23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 111
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா இயற்கையான முறையின் மூலம் கண் கருவளையத்தை போக்க!

கண் கருவளையத்திற்கு வயது மிகவும் முக்கியமான காரணமாகும். வயது அதிகமானால் தோலில் தொய்வு ஏற்பட்டு கண் கருவளையம் ஏற்படும். இதனை இயற்கையான முறையின் மூலம் தீர்வு கான முடியும்.

1 111

பாதாம் எண்ணையை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கருவளையம் மறையும். இரவில் பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து பஞ்சில் தொட்டு கண்ணனுக்கு அடியில் தடவ வேண்டும்.15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கண் கீழ் கருவளையம் மறைந்து நல்ல பலனைப் பெறலாம்.

 

ஒரு ஸ்பூன் தக்காளி சாருடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து கருவளையத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

சோற்றுகற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.

 

சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும். வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.

டீ பேக்கை ஒரு டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்த பின் அதை வைத்து கண்ணின் கருவளையத்திற்கு ஒத்தடம் கொடுத்து வந்தால் நாளடைவில் கருவளையம் மறைய தொடங்கும்.

2 50

பொதுவாகவே முகத்திற்கு திராட்சை விதை எண்ணெய் மிகவும் நல்லது. கண்ணுக்கு அடியில் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கருவளையம் மறையும்.

பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும். தேனை கண்ணுக்கு கீழ் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் கருவளையம் மறையும்.

Related posts

பருக்களைப் போக்கும் பார்லர் மற்றும் வீட்டு சிகிச்சைகள்

nathan

வாயைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருமையைப் போக்கும் வழிகள்! சூப்பர் டிப்ஸ்……

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

nathan

‘பளீச்’ஜொலிப்புக்கு வீட்டிலேயே தீர்வு

nathan

வெறும் 1 மணிநேரத்தில் நிரந்தரமான அழகான புருவம் வேண்டுமா? அழகை மேம்படுத்தலாம்

nathan

கேரட் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்

nathan

கண்களில் கருவளையம் மறைய…

nathan

இந்த ஹெர்பல் ஆவி பிடிப்பதால் என்ன பயன் தெரியுமா?

nathan

லெமன் டீயில் முகம் கழுவினால் நடக்கும் மேஜிக் என்னவென்று தெரியுமா?

nathan