28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
pimple free skin 03 1480755239 26 1482743906
முகப் பராமரிப்பு

உங்களுக்கு இந்த பரு போகணுமா? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

பருக்கள் தான் முகழகை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது வெளிப்படையாக தெரிவதோடு வலி மிகுந்ததாகவும் உள்ளது. மேலும் இதன் தழும்பும் போகாமல் அப்படியே முகத்தில் தங்கி விடுவதால் பார்ப்பதற்கு அசிங்கமாக காட்டுகிறது.

இந்த பருக்கள் வரக் காரணம் நமது சருமத்தில் உள்ள அழுக்கடைந்த எண்ணெய் பிசுக்கும் இறந்த செல்களுமே காரணமாகும். இப்படி ஏராளமான தொந்தரவுகளை தரும் பருக்களை நாம் தினசரி சமையலில் பயன்படுத்தும் நல்லெண்ணெய் கொண்டே போக்கலாம்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்யில் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இது சருமத்தில் வரும் பருக்களை போக்குகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் இதில் விட்டமின் ஈ, டி மற்றும் பி போன்ற பொருட்களும் உள்ளன. இது பருக்கள் தீவிரமாகுவதை குறைத்து தழும்புகள் மறைய உதவுகிறது. மேலும் இதன் ஈரத்தன்மை சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பட்டு போல் ஆக்குகிறது.

நல்லெண்ணெய் ஸ்க்ரப்

இந்த முறை உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை புதுப்பிக்கிறது.

தேவையான பொருட்கள் நல்லெண்ணெய் காட்டன் பஞ்சு

பயன்படுத்தும் முறை முதலில் உங்கள் முகத்தை நீராவியில் காட்டி கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் சரும துளைகள் நன்றாக திறந்து விடும். ஒரு காட்டன் பஞ்சில் நல்லெண்ணெய்யை நனைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருங்கள். பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விட்டு நன்றாக துடைத்து கொள்ளுங்கள்.

ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் நல்லெண்ணெய்

ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் சருமத்தில் ஏற்படும் அழற்சியை போக்குகிறது.

தேவையான பொருட்கள் 4 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகர் 5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

பயன்படுத்துவது எப்படி முதலில் சமஅளவு தண்ணீருடன் சமஅளவு ஆப்பிள் சிடார் வினிகரை கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது இதனுடன் நல்லெண்ணெய்யை சேர்க்கவும் இதை நன்றாக கலந்து முகத்தில் அப்ளே செய்யுங்கள். 15-20 நிமிடங்கள் காத்திருக்கவும், பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவுங்கள்

மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய்

மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பருக்களை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள் 8 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் 5 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்

பயன்படுத்தும் பொருட்கள்

முதலில் உங்கள் முகத்தை நீராவியில் காட்டி கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் சரும துளைகள் நன்றாக திறந்து விடும். மஞ்சள் மட்டும் நல்லெண்ணெய்யை நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள். இதை முழுவதும் முகத்தில் அப்ளே செய்து விட்டு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பிறகு சாதரண நீரில் கழுவவும்.

அரிசி மாவு மற்றும் நல்லெண்ணெய் அரிசி மாவில் விட்டமின்கள், தாதுக்கள் போன்றவை உள்ளன. இது முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி பருக்கள் வருவதை தடுக்கிறது. மேலும் அரிசிமாவு சருமத்தின் மெலானின் உற்பத்தியை சரி செய்கிறது.

தேவையான பொருட்கள் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சில துளிகள் நல்லெண்ணெய் பயன்படுத்தும் முறை அரிசி மாவு மற்றும் நல்லெண்ணெய்யை நன்றாக கலந்து குழைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்கவும் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடுங்கள்

சர்க்கரை, யூக்கலிப்டஸ் ஆயில் மற்றும் நல்லெண்ணெய்

ப்ரவுன் சுகர் ஒரு ஸ்க்ரப் மாதிரி செயல்பட்டு முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. யூகாப்லிப்டஸ் ஆயில் சருமத்தில் ஏற்படும் அழற்சி யை போக்குகிறது.

தேவையான பொருட்கள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் 8-10 சொட்டுகள் யூகாப்லிப்டஸ் ஆயில் 2 டேபிள் ஸ்பூன் சுகர்

பயன்படுத்தும் முறை மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாக ஒரு பெளலில் கலந்து கொள்ளவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

பிறகு சாதாரண நீரில் முகத்தில் கழுவி துடைத்து விடுங்கள். சீக்கிரம் பருக்கள் நீங்கி மாசுமருவற்ற முகத்தை பெறலாம்.

pimple free skin 03 1480755239

Related posts

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan

உங்களுக்கு எண்ணெய் வழியும் இமைகளா? அதை சீராக்க உதவும் 6 குறிப்புகள்!

nathan

சூப்பர் டிப்ஸ்! ‘பளிச்’ முகத்துகு பலவித மாஸ்க்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கரும்புள்ளிகளை நீக்க சில சிம்பிளான வழிகள்!!!

nathan

வில் போல புருவம் வேணுமா? இதை ட்ரை பண்ணுங்களேன்.!ஈஸி டிப்ஸ்

nathan

ஹீரோயின் மாதிரி அழகாக ஜொலிக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சரும கருமையைப் போக்க வேண்டுமா? அப்ப சோள மாவு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

சரும பொலிவையும் மெருகேற்ற வாழைப்பழ தோல்

nathan

டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய

sangika