25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
coverpic 1534245577
முகப் பராமரிப்பு

இந்தியர்களின் முகத்திற்கேற்ற ஃபேஷியல் முறைகள்… படிக்கத் தவறாதீர்கள்

பல கோடி மக்கள் வாழும் நம் இந்தியாவில் எண்ணற்ற முக அமைப்பை கொண்ட மக்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரின் முகம் மற்றும் உடல் அமைப்பும் வேறுபட்டிருக்கும். மக்களின் உழைப்பிற்கு ஏற்ப அவர்களின் முக அழகும் மாறுபடும். சிலர் வெண்மையாகவும், சிலர் அடர்ந்த நிறமாகவும், சிலர் கருமையாகவும், நிறங்களில் வேறுபட்டிருப்பார்கள். எந்த நிறமாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றே என்பது சமத்துவமான விஷியமாகு

ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு தன்மை உண்டு. ஒரு சிலருக்கு இயற்கை வகையிலான ஃபேஷியல் முறைகள் ஒத்து போகும். சிலருக்கு ஆயர்வேத ஃபேஷியல் முறைகள் அவர்களின் முகத்திற்கு அழகை கூட்டும். வெவ்வேறு முக அழகை உடையவர்களுக்கு எத்தகைய முக பூச்சுகள் பயன்படுத்தினால் அழகாக இருக்கும் என்ற கேள்வி நம்மில் அனைவருக்கும் இருக்கும். இந்த பதிவில் இந்தியர்களின் ஒவ்வொரு முக அமைப்பிற்கும் ஏற்ற முக பூச்சுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் பசை சருமம்
எண்ணெய் சருமம் கொண்டவருக்கு கீரிம்கள் மற்றும் ஈரப்பதமான ஃபேஷியல் முறைகள் எடுப்பாக இருக்காது. இவர்களின் தோல்களுக்கு முதலில் ஆழ்ந்த சுத்தம் தேவைப்படும். பிறகு, முக மாஸ்குகள் போன்றவற்றை பயன்படுத்தினால் இவர்களின் எண்ணெய் வடிந்த முகம் அழகாக மாறும். இவர்களின் முகத்திற்கு பேர்ல் ஃபேஷியல், சில்வர் ஃபேஷியல் போன்றவை அட்டகாசமாக இருக்கும்.

வறண்ட சருமம்
உங்கள் மிகவும் வறண்டு காணப்படுகிறதா..? எப்போதும் சொரசொரப்பாகவே இருக்கிறதா..? உங்களுக்கென்றே இருக்கிறது கிளாசிக் ஃபேஷியல் மற்றும் பிளான்ட் ஸ்டெம் செல் ஃபேஷியல். இவை முகத்திற்கு முதலில் அதிக ஈரப்பதத்தை தந்து, பிறகு முக செல்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். அடுத்து தாவர செல்களை கொண்டு முகத்தில் ஃபேஷியல் செய்தால் முகம் மிகவும் இளமையாக இருக்கும்.

கருமையான முகம் பலருக்கு வெயிலின் தாக்கத்தால் முகம் மிகவும் கருமையாக இருக்கும். இதனை சரி செய்ய பல்வேறு கிரீம்களை எல்லாம் முகத்தில் பூசி முக அழகை பாதிக்க செய்து விடுவர். இவர்களுக்கென்றே இருக்கிறது இந்த பிளாட்டினம் ஃபேஷியல். முகத்தில் உள்ள கருமைகளை நீக்கி பளபளப்பான சரும அழகை தரும். முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி எப்போதும் வெண்மையாக இருக்கும் சருமத்தை கொடுக்கும்.

முகப்பருக்கள் கொண்ட சருமத்திற்கு பெரும்பாலான மக்களுக்கு இன்று இருக்கும் ஒரு தொல்லை இந்த முகப்பரு. முகத்தின் முழு அழகையும் இந்த முகப்பருக்கள் கெடுத்து விடும். இவர்களுக்கென்றே இருக்கிறது ஜெம் ஃபேஷியல். பல வகையான நவ ரத்தினங்களை கொண்டு முகத்தை அழகு செய்வதே இந்த ஃபேஷியல் முறையின் முக்கிய பங்கு. இது முகத்தில் உள்ள முக பருக்களை நீக்கி சருமத்தை மிருதுவாக வைக்கும். அத்துடன் இழந்த பொலிவையும் மறு சுழற்சி செய்து விடும்.

கலவை சருமம் சிலரின் முக பாங்கு எந்தவித முக சாயலையும் சார்ந்திருக்காது. அவர்களுக்கென்று ஒரு அழகிய முக பூச்சு இருக்கிறது. பிளாட்டினம் மற்றும் ஜெம் ஆகிய இரு வகை ஃபேஷியல்களும் இவர்களின் முகத்திற்கு மிக அழகாக இருக்கும். அத்துடன் இளமையான முக அழகையும் இது ஏற்படுத்தும். முகத்தில் உள்ள எல்லா வகை அழுக்குகளையும் நீக்கி அழகிய தோற்றத்தை கொடுக்கும்.

முக்கியமானவை..! எந்த வகை ஃபேஷியல் முறையாக இருந்தாலும் 4 முதல் 6 வாரம் இடைவெளியில் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் அது முகத்தின் பொலிவை குறைத்து விடும். எந்த வகை ஃபேஷியல் செய்தாலும் முகத்தை நன்கு சுத்தம் செய்து விடவும். முகத்தில் ஃபேஷியல் செய்த பின் நன்கு மசாஜ் செய்தால்தான் முக அழகு அதிகரிக்கும்.

ஃபேஷியலின் நன்மைகள் முகத்தில் ஃபேஷியல் செய்வதால் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். முகம் எப்போதும் மினுமினுப்பாகவே இருக்கும். அத்துடன் எந்தவித பிரச்சினைகளும் முகத்திற்கு ஏற்படாது. முக தசைகளை அழகாக வைத்து முக அமைப்பை பளிச்சென்று மாற்றும். முகத்தில் எந்தவித பக்க விளைவுகளையும் இவை ஏற்படுத்தாது. என்றும் இளமையுடன் இருக்க இந்த வகை ஃபேஷியல்கள் நன்கு உதவும்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.coverpic 1534245577

Related posts

இதோ சூப்பரான டிப்ஸ்! முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எளியமுறையில் நீக்கனுமா?

nathan

நெற்றியில் விழும் சுருக்கங்கள் மறைய எளிய வழி

nathan

சரும பிரச்சனைகளை போக்க சில வழிமுறைகள்……

nathan

மின்னல் வேக அழகுக் குறிப்புகள் தெரிய வேண்டுமா?

nathan

கருவளையம் எளிதாக மறைக்கப்பட அற்புதமான வைத்திய முறை !!

nathan

சரும பொலிவையும் மெருகேற்ற வாழைப்பழ தோல்

nathan

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan

சந்தன ஃபேஸ் பேக்கை உபயோகித்தால் வெள்ளையாகலாம்

nathan

முகத்தை பொலிவடைய செய்யும் கேரட்..

nathan