரை

செய்முறை :- முதலில் முளைக்கீரையை நன்கு மசித்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் சந்தனம் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக அழகு இரட்டிப்பாகும். அத்தோடு, முகம் பொலிவு கூடும்.

மகத்துவம் பெற்ற மஞ்சள்..! மஞ்சள் சிறந்த கிருமி நாசினி என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. என்றாலும், இவை முகத்தின் அழகையும் முற்றிலுமாக பாதுகாக்குமாம். முகத்தின் அழகை பொலிவு பெற செய்ய இந்த முன்னோர்களின் முறையை செய்து பாருங்கள்.

தேவையானவை :- 1 டீஸ்பூன் மஞ்சள் 1 டேபிள்ஸ்பூன் பால் 2 டீஸ்பூன் கடலை மாவு

செய்முறை :- கடலை மாவை முதலில் மஞ்சளுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பால் சேர்த்து, கலவை போல ஆக்கி கொண்டு முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை அலசினால் முகம் பொலிவு பெறும். மேலும், முகத்தில் உள்ள கிருமிகள், அழுக்குகள் நீங்கி விடும்.

அழகு சின்னம் ரோஜா..! முக அழகை மேம்படுத்துவதில் இந்த ரோஜாக்களுக்கும் முக்கிய பங்கு உள்ளதாம். இவற்றில் பல வகையான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் முகத்தின் அழகை அதிகரிக்கவும், பராமரிக்கவும் செய்கிறது.

தேவையானவை :- 1 ரோஜா பூ 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு 1/2 கப் கிலிஸரீன்

செய்முறை :- முதலில் ரோஜா இதழ்களை தனியாக எடுத்து கொண்டு அவற்றுடன் சிறிது கிலிஸ்க்ரீன் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் பளிச்சென்றாகும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வரலாம்.

பொலிவூட்டும் அழகு…! முகத்தை அதிகமாக பொலிவு பெற செய்ய பல வழிகள் இருக்கிறது. அவற்றில் மிக எளிமையான வழி இதுவே. முகத்தை மயக்கும் அழகாக மாற்ற இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள் நண்பர்களே.

தேவையானவை :- சாமந்தி பூ 1 ரோஜா பூ 1 பாதாம் எண்ணெய் 1 டீஸ்பூன்

செய்முறை :- சாமந்தி பூ மற்றும் ரோஜா பூ ஆகியவற்றின் இதழ்களை தனியாக எடுத்து கொண்டு, நன்றாக அரைத்து கொள்ளவும். அதன்பிறகு இந்த கலவையுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் பொலிவு பெரும். மேலும், மென்மையான சருமத்தையும் பெறலாம்.

Related posts

அழகுக்கு அழகு சேர்க்க கடலை மாவு பேஷியல்

nathan

நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்!

sangika

கொரிய பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகின் ரகசியத்திற்கு ‘இது’ தான் காரணமாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பருக்களை வந்த இடம் தெரியாமல் விரட்டும் இயற்கை வைத்தியம்…!

nathan

தேன் ஃபேஸ் வாஷ் ட்ரை பண்ணியிருக்கீங்களா? வீட்டிலேயே தயாரிக்கலாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியான மற்றும் நீளமான புருவத்தை பெற என்ன செய்ய வேண்டும்?

nathan

இதோ எளிய நிவாரணம்! முகப்பரு பிரச்சனைக்கு ‘டாடா’ சொல்லணுமா? அப்ப வாரத்துக்கு 2 தடவை இத செய்யுங்க…

nathan

கொய்யாப்பழ தோலை இப்படி அப்ளை பண்ணுங்க… ஒரு வாரத்துல நீங்க கலராகணுமா?

nathan