30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
oils for hair growth cover
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்துவது?

ஆலிவ் ஆயில் மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களுள் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். இந்த எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். முக்கியமாக ஆலிவ் ஆயில் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்தால், முடி நன்கு வலிமையாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர ஆரம்பிக்கும். இந்த மாய்ஸ்சுரைசிங் ஆயில் முடிக்கான நல்ல கண்டிஷனர் போன்றும் பயன்படும் என்பது தெரியுமா?

மேலும் ஒருவரது வயது அதிகரிக்கும் போது, தலைமுடி மெதுவாக பலவீனமாக ஆரம்பித்து, அதன் விளைவாக தலைமுடி உதிரும் மற்றும் நரைக்க ஆரம்பிக்கும். தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மரபணுக்கள், மாசுக்கள், அதிகப்படியான தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஹேர் கலர் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஒருவர் சந்திக்கும் தலைமுடி உதிர்தல் பிரச்சனையை ஆலிவ் ஆயில் கொண்டு தடுக்கலாம்.

கீழே தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பின்பற்றினால், நிச்சயம் தலைமுடி நன்கு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும். மேலும் கீழே ஆலிவ் ஆயிலை தலைக்கு பயன்படுத்தினால் கிடைக்கும் இதர நன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

நன்மை #1 பொடுகுத் தொல்லை பிரச்சனையில் இருந்து ஆலிவ் ஆயில் நிவாரணம் அளிக்கும். அதுவும் ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் தலையை நீரால் நனைத்து, அதன் பின் தயாரித்து வைத்துள்ளதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை என ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் செய்து வந்தால், பொடுகை முற்றிலும் போக்கலாம்.

நன்மை #2 குளிர்காலத்தில் தலைமுடியில் வெடிப்புக்கள், வறட்சி என்று முடியே அசிங்கமாக சிக்குடன் காணப்படும். இந்த காலத்தில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால், முடி மென்மையாகவும், வெடிப்புகளின்றியும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு தினமும் ஆலிவ் ஆயிலை தலைமுடியின் முனை வரை நன்கு படும்படி மசாஜ் செய்ய வேண்டும்.

நன்மை #3 ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே இந்த எண்ணெய் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்தால், முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, தலைமுடியும் நன்கு வலிமையடையும்.

நன்மை #4 சுருட்டை முடி உள்ளவர்களது தலைமுடி மென்மையின்றி கரடுமுரடாக இருக்கும். இந்த காரணத்தினாலேயே, சுருட்டை முடி உள்ளவர்களுக்கு தங்களது தலைமுடி பிடிக்காது. ஆனால் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி வந்தால், முடி நன்கு மென்மையாகி பட்டுப் போன்று இருக்கும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது எப்படி?

* ஒரு பௌலில் 20-30 மிலி ஆலிவ் ஆயிலுடன், 10 மிலி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த எண்ணெய் கலவையை வெதுவெதுப்பாக சூடேற்றி, விரலால் ஸ்கால்ப்பில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தலை முழுவதும் இந்த எண்ணெய் கலவையைத் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

* பின்பு எஞ்சிய எண்ணெயை முடியின் முனை வரை நன்கு தடவ வேண்டும். இச்செயலால் முடி வெடிப்பு மற்றும் முடி உடைதல் போன்றவை தடுக்கப்படும்.

* அடுத்து ஒரு துணியை சுடுநீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியை தலையில் சுற்றி 20 நிமிடம் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த செயல் மூலம் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

* பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 1-2 முறை என 2 மாதம் தொடர்ந்து பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

குறிப்பு * கோடைக்காலத்தில் இந்த செயலை பின்பற்றுவதாக இருந்தால், எண்ணெயை தலைக்கு தடவிய பின், ஷவர் கேப்பை தலையில் அணிந்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலசினாலே போதும்

* தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக பாதாம், கடல் உணவு மற்றும் தயிர் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம் தலைமுடி ஆரோக்கியமாக வளர்ச்சி அடையும்.oils for hair growth cover

 

Related posts

தலைமுடி வளர சில மருத்துவக்குறிப்புகள்

nathan

பொடுகு பிரச்சனை ஏன் ஏற்படுகிறது

nathan

அவசியம் படிக்க.. உங்க முடி உங்களை பற்றி சொல்கின்ற சுவாரசிய தகவல்கள் பற்றி தெரியுமா…?

nathan

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களுக்கு வழுக்கை ஏற்படாமல் இருக்க தயிரை இப்படி பயன்படுத்தினாலே போதும்..!

nathan

கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள!….

nathan

முடி உ‌திர‌க் காரண‌ம் எ‌ன்ன ?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களது கருமையான கேசம் பழுப்பு நிறமாக மாறுகிறதா?

nathan

ஒரே இரவில் மென்மையான தலைமுடியைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க…

nathan