26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
76p1 1535794377
முகப் பராமரிப்பு

இதோ உங்க பளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்!

பார்ப்பதற்கு அழகாக, என்றும் இளமையுடன் ‘பளிச்’சென்று இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோர் ஆசைப்படும் ஒரே விஷயம். வயதாவதைப் பளிச்சென்று உணர்த்தும் முதல் விஷயம் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள். அப்படி முகம் சுருக்கமின்றி பளபளப்பாக, மழுமழுவென்று காணப்பட வேண்டுமானால், தகுந்த ‘ஹெர்பல் மாஸ்க்’குகளை ரெகுலராக உபயோகிக்க வேண்டியது அவசியம்.வீட்டில் சொந்தமாக நாமே தயாரித்துக் கொள்ளக்கூடிய

சில வகை ஹெர்பல் மாஸ்க்குகளை சொல்கிறேன்.

76p1 1535794377

எண்ணெய்ப் பசையுள்ள சருமத்துக்கு…
* முட்டையின் வெள்ளைக் கரு, சில சொட்டுகள் தேன் மற்றும் எலுமிச்சைச்சாறு, கனிந்த பப்பாளிப் பழத்தின் சதைப்பற்று 2 டேபிள்ஸ்பூன்… இவற்றை மொத்தமாகக் கலந்து பிசைந்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்.
* அரை கப் கெட்டித் தயிரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்தில் பூசுங்கள். அரை மணி நேரத்துக்குப் பிறகு கழுவி விடலாம்.
* உலர்ந்த பட்டாணியை நன்கு கழுவி, ஈரம் போக நிழலில் காயவைத்து, மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை 2 டேபிள்ஸ்பூன் பட்டாணி பவுடரில் சிறிதளவு ரோல் வாட்டர் கலந்து முகத்தில் ‘மாஸ்க்’ போடவும். வறவறவென்று காய்ந்ததும் முகம் கழுவி விடலாம்.
வறண்ட சருமத்துக்கு…
* வறண்ட சருமக்காரர்களுக்கு முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படும். இதைத் தவிர்க்க, வாரம் ஒருமுறை முட்டையின் வெள்ளைக் கருவில் பாலேடு சேர்த்து முகத்தில் பூசி வருவது அவசியம்.
* ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் சில சொட்டுகள் பாதாம் எண்ணெய் மற்றும் தேன் கலந்து நன்கு ‘பீட்’ செய்யுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் கெட்டித் தயிர் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் ‘திக்’காக மாஸ்க் போடவும். கால் மணி நேரத்தில் மாஸ்க் காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் நனைக்கப்பட்ட பஞ்சால் துடையுங்கள்.
* ஒரு டேபிள்ஸ்பூன் முல்தானிமிட்டித் தூளில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன், 15 சொட்டுகள் ஆரஞ்சு ஜூஸ், ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ்வாட்டர் கலந்து முகத்தில் பூசி கால் மணி நேரம் கழித்து முகம் கழுவவும்.
அவரவர் சருமத்துக்குத் தகுந்தாற்போல இந்த ‘மாஸ்க்’குகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் முகம், கண்ணாடி மாதிரி பளபளப்பது நிச்சயம்!

Related posts

பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

nathan

எண்ணெய் வழியிற முகம் மட்டுமே என்று அலட்டிக் கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க.

nathan

அதிக செலவு செய்யாமல் சீக்கிரம் வெள்ளையாகணுமா? இதோ சில வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பருக்களை வந்த இடம் தெரியாமல் விரட்டும் இயற்கை வைத்தியம்…!

nathan

உங்க சருமம் பொலிவு பெற வேண்டுமா? இதை முயன்று பாருங்கள்…

nathan

கறுப்பா இருக்கீங்களா? கவலைபடாதீங்க

nathan

அழகு சிகிச்சைகள் – முக அழகிற்கு குங்குமப்பூ

nathan

முக அழகை கெடுக்கும் கருவளையம்

nathan

கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்…..

nathan