முகத்தின் அழகை பரமரிப்பதில் நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை. எப்படி நம் ஆரோக்கியம் முக்கியமானதாக உள்ளதோ அதே போன்று நமது முகத்தின் அழகும் ஆரோக்கியமும் மிகவும் இன்றியமையாததாகும். முதலில் முகத்தின் அழகை கெடுப்பது எவை என்பதை நாம் உணர வேண்டும். அதில் முக்கிய இடத்தில் இருப்பது கரும்புள்ளிகள், பருக்கள், கீறல்கள், எண்ணெய் பசை, வறண்ட சருமம்… போன்றவையே முதன்மையான இடத்தில இருக்கிறது.
இவற்றையெல்லாம் போக்கி விட்டால் நம் முகம் மிகவும் அழகாக மாறி விடும். முகம் பார்ப்பதற்கு உலக அழகையையோ அல்லது உலக அழகனையோ போல மின்ன வேண்டும் என்றால், இந்த பதிவில் கூறும் குறிப்புகளை பின்பற்றி வாருங்கள் நண்பர்களே.
இளமையான முகத்தை பெற உங்களின் முகம் மிகவும் இளமையாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த பொருட்களை பயன்படுத்தினாலே போதும். அதிலும் குறிப்பாக கிரீன் டீ, வெள்ளரிக்காய் கொண்ட இந்த அழகியல் குறிப்பே போதும்க..!
தேவையானவை :- வெள்ளரிக்காய் கிரீன் டீ உருளை கிழங்கு
செய்முறை :- முதலில் உருளை கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை நன்கு அரைத்து கொண்டு தனி தனியாக சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கிரீன் டீ, மற்றும் இந்த 2 சாறுகளையும் ஒன்றாக சேர்த்து முகத்தில் பூசி ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டால் இளமையான முகத்தை பெறலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வாருங்கள்.
தக்காளியும் தேனும் முகம் பளபளவென மின்ன வேண்டுமா..? அதற்கு நம் வீட்டில் உள்ள இந்த 2 எளிய பொருட்களே போதும். முகத்தை மின்ன செய்யும் தன்மை இந்த ஃபேஸ் பேக்கிற்கு உள்ளது.
தேவையானவை :- தக்காளி சாறு 3 டேபிள்ஸ்பூன் தேன் 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை :- முகத்தை பளபளப்பாக மாற்ற, முதலில் தக்காளியை நன்கு அரைத்து கொண்டு அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இந்த சாற்றில் தேன் கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து விட்டு, இரவு முழுவதும் அப்படியே விடவும். மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் முகம் மின்னும்.
கரும்புள்ளிகள் மறைய முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து மென்மையாக மாற வேண்டுமென்றால் இந்த அழகு குறிப்பு அதற்கு பயன்படும்.
தேவையானவை :- கடலை மாவு 2 ஸ்பூன் மஞ்சள் 1 ஸ்பூன்
செய்முறை :- முதலில் கடலை மாவை மஞ்சளுடன் சேர்த்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் காய விட்டு, அடுத்த நாள் காலையில் கழுவவும். இவ்வாறு 2 வாரம் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.
ஆலிவ் மசாஜ் ஆலிவ் எண்ணெய்யை முகத்தில், இரவு நேரத்தில் தடவி வருவதால் பல வித நன்மைகள் ஏற்படுவதாக அழகியல் வல்லுநர்கள் சொல்கின்றனர். இதனால், முகத்தின் அழகியல் தோற்றம் முற்றிலுமாக வேறுபாடும். மேலும் முகம் மிகவும் மென்மையாக மாறும்.
சருமத்தை மிருதுவாக்க முகத்தில் அதிக வறட்சி இருந்தால், முக அழகையே கெடுத்து விடும். அதாவது, ஈரப்பதம் முகத்தில் குறைந்து அதிகமான சொரசொரப்புகள் ஏற்பட்டால் முகத்தின் முழு அழகையும் இது கெடுத்து விடும். இதனை சரி செய்ய…
தேவையானவை :- தேங்காய் பால் 2 ஸ்பூன் தக்காளி சாறு 2 ஸ்பூன்
செய்முறை :- முகத்தை ஈரப்பதத்துடன் பார்த்து கொள்ள, முதலில் தேங்காய் மற்றும் தக்காளியை தனி தனியாக அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றின் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொண்டு, நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு, இதனை முகத்தில் பூசி இரவு முழுவதும் அப்படியே விடவும். மறுநாள் காலையில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் ஈர்ப்பத்துடனே இருக்கும்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.