25.7 C
Chennai
Thursday, Jan 16, 2025
6737480
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா சீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க அரிசி கழுவின தண்ணி தான் காரணமாம்.

சீனப் பெண்களின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்போ முதல்ல இதப் படிங்க

அழகு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சீனப் பெண்கள் தான். அவர்களின் மாசு மருவற்ற முகமும், சரியான தோல் நிறமும் அவர்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. அவர்கள் எந்த அழகு சாதனப் பொருட்களும் அணியாமலே அழகாக காட்சி அளிக்கக் கூடியவர்கள். வயதான பெண்களிலிருந்து இளமைப் பெண்கள் வரை ஓரே மாதிரியான சரும நிறத்தை பெற்றிருப்பார்கள்.

அவர்களுக்கு சீக்கிரம் வயது எட்டுவதும் கிடையாது. சீனப் பெண்கள் அழகாக இருக்க காரணமான பண்டைய சீன அழகு ரகசியத்தை கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சீன அழகு முறைகள் நமக்கு உறுதியளிக்கும் மிகச் சிறந்த முறையாகும். உங்களுக்கும் சீனப் பெண்கள் போன்ற அழகு வேண்டுமா? சரி வாங்க பார்க்கலாம்.

மினுமினுப்பான சருமத்திற்கு அரிசி தண்ணீர் சீனப் பெண்களின் அழகில் அரிசி தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசி தண்ணீர் நம் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமையை போக்கி சரும நிறத்தை மேம்படுத்துகிறது. மேலும் சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கவும் உதவுகிறது. அரிசி தண்ணீர் சரும சுருக்கங்கள் மற்றும் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது.

பயன்படுத்தும் முறை அரிசியை கொஞ்சம் நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அந்த தண்ணீர் அப்படியே பால் மாதிரி மாறும் வரை ஊற வைக்கவும். இப்பொழுது இந்த தண்ணீரில் பஞ்சியை நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளே செய்யுங்கள். அப்புறம் மீதமுள்ள தண்ணீரை பிரிட்ஜில் வைத்து பிறகு கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

 முகப்பருக்களை களையும் பாசிப்பயறு மாஸ்க் சீனப் பெண்கள் ரெம்ப காலமாக தங்கள் முகத்திற்கு பாசிப்பயிறு மாஸ்க் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மாஸ்க் நூற்றாண்டு காலமாக சீனப் பெண்களின் பியூட்டி பராமரிப்பில் சிறந்து விளங்குகிறது. முகப்பருக்களை போக்கு வதில் இந்த பாசிப்பயிறு மாஸ்க்

பயன்படுத்தும் முறை இந்த மாஸ்க்கை தயாரிப்பது என்பது மிகவும் எளிது. சிறுதளவு பாசிப்பயிரை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை அப்படியே முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளே செய்யுங்கள். இதை அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அது பருக்களை போக்கி நல்ல பொலிவான சருமத்தை தருகிறது.

வயதாகுவதை தடுக்கும் க்ரீன் டீ உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க மூலிகைகளும் சிறந்த பங்காற்றுகிறது. சீனப் பெண்கள் அதிகளவு க்ரீன் டீ எடுத்து கொள்வார்கள். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை நம் சரும ஆரோக்கியத்தை காக்கிறது. அதுமட்டுமல்லாமல் க்ரீன் டீ சருமம் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் உடலின் மெட்டா பாலிசம் வேகத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

பாடி மசாஜ் சீன பெண்களின் சருமழகை மெறுகேற்றுவதில் மசாஜ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முகத்திற்கும் உடம்பிற்கும் இது நல்ல இரத்த ஓட்டத்தை கொடுக்கிறது. இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து முகம் சிக்கென்று காணப்படும். உடம்பு முழுவதும் மசாஜ் செய்யும் போது ஒட்டுமொத்த மெட்டா பாலிசமும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.

சரும நிறமேற்ற புதினா புதினா இலை முகத்தின் அழகை மெருகேற்றும் ஒரு மேஜிக் பொருளாகும். இந்த புதினா உங்கள் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது.

பயன்படுத்தும் முறை புதினா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் மற்றும் கழுத்தில் அப்ளே செய்யுங்கள். இந்த ரெசிபியை கோடை காலம் செய்து வந்தால் நல்ல குளிர் நிலையை பெறுவீர்கள்.

சுருக்கங்களை போக்க மஞ்சள் சீனப் பெண்கள் முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்துகின்றனர். மஞ்சளை அவர்கள் பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தி வருவதால் சுருக்கங்கள் இல்லாத முகத்தை பெற முடியும். சருமத்தில் உள்ள நிறத்திட்டுகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த மருந்தாகும்.

மென்மையான சருமத்திற்கு முட்டை மாஸ்க் சீனப் பெண்களின் அழகான சதைப்பற்றுள்ள மென்மையான முகத்திற்கு காரணம் அவர்கள் முட்டை மாஸ்க் பயன்படுத்துகின்றனர். முட்டையின் வெள்ளை கருவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மாஸ்க் பொலிவான மென்மையான முகத்தை தருகிறது. இதற்கு காரணம் வெள்ளை கருவில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் என்ற பொருள் உங்களுக்கு சிக்கென்ற முகழகை கொடுக்கிறது.

சரும பராமரிப்பு டிப்ஸ்கள் நீங்கள் எந்த ஒரு பொருளையும் முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னாடி பேஜ் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் எதாவது அழற்சி ஏற்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். முகத்திற்கு அடிக்கடி மசாஜ், இயற்கை பேசியல் செய்யுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் சருமத்திற்கு மிகவு‌ம் முக்கியம். மஸ்ரூம், சோயா பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள். பொலிவான சருமம் பெற நச்சுக்களை வெளியேற்றும் ஜூஸ் வகைகளை பருகலாம். உடற்பயிற்சி மேற்கொண்டு உடம்பை கச்சிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.

என்னங்க ஏன் சீனப் பெண்கள் அழகாக இருப்பதற்கான ரகசியம் தெரிஞ்சதா? நாமும் இதைப் பின்பற்றினால் ஆரோக்கியமான அழகை பெறலாம். நீண்ட காலம் இளமையுடன் ஜொலிக்கலாம்.

6737480

Related posts

சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க காரட்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

முகத்தில் வரும் சீழ் நிறைந்த முகப்பருக்களை போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

nathan

கன்னம் மட்டுமாவது கொழுகொழுவென இருக்க

nathan

அடர்த்தியான புருவத்தை தரும் கற்றாழை சீரம்!!

nathan

உங்களுக்கு தெரியுமா சரும சுருக்கத்தை தடுக்கும் கேரட் பீட்ரூட் ஜூஸ்

nathan

லிப்ஸ்டிக் போடுவது எப்படி? – உங்களுக்கும் தெரியாத சில குறிப்புகள்

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் சர்க்கரை

nathan

சோர்வுற்ற கண்களைப் புதுப்பிக்க எண்ணெய்

nathan

முகத்தை வெள்ளையாக்க விரும்புவோர் செய்யும் தவறுகள்.!

nathan