முகத்தை அழகாக்க எவ்வளவுதான் வழிகள் இருந்தாலும் இயற்கையான வழிகளை பயன்படுத்தினால் எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.
அந்த வகையில் அழகை அதிகரிக்க கேரட்டுடன் பால் சேர்த்து பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
தேவையானவை
- கேரட்- 2-3
- பால்- தேவையான அளவு
செய்முறை
- முதலில் கேரட்டை மிக்ஸில் போடி நன்கு அரைத்து பின் அதனுடன் தேவையான அளவு பால் சேர்த்து முகத்திற்கு தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவுடனும் வைத்திருக்க முடியும்.
நன்மைகள்
- இந்த கலவையை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால் முகப்பரு, தழும்புகள், கரும்புள்ளிகள், சருமத்தில் ஏற்பட்ட அழுக்குகள் நீக்கப்பட்டு அழகாக மாறலாம்.
- இந்த கலவையை பயன்படுத்தினால் அதில் உள்ள கொலாஜென் வயதானால் ஏற்படும் முகச் சுருக்கத்தை குறைத்து சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
- கேரட் மற்றும் பால் சேர்ந்த கலவையை முகத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தில் ஏற்படும் வறட்சி குறைந்து மென்மையாக இருக்க உதவுகிறது.
- இதனை தினமும் பயன்படுத்தினால் சூரியக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் சருமம் கருப்பாக மாறாமல் தடுக்கலாம்.
- வெயிலில் செல்லும் போது ஏற்படும் சரும அரிப்பு, எரிச்சல் போன்றவற்றை இந்த கலவையை தினமும் பயன்படுத்தினால் குணமாகும்.
- கேரட், பால், மற்றும் மஞ்சள் கலந்த கலவையை முகத்தில் பயன்படுத்தினால் தேவையில்லாமல் வளரும் முடிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் சருமம் மென்மையாக இருக்க உதவும்.