24.1 C
Chennai
Tuesday, Feb 18, 2025
raw banana pepper roast SECVPF.gif
இலங்கை சமையல்

சுவையான வாழைக்காய் மிளகு வறுவல்,

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் – 1
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கடுகு – 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு…

தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1/2 இன்ச்
பூண்டு – 5
மிளகு – 3 டீஸ்பூன்

செய்முறை :

* வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, வேண்டிய வடிவில் வெட்டி கொள்ளவும்.

* வெட்டிய வாழைக்காயை பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

* வேக வைத்த வாழைக்காயை ஒரு பௌலில் போட்டு, அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்த பின், ஊற வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

* பின் அதில் லேசாக தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வாழைக்காயை வேக வைத்து இறக்கினால், வாழைக்காய் மிளகு வறுவல் ரெடி!!!raw banana pepper roast SECVPF.gif

Related posts

பலகார வகைகளில் காராபூந்தி செய்ய…!

nathan

கர்நாடகா ஸ்பெஷல் முறுக்கு

nathan

முட்டைப் பொரியல்,TMIL SAMAYAL

nathan

ஸ்பெஷல் பிரியாணி!!

nathan

எள்ளுப்பாகு

nathan

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan

யாழ்ப்பாணத்து மீன் குழம்பு

nathan

எங்கள் பாட்டி வைக்கும் சிக்கன் கொழம்பு

nathan

பிரெட் ஜாமூன்

nathan