25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
2 1535367250
தலைமுடி சிகிச்சை

ஆண்களே… உங்கள் முகத்திற்கேற்ற சிறப்பான ஹேர் ஸ்டைல் எதுனு தெரிஞ்சிக்கணுமா..? அப்ப இத படிங்க!

ஆண்களே… உங்கள் முகத்திற்கேற்ற சிறப்பான ஹேர் ஸ்டைல் எதுனு தெரிஞ்சிக்கணுமா..? அப்ப இத படிங்க!ஒருவரின் முக அழகையே முற்றிலுமாக மாற்றிவிட கூடியது இந்த முடிகள். ஒருவருக்கு அதிக முடிகள் இருந்தால் அது பார்க்க மிக அழகாக தெரியும். முடி அதிகமாக இருந்தால் மட்டும் போதுமா..? அதற்கேற்ற பராமரிப்பு மிகவும் இன்றியமையாததாகும். முடியின் ஆரோக்கியம் ஒருவர் எடுத்து கொள்ளும் உணவின் தரத்தை பொருத்தே கூறப்படுகிறது. சாப்பிடும் உணவானது நல்ல ஊட்டசத்துடன் இல்லை என்றால், கட்டாயம் அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். அத்துடன் முடியின் அழகையும் சேர்த்தே கெடுக்கும்

முக அமைப்பை அறிக..!
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான முக அமைப்பு இருக்கத்தான் செய்யும். எந்த ஒரு ஹேர் ஸ்டைலை தேர்வு செய்வதாக இருந்தாலும் முதலில் ஒருவரின் முக அமைப்பு என்ன என்பதை நன்கு உறுதி செய்து கொள்ள வேண்டும். முக அமைப்பை பொருத்தே எந்த வித முக அலங்காரமாக இருந்தாலும் செய்ய முடியும். இதில் முக்கியமாக சில வகைகள் உள்ளன.

முட்டை வடிவம் – சதுர வடிவம் – வட்ட வடிவம் – இதய வடிவம் – செவ்வக வடிவம் – வைர வடிவம் – முக்கோண வடிவம்38 1

முட்டை வடிவம் :- பொதுவாக முட்டை வடிவ முகம் கொண்டவர்களுக்கு ஒரு சில வகையான ஹேர் ஸ்டைல்ஸ் நன்கு பொருந்தும். இவர்களின் முகமானது முட்டை வடிவத்தில் நீண்ட தாடை கொண்டவராக இருப்பார்கள். மேலும், கன்னமும் புசு புசுவென்று காணப்படும். இவர்களுக்கு, தலையின் முன் பகுதியில் அதிக முடி இருப்பது போன்ற ஹேர் கட் நன்றாக இருக்கும். மேலும் ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது வகுடு இருப்பது போல ஹேர் ஸ்டைல் செய்தால் அட்டகாசமாக இருக்கும்.

சதுர வடிவம் :- இவர்களின் முக அமைப்பானது பரந்த, ஆழமான நெற்றி மற்றும் தாடை அமைப்பை கொண்டதாக இருக்கும். எனவே இவர்களுக்கு சற்று வித்தியாசமான ஹேர் ஸ்டைலே பொருத்தமாக இருக்கும். இவர்களின் தலையின் ஓரங்களில், அதாவது காதுகளின் ஓரங்களில் கம்மியான முடியையும் மற்ற இடத்தில அதிகமான அடர்த்தியான ஹேர் கட்டையும் செய்தல் வேண்டும். இதுவே இவர்களுக்கு அம்சமாக இருக்கும்.

வட்ட வடிவம் :- இவர்களின் முக அமைப்பு மற்றவர்களை காட்டிலும் அதிக வேறுபாடுகள் இருக்கும். மிக அழகான கன்னங்களை கொண்டவர்கள் இந்த வட்ட வடிவ முகம் உள்ளவர்கள். மேலும் பரந்த நெற்றியும் அழகான தாடை அமைப்பும் இவர்களுக்கு இருக்கும். காது ஓரங்களில் உள்ள முடிகளை குறைத்தும், தலையின் மேல் பாகத்தில் பாக்ஸ் போன்றும் ஹேர் கேட் செய்தால் இவர்களின் முகத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

