32.5 C
Chennai
Tuesday, Jul 15, 2025
1532772903 276
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு நல்ல அடர்த்தியான முடியைப் பெற வேண்டுமா…!அப்ப இத படிங்க!

நல்ல அடத்தியான முடியைப் பெற யாருக்கு தான் ஆசை இருக்காது. குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பலருக்கு அது கனவாகவே உள்ளது. இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
ஆனால் முடி அடர்த்தியாக இருப்பது என்பது ஒவ்வொருவரின் பராமரிப்பைப் பொறுத்து தான் உள்ளது. ஆகவே தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் சில நாட்டு வைத்தியங்களை பார்ப்போம்.

1. வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆகவே வெங்காய சாறை எடுத்து, ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலசுங்கள்.

2. விளக்கெண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளது. இது ஸ்கால்ப்பை ஈரப்பசையுடன் வைத்து, ஸ்கால்ப்பில் உள்ள நோய்த்தொற்றுக்களைத் தடுத்து, தலைமுடி உதிர்வதைக் குறைத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

3. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. உலர்ந்த நெல்லிக்காயை தேங்காய் எண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்த எண்ணெய்யை ஸ்கால்ப்பில் மசாஜ் செய்ய வேண்டும்.

4. எலுமிச்சை சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும்.

5. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. ஆகவே வெதுவெதுப்பான நிலையில் க்ரீன் டீயை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

6. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரோட்டீன், முடியின் வளர்ச்சியைத் தூண்டும். அத்தகைய முட்டையின் வெள்ளைக்கருவை ஸ்கால்ப்பில் படும்படி தடவினால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று, முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.1532772903 276

Related posts

ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க தலை முடி அடிக்கடி பிளவு ஏற்பட்டு உதிர்கிறதா?

nathan

இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா முடி உதிர்வை நிறுத்தி வழுக்கை விழாமல் தடுக்கும் …!

nathan

ஆயுர்வேத முறையை நீங்கள் பின்பற்றும் போது உங்கள் முடியை அடர்த்தியாகவும் மென்மையாகவும் மாற்றி ஈரப்பதத்துடன் வைத்து முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

nathan

பொடுகு தொல்லையா? இதோ சில டிப்ஸ்!

nathan

உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்ப இதை டிரை பண்ணுங்க

nathan

வறண்ட கூந்தலா? ஆலிவ் கண்டிஷனர் உபயோகிங்க

nathan

தினமும் 100 முடி உதிர்ந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

nathan

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை

nathan