
தற்போது கடைகளில் எண்ணற்ற கூந்தல் பராமரிப்பு பொருட்கள் விற்கப்படுகின்றன. அந்த பொருட்களில் முக்கியமானவை தான் ஷாம்பு. இருப்பினும் எத்தனை பிரபலமான கூந்தல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், பல பெண்கள் மூலிகை ஷாம்புக்களையே வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஏனெனில் மூலிகை ஷாம்புக்களைப் பயன்படுத்துவதால் எண்ணற்ற நன்மைகளை பல பெண்கள் பெறுகின்றனர். அதனால் தான் தற்போதைய பெண்கள் கெமிக்கல் கலந்த பொருட்களை தவிர்த்து, இயற்கையான ஷாம்புக்களை தேர்ந்தெடுக்கின்றனர். அதுமட்டுமின்றி, மூலிகை ஷாம்புக்களைப் பயன்படுத்தும் போது, அவை முடிக்கு எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்துவதில்லை.
மாறாக அளவுக்கு அதிகமான நன்மைகளை வாரி வழங்குகிறது. இங்கு தமிழ் போல்ட் ஸ்கை மூலிகை ஷாம்புக்களை நம்பி பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து இனிமேலாவது கெமிக்கல் கலந்த ஷாம்புக்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, மூலிகை பொருட்களை பயன்படுத்தி, நல்ல ஆரோக்கியமான, அழகான மற்றும் நீளமான முடியைப் பெறுங்கள்.
கூந்தல் உதிர்தல்
மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானவை கூந்தல் உதிர்வது நின்றுவிடும். எனவே கூந்தல் உதிர்தல் அதிகம் உள்ளவர்கள், வாரம் ஒரு முறை மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்தி முடியை அலசி வாருங்கள்.

கூந்தல் வளர்ச்சி
கூந்தல் நன்கு நீளமாக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் மூலிகை ஷாம்புக்களான்து முடியை வலுவாக்கி, அதன் வளர்ச்சியை அதிகரிக்கும்.

பொலிவான கூந்தல்
கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டால், அதனை மூலிகை ஷாம்பு தடுத்து, கூந்தலின் பொலிவை அதிகரிக்கும்.

வறட்சியான கூந்தல்
கூந்தல் வறட்சியடைந்து இருந்தால், அதனை சரிசெய்ய மூலியை ஷாம்புக்களைப் பயன்படுத்தினால், நிச்சயம் கூந்தலானது வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.

கூந்தல் வெடிப்பு
கூந்தல் வெடிப்பு இருந்தால், கூந்தலின் வளர்ச்சி மட்டுமின்றி, அழகும் பாதிக்கப்படும். ஆனால் மூலிகை ஷாம்புக்களை கூந்தலுக்கு பயன்படுத்தினால், கூந்தல் வெடிப்பானது நீங்கும்.

எண்ணெய் பசை கூந்தல்
கூந்தல் அதிகப்படியான எண்ணெய் பசையுடன் இருந்தால், அதனை சரிசெய்ய மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்தினால், கூந்தலில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கிவிடும்.

பொடுகுத் தொல்லை
பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், மூலிகை ஷாம்புக்களை பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.