29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
4 1537603840
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா அதிகமாக முடி கொட்டுவதற்கு நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த செயல்கள்தான் காரணம்…!

முடியின் அழகை பெரும்பாலும் நாம் ரசிப்பது உண்டு. பெண்கள் எப்படி தனது முடியை அடிக்கடி கோதி கொள்கிறார்களோ அதே போன்று ஆண்களும் தங்களது முடியை செய்வதும், பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது. முடியின் வளர்ச்சி மிக முக்கியமானதாக எப்போதும் கருதப்படுகிறது. முடியின் வளர்ச்சியும் உங்கள் உடல் ஆரோக்கியத்தை குறிக்கும்.

அதிகமாக முடி கொட்டினால் அது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது. ஒரு சில முக்கிய செயல்கள் தான் நம் முடியை அதிகம் கொட்ட வைக்கிறது. இந்த பதிவில் முடியை அதிகமாக கொட்ட வைக்கும் முக்கிய செயல்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

முடியின் ஆரோக்கியம் முக்கியம்..!

முடியும் நம் உடலின் ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் நமது முக அழகையும் குறிக்கும் முதன்மையான விஷயமாகும். இயற்கையான பொருட்கள் பயன்படுத்தினாலே முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும், தலையில் அழுக்குகள் சேர்ந்தால் தலையை உடனே அலசிவிட வேண்டும்.

தேவையற்ற ஹேர் ஸ்டைல்ஸ்

முடியின் ஆரோக்கியத்தை பாதிக்க செய்யும் சில முக்கிய செயல்களில் இந்த ஹேர் ஸ்டைல்ஸ் முதல் இடத்தில உள்ளது. முடிகள் அதிகமாக கொட்டுகிறது என்றால், நீங்கள் உங்கள் முடியிற்கு அதிக அழுத்தத்தை தருகிறீர்கள் என்று அர்த்தம். ஆண்கள், தலையில் தீயை வைத்து செய்யும் சில ஹேர் ஸ்டைல்ஸ்கள் அவர்களின் முடியை விரைவிலே கொட்ட கூடும்

அழுக்கான முடிகள்…

முடி அதிக அழுக்காக இருந்தால் தலையில் பேன், பொடுகு போன்றவற்றை உருவாக்க கூடும். எனவே, வாரத்திற்கு 2 முறை தலைக்கு குளியுங்கள். தலையில் அதிகமாக அழுக்கு சேர்ந்தால் முடி கொட்டும் பிரச்சினை தொடக்கி விடும். இது நாளடைவில் வழுக்கை பிரச்சினைக்கு வழி வகுக்கும்.

சுடு நீர் குளியலா..?

பொதுவாக நம்மில் பலர் சுடு தண்ணீரில் குளிப்பது வழக்கம். ஆனால், தலைக்கு சுடு நீரை பயன்படுத்தி குளித்தால் விரைவிலே தலையின் பகுதிகள் வறண்டு போய்விடும். இது விரைவில் முடி உடைதலை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டயட் முடிக்கு ஆபத்து..! நீங்கள் டயட் இருக்கின்ரீர் என்ற பெயரில் சத்தான உணவுகளை தவிர்த்து வந்தால், அது உடல் நலனை பாதிக்கும். அது மட்டுமல்லாமல், முடியின் ஆரோக்கியத்தை முற்றிலுமாக குறைத்து விடும். உண்ணும் உணவில் ஊட்டசத்துக்கள் இல்லையென்றால், அதில் எந்த நன்மையையும் இல்லை. எனவே, டயட் என்ற பெயரில் உங்கள் முடியை கெடுத்து கொள்ளாதீர்கள்.

ஹேர் ட்ரையர் முடி காயவில்லை என்று ட்ரையரை பயன்படுத்தினால், முடியை அவை உடைய செய்து விடும். முக்கியமாக இந்த ட்ரையர்கள் முடியின் அடி வேரையே பாதித்து முடி கொட்ட செய்து விடும். எனவே, முடியில் ட்ரையர் பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள்.