இதய வடிவம் :- ஹார்ட் வடிவ முகம் உடையவர்கள் பரந்த நெற்றியுடனும்,அகண்ட கன்னத்துடனும் இருப்பார்கள். அத்துடன் இவர்களின் தாடையானது குறுகியே காணப்படும். இந்த முக வடிவம் கொண்டவருக்கு, தலையின் எல்லா புறத்திலும் அடர்த்தியான வகையில் முடியை கட் செய்தல் வேண்டும். குறுகிய தாடை அமைப்பு இவர்களுக்கு இருப்பதால் தலையின் முன் பகுதியில் அதிக முடி இருப்பது போல ஹேர் ஸ்டைல் செய்யவும்.

செவ்வக வடிவம் :- இந்த செவ்வக முகம் உடையவர்களுக்கு அகன்ற நெற்றியும், நீண்ட கன்னமும், வட்டமான தாடை அமைப்பும் இருக்கும். இவர்களுக்கு அங்கங்கு சிறிது சிறிது முடியை கட் செய்து ஃபெத்தர் கட் போன்று செய்யவும். மேலும் இந்த செவ்வக முக அமைப்பை கொண்டவர்கள் அதிகமான நீண்ட தாடியை வைத்திருத்தல் கூடாது. இது அவர்களின் ஹேர் ஸ்டைலிற்கு பொருந்தாது

வைர வடிவம் :- வைர முகத்தவர்களுக்கு, வைரம் போன்ற வடிவில் அவர்களின் முகம் இருக்கும். மேலும் அகண்ட கன்னமும் குறுகிய தாடையும் இவர்களின் முக அமைப்பாகும். ஒரு பக்கம் வகுடு எடுத்து, மற்றோரு புறம் அதிக முடி இருப்பது போன்று ஹேர் கட் செய்தல் வேண்டும். குறிப்பாக மறு புறமுள்ள முடி அதிகமானதாக இருந்தால்தான் வைர வடிவ முகத்திற்கு இது அழகு சேர்க்கும்.

முக்கோண வடிவம் :- கிட்டத்தட்ட இவர்களின் முக அமைப்பும் இதய வடிவ முக அமைப்பினரும் ஒரு சேரத்தான் இருக்கும். ஆனால், இவர்களுக்கு சற்றே கன்னங்கள் சிறியதாக இருக்கும். அத்துடன் இவர்களின் நெற்றியானது நீண்டு இருக்கும். இவர்களுக்கு தலையின் எல்லா புறத்திலும் அதிக படியான அடர்த்தி இருப்பது போல, முடியை கட் செய்தல் வேண்டும். குறிப்பாக முன் பக்கம் அதிக முடி இருத்தல் வேண்டும்.

முடியின் அடர்த்தி முக்கியம்..! இந்த வகையான ஹேர் ஸ்டைல்ஸ் பெரும்பாலும் முடி அடர்த்தியாக உள்ளவர்களுக்கே பொருந்தும். முடியின் அடர்த்தி குறைந்து இருப்பவர்களுக்கு ஷார்ட் ஹேர் கட் பொருந்தும். மேலும் இவற்றில் ஒரு சில வகையான ஹேர் ஸ்டைலும் நன்றாக இருக்கும். எந்த வகையான ஹேர் ஸ்டைல் என்பதை விட, அது உங்கள் முக அமைப்பிற்கு பொருந்துமா..? என்பதை உறுதி செய்து கொண்டு உங்களை அலங்கரித்து கொள்ளுங்கள் ஆண்களே..!

2 1535367250

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எலி வால் போல இருக்கும் கூந்தலில் இரவு இஞ்சி சாறு தடவுங்க….

nathan

முடி உதிராமல் இருக்க முட்டை

nathan

நேரான முடியை பெறவேண்டுமா?சூப்பரா பலன் தரும்!!

nathan

கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்

nathan

மென்மையான கூந்தலுக்கு…

nathan

உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், முதலில் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்

nathan

உருளைக்கிழங்கு தோலை கொண்டு புதிய முடிகளை வளர செய்யும் டிரிக்ஸ்!

nathan

வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி?

nathan

நீங்கள் எவ்வளவு தான் தலைக்கு குளித்தாலும் முடி எண்ணெய் பசையாக இருக்கா..? அப்ப இத படிங்க!

nathan