உலகில் மரங்கள் இல்லை என்றால் எந்த ஒரு உயிரினம் வாழ்வதும், மிக கடினமான விஷயமாகும். எல்லா உயிர்களை போன்றுதான் மரங்களும் இந்த பூமியில் உயிர்ப்பித்து வருகின்றது. ஒரு மரத்தை எடுத்து கொண்டால் அதில் பல வகையான நன்மைகள் இருக்கும்.
உதாரணத்துக்கு, வாழை மரத்தை எடுத்து கொண்டால் அவற்றின் இலை, தண்டு, பழம், பூ, காய் இப்படி பல நன்மைகள் இது நமக்கு தருகின்றது. இதே போன்றுதான் பெரும்பாலான மரங்கள் இந்த பூமியில் உள்ளன.
அந்த வகையில் ஆலமரமும் சில முக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கின்றது. இந்த பதிவில் ஆலமரம் எவ்வாறு முடியின் ஆரோக்கியத்திற்கும், முகத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது என்பதை முழுமையாக அறிந்து கொள்வோம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திகிலூட்டும் ஆலமரம் ..!
நம் எல்லோர் ஊரிலும் ஒரு ஆலமரத்திற்கு மிக பெரிய கட்டுக்கதை இருக்கத்தான் செய்யும். ஆலமரம் என்றாலே அது சற்றே திடுக்கிடும் வகையில் மிக பெரிய உருவத்தை கொண்டதாக இருக்கும். இதை தவிர்த்து பார்த்தால் ஆலமரத்திற்குள் பல நன்மைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது. எண்ணற்ற மருத்துவ பயன்களும் அற்புத அழகு குறிப்புகளும் இதில் நிறைந்திருக்கிறது.
ஊட்டசத்துக்கள் கூட இருக்கிறதே..!
ஆலமரத்தில் உள்ள பழம், இலை, விழுது என அனைத்தும் மனிதனுக்கு நலம் தருகிறது. 100 g அளவிலுள்ள ஆலம்பழத்தில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.
கலோரிகள் 250 kcal
புரதசத்து 3.30 g
வைட்டமின் சி 1.2 mg
மெக்னீசியம் 68 mg
கால்சியம் 162 mg
இரும்பு சாது 2.03 mg
பாஸ்பரஸ் 67 mg
பொட்டாசியம் 680 mg
இளமையை காக்கும் ஆலம்…!
பொதுவாக சில முக்கிய பொருட்களிலே இளமையை காக்கும் தன்மை இருக்கும். அந்த வகையில் ஆலம்பழத்தில் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருக்கிறதாம். இதனை சாப்பிட்டு வந்தால் செல்களை புதுப்பித்து சுறுசுறுப்பாக இருக்க வைக்கும். இதனால், முக சருமம் நீண்ட காலம் இளமையாக இருக்கும்.
முடி உதிர்வை தடுக்க…
இந்த ஆலமரத்தில் சில முக்கிய பயன்கள் உள்ளன. இவற்றின் இலைகள் முடி பிரச்சினைக்கு தீர்வு தருகிறது. முடி உதிர்வு இருக்கும் பலருக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். முடி அதிகம் கொட்டி வழுக்கை விழுந்துள்ள அனைவரும் இந்த குறிப்பை செய்து பாருங்கள்.
தேவையானவை :-
20-25 gm ஆல இலைகள்
100 ml ஆளி விதை எண்ணெய்
செய்முறை :-
உலர்ந்த அல்லது இளைய ஆல இலைகளை எடுத்து நன்கு அரைத்து கொண்டு, அவற்றுடன் ஆளி விதை எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி மசாஜ் செய்யவும். பின் தலையை வெதுவெதுப்பான நீரில் அலசவும். அல்லது ஆளி விதை எண்ணெய்யில் ஆல இலைகளை போட்டு, இந்த ஊறிய எண்ணெய்யை தலைக்கு தடவி வரலாம். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்வு நின்று வழுக்கை பிரச்சினை தீரும்.
அடர்த்தியான முடி வளர…
முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்ற விருப்பம் நம்மில் பலருக்கு இருக்கின்ற சாதாரண ஒரு ஆசையாகும். பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே இப்போதெல்லாம் முடியின் மீது அதீத அக்கறை வந்துள்ளது. இது நன்மைக்கே. முடி அடர்த்தியாக வளர இந்த குறிப்பு உதவும்.
தேவையானவை :-
தளிர் ஆலமர இலைகள் 10
கடுகு எண்ணெய் 3 டீஸ்பூன்
செய்முறை :-
முதலில் தளிரான ஆல இலைகளை எடுத்து கொண்டு நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின், கடுகு எண்ணெய்யை கடாயில் ஊற்றி அதில் இந்த அரைத்த ஆல இலையை இட்டு 10 நிமிடம் மிதமான சூட்டில் சூடு காட்டி, பின் அவற்றை ஆற வைக்கவும். இந்த எண்ணெய்யை தலைக்கு தடவி குளித்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும். அத்துடன் முடி பிரச்சினைகளும் தீர்வு பெரும்.
உடனடி அழகிற்கு…
உங்கள் முகம் உடனடியாக அழகு பெற வேண்டுமென்றால் அதற்கு பல வித வேதி பொருட்களை தேடி செல்வீர்கள். இனி இந்த வேதி பொருட்களை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வையுங்கள். மாறாக இந்த ஆலமரத்து குறிப்பு உங்களுக்கு அருமையாக உதவும்.
தேவையானவை :-
சிவப்பு சந்தனம் 1 டீஸ்பூன்
தளிர் ஆலமர இலைகள் 5
மல்லிகை இலைகள் 3
செய்முறை :-
முதலில் மல்லிகை இலை மற்றும் ஆல இலைகளை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் சிவப்பு சந்தனத்தையும் சேர்க்கவும். தேவையென்றால் சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம். இந்த பேஸ்டை முகத்தில் பூசி 20 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்து நீரில் கழுவினால், முகம் வெண்மையாக மின்னும்.
ஈரப்பதமான முகத்தை பெற…
பலருக்கு முகம் மிகவும் வறண்டு காணப்படும். இது முகத்தின் முழு அழகையும் கெடுத்து விடும். இதனை குணப்படுத்த ஆலம்பழங்கள் போதுமே. இவற்றில் உள்ள மூல பொருட்கள் முக சருமத்தை அழகு பெற செய்யும்.
தேவையானவை : –
ஆலம்பழம் 5
ரோஸ் நீர்
செய்முறை :-
நன்கு பழுத்த ஆலம்பழத்தை அரைத்து கொண்டு அவற்றுடன் ரோஸ் நீர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும். இந்த பேஸ்டை முகத்தில் பூசி மசாஜ் செய்தால் வறண்ட சருமம் ஈரப்பதமாகும். அத்துடன் முகத்தில் ஏற்பட்டுள்ள புண்கள், அலர்ஜிகளும் குணம் அடையும்.