தலைமுடி கொட்டுதல் என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இவ்வாறு முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஹோர்மோன்கள், பரம்பரை, மனஅழுத்தம், நோய், மருந்து வகைகள் உட்கொள்ளுதல் மற்றும் தைரொய்ட் பிரச்சினை என்பன இதற்கு காரணமாக அமையலாம்.
இருப்பினும் இந்த முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆமணக்கு எண்ணெயை உபயோகிப்பதன் மூலம் தீர்வு காணலாம். இந்த ஆமணக்கு எண்ணெயானது பங்கஸ் மற்றும் பக்டீரியாவுக்கு எதிராக செயற்படுவதுடன் விட்டமின்-ஈ, கனியுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் ஆகியவற்றையும் தலைமுடிக்கு வழங்குகின்றது.
இந்த எண்ணெயானது தலைமுடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாது கண் இமை வளர்ச்சி, புருவத்தை அடர்த்தியாக்க மற்றும் கூந்தலை அடர்த்தியாக்க போன்ற பல்வேறு தேவைகளுக்காக உபயோகிக்கப்படுகின்றது.
அத்துடன் பொடுகுத் தொல்லை, பங்கள் மற்றும் கிருமித் தொற்று என்பவற்றிற்கும் இந்த ஆமணக்கு எண்ணெய் தீர்வாக அமைகின்றது.
தேவையான பொருட்கள்
01. 3 மேசைக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்
02. ஒரு மேசைக்கரண்டி ஜொஜொபா எண்ணெய்
செய்முறை
மேற்குறிப்பிட்ட இரண்டு பொருட்களையும் பாத்திரம் ஒன்றில் இட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர்தலைமுடிக்குஇடையில், விரல்களின் உதவியைக் கொண்டு குறித்த கலவையை மண்டை ஓட்டில் முழுமையாக படும்படி பூசி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு குறைந்தது 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து பின்னர் தலையைக் கழுவ வேண்டும். அல்லது ஒரு இரவு அதனை அப்படியே தலையில் விட்டு விடலாம். இதன் போது தலையணையை மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த முறையின் முழுமையான பலனைப் பெற வேண்டுமானால் குறித்த கலவையை மண்டை ஓட்டில் பூசுவதற்கு முன்பாக தண்ணீரால் தலையை நனைத்துக் கொள்ள வேண்டும்.
ஆமணக்கு எண்ணெயை கண் இமைகளுக்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
தேவையான பொருட்கள்
01. 30 மில்லிலீட்டர் ஆமணக்கு எண்ணெய்
02. 20 மில்லிலீட்டர் பந்தனொல்
03. 15 துளிகள் வெள்ளைப் பூண்டு எண்ணெய்
செய்முறை
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி புருவங்கள் மற்றும் கண் இமைகளுக்கு பூசிவர வேண்டும். இவ்வாறு செய்தால் அவை வளர்ச்சியடைவதை நீங்களே காண்பீர்கள்