29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1536751025
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா சீழ் நிறைந்த பருக்களைப் போக்கும் சில சூப்பர் டிப்ஸ்!

பரு பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சிலருக்கு பருக்கள் கோடைக்காலத்தில் தான் அதிகமாக வரும். ஆனால் இன்னும் சிலருக்கு எந்த காலமாக இருந்தாலும் பருக்கள் வரும். பருக்களில் சீழ் நிறைந்த பருக்கள் கடுமையான வலிமிக்கதாக இருக்கும். ஒருவருக்கு சீழ் நிறைந்த பருக்கள் முகத்தில் மட்டுமின்றி, கழுத்து, அக்குள், அந்தரங்க பகுதி போன்ற பகுதிகளிலும் வரும்.

சீழ் நிறைந்த பருக்கள் வந்துவிட்டால், சிலர் கைவிரலால் அதை தொட்டு பிய்த்து எறிந்துவிடுவார்கள். இப்படி செய்தால், பருக்கள் ஓரிடத்தில் இருந்து பரவ ஆரம்பித்து, பின் முகம் முழுவதும் பரவி, முகத்தின் அழகையே பாழாக்கிவிடும். சிலர் சீழ் நிறைந்த பருக்களைப் போக்க க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். க்ரீம்களில் கெமிக்கல் இருப்பதால், அவை சரும செல்களைப் பாதித்து பக்கவிளைவுகளை உண்டாக்க நேரிடும்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை சீழ் நிறைந்த பருக்களைப் போக்க உதவும் சில எளிய ஆயுர்வேத சிகிச்சைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி, வலிமிக்க மற்றும் அசிங்கமான சீழ் நிறைந்த பருக்களைப் போக்குங்கள்.

மஞ்சள்
அனைவரது வீட்டிலும் பொதுவாக காணப்படும் மருத்துவ குணம் வாய்ந்த பொருள் தான் மஞ்சள். இதில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிரம்பியிருப்பதால், இது சீழ் நிறைந்த பருக்களைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 4 டீஸ்பூன் மஞ்சள் தூளை லேசாக வறுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பருக்களின் மீது தடவி, நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி 4-5 மணிநேரத்திற்கு ஒருமுறை தடவி வந்தால், 3-4 நாட்களுக்குள் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்துவிடும்.

சீரகம்

வீட்டுச் சமையலறையில் உள்ள மற்றொரு பொதுவான பொருள் தான் சீரகம். அதற்கு 4 டீஸ்பூன் சீரகப் பொடியை லேசாக வறுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவுங்கள். இப்படி 4-5 மணிநேரத்திற்கு ஒருமுறை இந்த பேஸ்ட்டைத் தடவினால், பருக்களினுள் உள்ள சீழ் விரைவில் வெளியேறி, சீக்கிரம் சரியாகிவிடும்.

மஞ்சள் நீர்

சீழ் நிறைந்த பருக்கள் வராமல் இருக்க வேண்டுமானால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பருக வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால், சீழ் நிறைந்த பருக்கள் சீக்கிரம் குணமாவதோடு, இனிமேல் வராமலும் இருக்கும்.

பூண்டு 2 பல் பூண்டை பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், நீங்கள் நினைப்பதை விட மிகவும் வேகமாக பருக்கள் மறையும். அதேப் போல், உணவிலும் பூண்டுகளை சேர்த்து வருவதன் மூலமும் சீழ் நிறைந்த பருக்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளதால், இது பல சரும பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும்

வெங்காயம் உலகில் உள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள ஒரு காய்கறி தான் வெங்காயம். இந்த வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவினால், பூண்டுகளைப் போன்றே வெங்காயமும் பருக்களை விரைவில் காணாமல் போகச் செய்யும்.

விளக்கெண்ணெய் விளக்கெண்ணெயும் சீழ் நிறைந்த பருக்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். 5-8 துளிகள் விளக்கெண்ணெயை காட்டன் உதவியுடன் பருக்களின் மீது வைத்து, பேண்டேஜ் கொண்டு அந்த பகுதியில் இறுக்கமாக ஒட்டி விட வேண்டும். இதனால் சீழ் நிறைந்த பருக்கள் பலவீனமாகி, சீழ் முழுமையாக வெளியே வந்துவிடும். முக்கியமாக தினமும் தவறாமல் இச்செயலை செய்தால் 2-3 நாட்களில் பருக்கள் சரியாகிவிடும்.

டீ-ட்ரீ ஆயில் டீ-ட்ரீ ஆயில் அனைத்து வகையான சரும நோய்கள், அரிப்புகள் மற்றும் எரிச்சல்களை சரிசெய்ய வல்லது. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், தினமும் குளித்து முடித்த பின், 1-2 துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவ வேண்டும். இப்படி பருக்கள் முழுமையாக மறையும் வரை செய்யுங்கள்.

வெற்றிலை இரண்டு வெற்றிலையை சிறு துண்டுகளாக வெட்டி, 1/2 கப் நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இப்படி 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின், அந்த இலையை அரைத்து பேஸ்ட் செய்திடுங்கள். அதன் பின் அதை பருக்களின் மீது தடவி தடவி, துணி கொண்டு கட்டிவிடுங்கள். இப்படி வாரத்திற்கு குறைந்தது 2 முறை செய்யுங்கள்.

வேப்பிலை 20-25 வேப்பிலையை நீரில் போட்டு நீர் வற்றும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்த பின், அதை அரைத்து பேஸ்ட் செய்து, சீழ் நிறைந்த பருக்களின் மீது தடவி, ஒரு துணியால் அவ்விடத்தைக் கட்டிவிடுங்கள். இப்படி தினமும் 2-3 முறை செய்து வந்தால், ஒரே வாரத்தில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

பாகற்காய் பாகற்காய் கசப்பாக இருந்தாலும், அதில் நன்மைகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. அதற்கு பாகற்காயை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை குடிக்கப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த சாற்றினை பருக்களின் மீது வைத்து வந்தால், பருக்கள் சீக்கிரம் குணமாகிவிடும். ஆனால் பாகற்காய் சாற்றினை சீழ் நிறைந்த பருக்கள் இருக்கும் போது 1/4 டம்ளர் குடித்து வந்தால், பருக்கள் சரியாவதோடு, இனிமேல் வராமலும் இருக்கும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள சிகிச்சை அனைத்தும், சீழ் நிறைந்த பருக்களை காணாமல் போகச் செய்வதோடு, வடுக்கள் தெரியாமல் மாயமாய் மறையச் செய்யும்.

1536751025

Related posts

உங்களுக்கு அழகான கண்கள் வேண்டுமா??

nathan

இதோ எளிய நிவாரணம்! முகப்பரு பிரச்சனைக்கு ‘டாடா’ சொல்லணுமா? அப்ப வாரத்துக்கு 2 தடவை இத செய்யுங்க…

nathan

வேனிட்டி பாக்ஸ்: சிவப்பழகு

nathan

முகத்துக்கு ஆவி பிடிக்கும் முறை..

nathan

எப்பவும் அழகா இருக்க

nathan

அழகு குறிப்புகள் tamil beauty tips

nathan

இதோ எளிய நிவாரணம்! முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்!

nathan

முகம் உடனடியாக ஜொலிக்க இந்த 5 வழிகளை யூஸ் பண்ணுங்க !!

nathan

உங்க முகத்தை என்றும் இளமையாக வைத்து பட்டுப்போல மாற்றும் ஆளி விதை…! சூப்பர் டிப்ஸ்

nathan