27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
537175129
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா ஆண்களுக்கு முடி வெள்ளையாக மாறுவதற்கு இந்த உணவுகள் தான் காரணம்..!

நாம் சாப்பிடும் அன்றாட உணவு எத்தகைய சத்துக்களை கொண்டது என்பதை நாம் தெரிந்து கொண்டே உணவை உண்ண வேண்டும். இல்லையேல் அவை நம் முழு ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும். உணவின் சாரம்சம் தான் ஒருவரை நலம் கொண்டவராக வைத்து கொள்ளும். உணவின் தன்மை நாளுக்கு நாள் சீர்கேடு அடைந்து கொண்டே வருகிறது. உணவின் தாக்கம் எல்லா வகையிலும் உள்ளன.

இன்று பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் முதன்மையானதாக இந்த முடி பற்றிய பிரச்சினையும் சேர்க்கப்படுகிறது. அதிலும், ஆண்களுக்கு இளம் வயதிலே வெள்ளை முடி பிரச்சினை வருகிறது. இந்த பதிவில் ஆண்கள் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் இளநரையை உருவாக்குகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆண்களின் அழகு..! ஒரு ஆணுக்கு அழகென கருதப்படுவது அவர்களின் முடிதான். எந்த ஒரு கதாநாயகனாக இருந்தாலும் அவருக்கு முடி அழகாக இருந்தால் மட்டுமே ஒரு பெரிய ரசிகர் கூட்டமே கூடுகிறது. இது மக்களின் இயல்பான பார்வையாக உள்ளது. இத்தகைய பெருமைக்குரிய முடியின் தன்மை வெள்ளையாக மாறினால் பலவித மன கசப்புகள் ஏற்படும்.

வெள்ளை ஏன்..?

பெரும்பாலும் இந்த நரை முடி பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்றே தெரியாமல் நம்மில் பலர் இருப்பார்கள். முடி வெள்ளையாக மாற எண்ணற்ற காரணங்கள் இருக்கிறது. முடியில் “மெலனின்” என்ற நிறமியின், சுரக்கும் தன்மை குறைந்தால் முடிகள் வெள்ளையாக மாற கூடும். இவை பல்வேறு காரணிகளால் குறைபாடு அடையும்.

இவைதான் காரணம்..!

முடி வெள்ளையாக மாறுவதற்கு ஒரு சில முதன்மையான காரணங்கள் கருதப்படுகிறது. – பரம்பரை ரீதியாக முடி நரைத்து கொள்ளுதல் – அன்றாட பழக்க வழக்கங்கள் – உணவு முறை – முடியை பராமரிக்காமல் இருத்தல் – தலைக்கு வேதி பொருட்கள் பயன்படுத்துதல்

வெள்ளை ஆக்குமா உப்பு…?

ஒரு நாளைக்கு 2300 mg அளவே உப்பை உணவில் சேர்த்து கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு மாறாக உண்ணும் உணவில் அதிக அளவில் உப்பை சேர்த்து கொண்டால், அது உங்கள் முடியை பாதித்து நரையை ஏற்படுத்தும். எப்போதும் உணவில் சேர்த்து கொள்ளும் உப்பின் அளவு மிக இன்றியமையாததாகும்.

அசைவம் இல்லையா..?

உங்கள் உணவில் அசைவம் இல்லையென்றாலும், அது உங்கள் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்குமாம். மீன், முட்டை போன்றவை உணவில் சேர்த்து கொள்ளவில்லை என்றால் முடிக்கு சத்து குறைவு ஏற்படும். அதாவது, இவைதான் முடியின் மெலனின் மற்றும் கேரட்டின் என்ற இரு முக்கிய நிறமிகளை சுரக்க அதிகம் உதவுகிறது.

செயற்கை பானங்கள்

வெள்ளை தருமா..? பல ஆண்கள் குளிர் பானங்களை பெரிதும் விரும்பி குடிப்பார்கள். இவை தான் அவர்களின் வெள்ளை முடியிற்கு முதன்மையான காரணம் என்பதை உணராமல் குடித்து கொண்டிருக்கின்றனர். இவற்றில் அதிக அளவில் செயற்கை சர்க்கரைகளை சேர்ப்பதால் கொழுப்புக்களை அதிகரிக்க செய்யும். அத்துடன் முடி வெள்ளையாக மாற கூடும்.

