24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
1 1533210870
முகப் பராமரிப்பு

தேவதை போன்று உங்கள் காதலி மாற வேண்டுமா..? அப்ப இத படிங்க!

எல்லோருக்கும் அவரவர் காதலியின் மீது அதீத அன்பு இருக்கத்தான் செய்யும். காதலன், தன் காதலி என்றுமே ஒரு தேவதையாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். இது மனிதனின் இயலப்பான விஷியமாகவே உள்ளது. சிலர் தன் காதலியின் அழகிற்கு அழகு சேர்க்க விரும்புவார்கள். அப்படி தேவதை போன்று அவர்களை அழகு பெற செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு அருமையான இலை இருக்கிறது. அது என்ன இலைனு யோசிக்கிறீங்களா..? பல வகையான அழகு குறிப்புகளை தனக்குள்ளே பூட்டி வைத்திருக்கும் கொய்யா இலைதான் அது. கொய்யா இலையின் மகத்துவத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளவோம்

முக சுருக்கங்களை நீக்க :-

முகத்தில் சுருக்கம் வருவது இன்று பெரும்பாலோர்க்கு உள்ள பிரச்சினையே. உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் குறைவால் இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக இது இளமையை விரைவிலேயே இழக்க செய்துவிடும். இதற்கு சிறந்த தீர்வு கொய்யா இலையே. இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் முக சுருக்கத்தை போக்கி “என்றும் பதினாறு” போல தோற்றத்தை தரும். இந்த இலைகளை காயவைத்து பொடி செய்து நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் சுருக்கங்கள் மறையும்.

முகப்பரு போக்க :-

முகத்தின் அழகை கெடுப்பதில் முதல் இடத்தில் இருப்பது இந்த முகப்பருக்களே. இது சில வகையான பாக்டீரியாக்களால் முகத்தில் வருகிறது. கொய்யா இலையில் பாக்டீரியாக்களை கொள்ளும் தன்மை உள்ளதால், இதனை அரைத்து முகப்பருக்களை முகத்திற்கு பயன்படுத்தினால் விரைவிலேயே முக பருக்களை காணாமல் போக செய்துவிடும்.

கரும்புள்ளிகளை அகற்ற :- பலருக்கு இறந்த செல்கள் முகத்திலேயே தங்கி விடுகின்றன. இதனால் அவர்களுக்கு கரும்புள்ளிகள் வருகிறது. இது முக அழகையே முற்றிலுமாக கெடுத்து விடும். இதனை அகற்ற கொய்யா இலையை அரைத்து, அதனுடன் 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த அழகு குறிப்பு உங்கள் காதலியின் முகத்தை கண்டிப்பாக தேவதை போல மாற்றும்.

தோல் பிரச்சினைகளை குணப்படுத்த :- அதிக மாசுக்கள் ஏற்படுவதால் தோலில் பல வகையான நோய் தொற்றுகளும் வருகின்றது. இதற்கு தீர்வு தருகிறது கொய்யா இலை. இதில் அதிகம் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே இருப்பதால் தோலின் சரும பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மேலும் தோல் எரிச்சல், ஒவ்வாமை மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும்.

சரும புத்துணர்ச்சிக்கு :- உங்களின் காதலியின் சருமம் என்றுமே புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்றால் நம்ம கொய்யா இலை அதற்கு உதவும். கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். அத்துடன் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

UV கதிர்களில் இருந்து பாதுகாக்க :- சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்கள், முகம் மற்றும் தோல்களையும் பாதிக்க செய்யும். சுற்றுசூழல் சீர்கேட்டால் இதன் பாதிப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளது. இதனை சரி செய்ய கொய்யா இலையை வெயிலில் உலர வைத்து, பொடி செய்து பின் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல போடவும். 20 நிமிடம் கழித்து இதனை காட்டன் துணியால் துடைத்து விடவும். இது நல்ல பலனை தரும்.

வெண்மையான முகம் பெற :- உங்கள் காதலியின் முகம் மிகவும் வெண்மையாக இருக்க இந்த அழகு குறிப்பை பயன்படுத்துங்கள். கொய்யா இலையை அரைத்து அதனுடன் சிறுது ரோஸ் நீரை ஊற்றி கலக்கவும். பின் சிறிதளவு மஞ்சளையும் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் மினுமினுப்பான தேவதை போன்ற சருமம் பெறலாம்.

இந்த தேவதை போன்ற முக சருமம் தரும் கொய்யா இலையின் மகத்துவத்தை உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்.

1 1533210870

Related posts

சூப்பர் டிப்ஸ்! கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்

nathan

சூப்பர் டிப்ஸ்! வெறும் உப்பு தண்ணிய வெச்சு இந்த தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்?

nathan

இளமையைத் தக்க வைத்துக் கொள்ள இத செய்யுங்கள்!…

sangika

கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கான காரணங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்…!

nathan

முகத்தில் ஆப்பிள்சாறு

nathan

முகத்துக்கு பிரகாசம் அளிக்கும் கிரீம்

nathan

கன்னம் அழகாக சில குறிப்புகள்

nathan

தூய்மையான முகம் எப்படி பெறலாம்? சில சிறந்த ஆயுர்வேத குறிப்புகள் !!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் மூக்குத்தியை இடப்பக்கம் அணிவதின் அறிவியல் உண்மை !!

nathan