25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
7 1537530856
முகப் பராமரிப்பு

முக பருக்கள், கரும்புள்ளிக்கு தீர்வு தரும் பாதாம் ஃபேசியல்…! சூப்பர் டிப்ஸ்..

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. நாம் உண்ணும் உணவு முதல் பயன்படுத்தும் சிறு துரும்பு வரை எல்லாமே பல்வேறு வகையில் நமக்கு உதவ கூடியவை. அந்த வகையில் பாதாமின் அற்புத தன்மையை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் ஆரோக்கியத்திற்கு பாதாம் எந்த அளவிற்கு உதவுகிறதோ அதே அளவிற்கு இது முகத்தின் அழகை பாதுகாக்கவும் பயன்படுகிறது.

முகத்தில் ஏற்பட கூடிய எண்ணற்ற பிரச்சினைக்கு இந்த பாதாம் நல்ல தீர்வை தருகிறது. இந்த பதிவில் பாதாமை கொண்டு செய்ய படும் சில முக்கிய அழகியல் முறைகளை பற்றி நாம் அறிந்து கொள்வோம்

ஆரோக்கியத்தை கூட்டும் பாதாம்..!

பாதாம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை தர கூடியது. பொதுவாக இதனை நாம் சமையலில் பயன்படுத்துவோம். மிகந்த சுவையை அதிகரிக்க இந்த பாதாம் பயன்படுகிறது. பாதாமில் பல வகையான ஊட்டசத்துக்கள் உள்ளன. இவை உடலுக்கு பலத்தை அதிகம் கூட்டும்

நலன் கொண்ட பாதாம்..!

இதய ஆரோக்கியம் முதல் உடல் எடை குறப்பு வரை பாதம் உதவுகிறது. இத்தகைய நலம் கொண்ட பாதாமில் உள்ள ஊட்டசத்துக்கள் இதோ…

கலோரிகள்

நார்சத்து

புரசத்து

வைட்டமின் ஈ

வைட்டமின் எ

சோடியம்

மெக்னீசியம்

வைட்டமின் சி

முகத்தில் எண்ணெய் பசை அதிகமாகி கொண்டே போனால், அது முக பருக்களை உருவாக்கி விடும். இந்த பருக்கள் முகத்தின் முழு அழகையும் கெடுத்து விட கூடியது. இதனை நீக்க இந்த பாதாம் ஃபேசியல் போதும்.

தேவையானவை :-

முல்தானி மட்டி 1 டீஸ்பூன்

பாதாம் பவ்டர் 1 டீஸ்பூன்

ரோஸ் நீர்

செய்முறை :- முதலில் பாதாமை காய வைத்து கொண்டு அவற்றை பொடி ஆக்கி கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் முல்தானி மட்டி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த இரு பொடிகளுடன் சிறிது ரோஸ் நீர் சேர்த்து முகத்தில் பூசவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் எண்ணெய் பசை கொண்ட சருமம் மாறி, பருக்கள் மறைந்து போகும்.

உடனடி அழகிற்கு சிலருக்கு எந்த வகையான கிரீம்கள் பயன்படுத்தினாலும் முகம் அழகு பெறவே செய்யாது. முகம் மிகவும் பொலிவுடன் மிக விரைவில் ஆக வேண்டும் என்றால் அதற்கு இந்த ஃபேசியல் குறிப்பு உதவும்.

தேவையானவை :- பாதாம் பொடி 1 ஸ்பூன் மஞ்சள் 1/4 ஸ்பூன் கடலை மாவு 2 ஸ்பூன்

செய்முறை :- முக அழகை மேற்படுத்த இந்த அழகியல் முறை உதவும். முதலில் கடலை மாவு மற்றும் பாதம் பொடியை ஒன்றாக சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றுடன் நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இப்போது சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை நீரில் கழுவினால் முகம் உடனடி பொலிவு பெறும்

அதிக வெண்மைக்கு முகத்தை வெண்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு இருக்கும். இதற்காக எண்ணற்ற வேதி பொருட்களை பயன்படுத்தி களைத்து விட்டீர்களா..? இனி கவலை வேண்டாம். இந்த குறிப்பு உங்கள் முகத்தை வெண்மையாக மாற்றும்.

தேவையானவை :- பாதாம் பொடி 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் பச்ச பால் 2 ஸ்பூன்

செய்முறை :- முதலில் பாதாம் பொடியை பாலுடன் நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இந்த கலவையுடன் தேன் சேர்த்து கொள்ளவும். பிறகு இவற்றை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாகும். அத்துடன், பொலிவான அழகையும் பெறுவீர்கள்.

பளிச்சென்ற சருமத்தை பெற உங்கள் முகம் அபிழேசென்று இருக்க ஒரு சிறந்த வழி உள்ளது. பாதாம் பொடியை யோகோர்ட்டுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் பொலிவு பெறும். அத்துடன் முகத்தில் உள்ள சொரசொரப்புகள் நீக்கி அழகிய சருமத்தை இந்த ஃபேசியல் தரும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி மற்றும் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

7 1537530856

Related posts

தக்காளி மாதிரி தகதகனு மின்னணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் மாஸ்க்குகளை யூஸ் பண்ணுங்க!

nathan

சில அழகு டிப்ஸ் !! அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு..

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பருக்களை வந்த இடம் தெரியாமல் விரட்டும் இயற்கை வைத்தியம்…!

nathan

உங்களுக்கு பைசா செலவில்லாம உடனே வெள்ளையாகணுமா? அப்ப இத படிங்க!

nathan

எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு பேர்ல் ஃபேஷியல்

nathan

beauty tips.. கரும்புள்ளி பிரச்சனையிலிருந்து நமது மூக்கை பாதுகாப்பது எப்படி?

nathan

வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா? இதோ டிப்ஸ்

nathan

ஜொலிக்கும் சருமத்தை பெற கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் உங்களுக்கு எவ்வாறு உதவும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

முல்தானி மெட்டியால் கிடைக்கும் அழகு நன்மைகள்

nathan