dark knees and elbows 1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முட்டிகளில் உள்ள கருமையை எளிதாக போக்க எளிய வழிமுறைகளை இக்கட்டுரையில் கொடுத்துள்ளோம்

பால், எலுமிச்சை, சர்க்கரை

பால் – 1/4 கப்; எலுமிச்சை – 2; சர்க்கரை – 2 டீஸ்பூன்

முதலில் கை, கால் முட்டிகளின் மீது பாலை தெளித்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் எலுமிச்சையின் அரை பகுதியை சர்க்கரையில் தொட்டு, முட்டிகளின் மீது நன்கு தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீரில் முட்டிகளை கழுவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்துவந்தால், முட்டி தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

dark knees and elbows 1

மஞ்சள்+பசும்பால்

மஞ்சள் – 2 டீஸ்பூன்; பசும்பால் – 1/4 கப்

தோலின் மீதுள்ள இறந்த செல்களை உடனடியாக அகற்றும் வல்லமை மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் தூளுடன் பசும்பால் கலந்து, முட்டிப்பகுதியின் மீது தடவி, இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், லோஷன் அல்லது சோப் பயன்படுத்தி அப்பகுதியை கழுவ வேண்டும். தினந்தோறும் இதை செய்து வந்தாலும் சில நாட்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.

கற்றாழை

சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் தோல் கருமை அடைவதை தடுக்கும் சக்தி கற்றாழைக்கு உண்டு. கற்றாழையை வெட்டி வந்து, அதன் தொலை சீவிவிட்டு, உள்ளிருக்கும் ஜெல் போன்ற பசையை முட்டிப்பகுதியில் பூசி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்துவந்தால் ஒரு வாரத்தில் தோல் மிருதுவாகும்.

எலுமிச்சை+தேன்

எலுமிச்சை – 4; தேன் – 5 டீஸ்பூன்

எலுமிச்சையை அரையரை பழமாக அரிந்து, ஒவ்வொரு பகுதியாக தேனில் தொட்டு முட்டித் தோலின் மீது நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவேண்டும். பின்னர் தண்ணீரால் அப்பகுதியை கழுவ வேண்டும். அதிகளவு தேன் சேர்த்து மசாஜ் செய்தால், கருமை விரைவில் மறையும்.

Related posts

மசாலா சப்பாத்தி

nathan

இன்ஸ்டன்ட் ஃப்ரெஷ்னஸ்… இமீடியட் பியூட்டி! அழகு குறிப்புகள்!!

nathan

மருத்துவ குணங்கள் கொண்ட தேநீர்!

sangika

உங்களுக்கு அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..?அப்ப இத படிங்க!

nathan

தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் பெறும் நன்மைகள்!!!

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

பருக்களை தடுத்து சருமத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

nathan

டாட்டூஸ் ஆபத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

nathan

சருமத்தின் மீது எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் நல்ல பலனை அளிக்க இத செய்யுங்கள்!…

sangika