வைட்டமின்கள் குறைந்த உணவுகள்..! உண்ணும் உணவில் வைட்டமின்கள் அதிக அளவில் சேர்த்து கொள்ளவில்லையென்றால், அவை உங்கள் முடியின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். வைட்டமின் பி5, வைட்டமின் பி6, பி9, பயோட்டின் போன்றவை இல்லாத உணவு அதிகம் சாப்பிட்டால் அவை முடியின் கருமை நிறத்தை இழக்க செய்து விடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்… இன்று உண்ணும் உணவு முறையில் கவனமே இல்லாமல் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், இறைச்சிகள், தின்பண்டங்கள் போன்றவற்றை சாப்பிடுவதால் முடியின் முழு ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறதாம்.

சர்க்கரை தரும் நரை..! முடி இளமையிலே வெள்ளையாக மாறுவதற்கு இந்த சர்க்கரைதான் முக்கிய காரணமாம். இவை வைட்டமின்களை உறிந்து எடுத்து கொள்வதால், தலையில் கருமை நிறம் பாதிக்க படுகிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவில் செயற்கை சர்க்கரை, வேதி பொருட்கள் சேர்ப்பதால் வெள்ளை முடிகளை இவை தருகிறது.

மோனோசோடியம் குளூட்டமேட் ஃபாஸ்ட் ஃபூட்ஸ் அதிகம் சாப்பிடும் ஆண்களுக்கு விரைவிலே முடி வெள்ளையாக மாறுமாம். இது போன்ற உணவுகளில் மோனோசோடியம் குளூட்டமேட் என்ற வேதி பொருட்கள் சேர்க்கப்படுவதால் முடியை பாதித்து, நரையை தந்து விடுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளை மாவு அதிகமாக பாலிஷ் செய்யப்பட்ட மாவைத்தான் வெள்ளை மாவு என்று சொல்கின்றனர். இது உடலுக்கு பல்வேறு உபாதைகளை தர கூடியது. இவற்றில் உலோக இரும்பு தன்மை அதிகம் இருப்பதால் முடியின் நிறத்தை இழக்க செய்கிறது. இதுவே வெள்ளை முடிக்கு காரணமாம்.

அதிக புரதமா..? இறைச்சி என்பது ஆண்களின் பிரியமான ஒன்றுதான். ஆனால், அதிக புரதச்சத்துக்கள் கொண்ட இறைச்சிகளை சாப்பிட்டால் அவ்வளவுதான். இவை முடியின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை யூரிக் அமிலத்தை அதிகம் உற்பத்தி செய்வதால் வெள்ளை முடி உருவாகிறது.

செயற்கை செய்யும் தீமைகள்…! நாம் சாப்பிடும் வண்ணமயமான உணவுகளில் அதிகம் செயற்கையான நிறமூட்டிகள், இனிப்புகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இதனால் ஒவ்வாமை, அரிப்புகள் ஏற்பட கூடும். அத்துடன் புற்றநோயும் வருமாம். இவை அனைத்திற்கும் மேலாக முடி வெள்ளையாக மாற கூடும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

537175129

Related posts

அழகுக்கு அழகு கூட்ட உதவிடும் பகுதி-தலைமுடி

nathan

உங்க சமையலறையில் உள்ள ‘இந்த’ பொருட்கள் முடி உதிர்வை தடுத்து வேகமாக வளர வைக்க உதவுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

பொடுகு தொல்லையை நீக்கி கூந்தல் வளர்ச்சியை தூண்டும் கடுகு எண்ணெய்

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு வெந்தயத்தை எப்படி உபயோகப்படுத்தலாம் என தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இயற்கை ஷாம்பு வீட்டிலே தயாரிக்கலாமே..

nathan

வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இந்த நேச்சுரல் ஷாம்பு யூஸ் பண்ணுங்க…

nathan

​சால்ட் அண்ட் பெப்பர்… ஹேர் ஸ்டைல் அல்ல.. குறைபாடு!

nathan

இயற்கை முறையில் சீயக்காய் தூள் வீட்டில் செய்வது எப்படி. முடி நன்கு நீண்டு வளரும்…

nathan

இதனை ஒரு வாரம் பயன்படுத்தினாலே போதும்!! இளநரையை முழுமையாக போக்க வேண்டுமா:?

nathan