ஈரமான தலையை சீவாதீர்கள்..! பெரும்பாலானோர் முடியின் நலனை கவனித்து கொள்வதே இல்லை. நாம் செய்யும் சில முக்கியமான செயல்களை உணர்ந்து செய்ய வேண்டும். அந்த வகையில், தலைக்கு குளித்தவுடன் தலையை சீவினால் முடியின் முடி விரைவிலே கொட்டி விடும். இதையே தொடர்ந்து செய்தால் முடி அடர்த்தி முற்றிலுமாக குறையும்.

வேதி பொருட்கள் வேண்டாமே..! முடி கொட்டுவதற்கு மற்றுமொரு முதன்மையான காரணி இந்த வேதி பொருட்கள் தான். வேதி பொருட்களை தலைக்கு பயன்படுத்தினால் முடியின் வளர்ச்சியை குறைத்து உதிர செய்து விடும். மேலும், தொடர்ந்து முடி உதிர்ந்தால் வழுக்கையை ஏற்படுத்துமாம்.

இறுக்கமான பின்னலா..? எப்படி நம்மை சுதந்திரமாக இருக்க வைத்து கொள்கிறோமோ அதே போன்றுதான் முடியும். முடியை இறுக்கமாக கட்டினால் அவற்றிற்கு அதிக அழுத்தம் ஏற்படும், பிறகு முடிகளின் வேர்கள் வலுவிழந்து, முடி கொட்ட தொடங்கும். இது குறிப்பாக பெண்களுக்குகே அதிகம் ஏற்பட கூடும்.

அதிக மன அழுத்தமா..? உங்களின் உடல் ஆரோக்கியம் உள்ளத்தின் நலனை பொறுத்தே நிர்ணயிக்க படுகிறது. மனதில் எப்போதும் குழப்பத்துடனும், அதிக மன அழுத்தவுடனும் இருந்தால் அவை முடியின் ஆரோக்கியதையும் பாதிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை ஹார்மோன் உற்பத்தியை பாதித்து முடி உதிரும் பிரச்சினைக்கு வழி வகுக்கும்.

ஹேர் டைகள் முடியில் ஒரு வெள்ளை முடி வந்தாலும் சிலர் அதனை தாங்கி கொள்ள மாட்டார்கள். இது போன்ற நிலையில் முடியிற்கு தேவையற்ற கலர் டைகளை பயன்படுத்தி அவற்றின் தன்மையை நாம் கெடுத்து விடுகின்றோம். எனவே, இயற்கையான பொருட்களான மருதாணி, நெல்லிக்காய், காய்கறிகள் ஆகியவற்றின் மூலம் முடியை கலர் செய்யலாம்.

அதிக மாத்திரைகளா..? உங்களுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிடும் பழக்கம் இருந்தால் அது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு முடியின் நலனையும் கெடுத்து விடும். குறிப்பாக தூக்க மாத்திரை, சாதாரண காய்ச்சலுக்கே அடிக்கடி மாத்திரை சாப்பிடுவோர் இதனால் அதிக பாதிப்பை பெறுவர். இது முடியை அதிகம் கொட்ட செய்யும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

4 1537603840

Related posts

நீண்ட கருமையான கூந்தல்வேண்டுமா?

nathan

கூந்தல்: நரையும் குறையும்

nathan

பொடுகினால் வழுக்கை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கும், ஆயுர்வேத மூலிகை லோஷன்..!

sangika

குளிரில் கொட்டுமா முடி?

nathan

முயன்று பாருங்கள் வறண்ட கூந்தலுக்கு என்ன செய்யலாம்?

nathan

உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

பொடுகை போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்

nathan

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சீன மருத்துவம்!!

nathan

2 வாரத்தில் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க இந்த ஹேர் மாஸ்க்கை போடுங்க…

nathan