25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
6 1532676022
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா சொட்டை விழறதுக்கு வேற எதுவுமே காரணமில்ல….

தினமும் செய்யும் இந்த ஒரு விஷயம்தான், உங்கள் வழுக்கைக்குக் காரணம் என்றால், நீங்கள் அதிர்ந்து போய்விடுவீர்கள். உலகில் அதிகம் கிண்டலுக்கு ஆளாபவர்கள், தலையில் முடி கொட்டிய நபர்கள்தான்.

தலைமுடி இழப்பை, வாழ்வையே இழந்ததுபோல எண்ணிக்கொண்டு மனம்வருந்தி, கூனிக்குறுகி நடப்பவர்கள் ஏராளம். சிலரோ, தலையில் முடி இல்லாமல் இருப்பதை மறைத்து, விக் வைத்துக்கொண்டு, பலரின் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு.

வழுக்கைக்கு முதல் காரணம் முடிஉதிர்தல்

காலை எழும்போது, தலையணையில் முடி கொட்டியிருக்கிறதா? தலை சீவும்போது, கொத்து கொத்தாக முடி உதிர்ந்து உங்களை பயமுறுத்துகிறதா? ஆரோக்கியமான மனிதர்களுக்கு தினமும் முடி உதிர்தல் இயல்பான ஒன்றுதான், உதிர்ந்த அளவு, மீண்டும் வளரும் இயல்பு மிக்கது, தலைமுடி. ஆயினும் கொத்து கொத்தாக முடி உதிர்வது, தலையில் சில இடங்களில் முடி வளராமை போன்றவை, தலை வழுக்கையை நோக்கிச் செல்கிறது என்பதை உணர்த்துகின்றன. தக்க நேரத்தில் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம், தலை வழுக்கையாகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதிகம் உதிர என்ன காரணம்? சில தனிப்பட்ட ஹார்மோன் குறைபாடுகளைத் தவிர, தலைமுடி உதிர்வதற்கு, நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்களே, பெரிதும் காரணமாகின்றன என்பதை நாமறிவோமா? நம்முடைய வழக்கமான தினசரி செயல்களே, தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணமென்று நாம் அறிந்துகொண்டால், நிச்சயம் அதிர்ந்துதான் போவோம்

குளித்தவுடன் தலைசீவுவது டெய்லி வாழ்க்கையில், பலர் அதிகம் செய்யும் ஒரு அவசர காரியம், குளித்தவுடன் தலைசீவுவது. ஈரத்தலையில் மயிர்க்கால்கள் மிருதுவாக இருக்கும்போது தலையை அழுத்தி சீவுவதன் மூலம், மயிர்க்கால்களில் இருந்து முடிகள் இழுக்கப்பட்டு, முடி அதிகமாக உதிர்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு. முடி உதிர்வதற்கு நாம் சாப்பிடும் உணவு ஒருகாரணமாக இருந்தாலும், நாம் சாப்பிடாத உணவும், மற்றொரு காரணமாக இருக்கக்கூடும். உடல் திசுக்கள் வளரஉதவும் ஊட்டச்சத்துக்கள்போல, முடி வளர்வதற்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் தேவை. இரும்புச்சத்து, பிராண வாயுவை இரத்தத்தின் மூலம் உடலெங்கும் கொண்டு செல்லும்போது, உடல்செல்களின் உற்பத்தி சீராகிறது. நாம் இரும்புச்சத்து நிறைந்த உணவை இழக்கும்போது, உடலில் பிராண வாயுவின் இயக்கம் பாதித்து, செல்வளர்ச்சி தடைபட்டு, முடி உதிர்கிறது. திசுக்களின் வளர்ச்சிக்கு உதவும் ஜின்க் எனும் துத்தநாகத்தின் இழப்பாலும், முடி உதிர்கிறது. இதுபோல, மயிர்க்கால் வளமாக இருக்க உதவும் புரோட்டின் மற்றும் வைட்டமின்C நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளாததாலும், தலைமுடிகள் உதிரும். கீரைகள், காலிஃபிளவர், தக்காளி, பீன்ஸ், மாம்பழம், ஆரஞ்சு, தயிர் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். கொண்டைக்கடலை உள்ளிட்ட நவதானியங்கள் மற்றும் பாதாம், முந்திரி போன்ற பருப்புகளை சாப்பிட, தலைமுடி உதிர்வது குறையும்.

அதிக மனஅழுத்தம் இன்றுள்ள பல வியாதிகளுக்கு அடிப்படையென்று, சித்த மருத்துவர்களும், மேலை மருத்துவர்களும் கை காட்டுவது, மன அழுத்தத்தைத் தான். அதற்குக் காரணங்கள் பல இருந்தாலும், அதனால் அடையும் இன்னல்கள் பலப்பல. அதிலொன்றுதான், முடி உதிர்வது. ஆம்! அதிக மன உளைச்சலால், திசு வளர்ச்சிக்கு துணையாகும் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதால், தலைமுடி உதிர்கிறது.

பரம்பரை கோளாறு. நாற்பதைக்கடக்கும் பெண்கள் அல்லது நாற்பதைநெருங்கும் பெண்கள் சிலருக்கு தலைமுடியில் அடர்த்திகுறைந்து, முடிஅதிகம் உதிர்வதால், தலையில் முடியே இல்லாமல், கிட்டத்தட்ட வழுக்கைத் தலை போன்று காணப்படுவார்கள். பெண்களுக்கு மிகவும் மன உளைச்சலை அளிக்கும் ஒன்றாக இருக்கும் இது போன்ற நிகழ்வுகள், ஏன் ஏற்படுகின்றன? அந்தப் பெண்களின் பெற்றோருக்கோ அல்லது மூதாதையருக்கோ இதுபோன்ற ஹார்மோன் பாதிப்புகள் இருந்தால், பரம்பரையாக அவர்களுக்கு தலைமுடி உதிர வாய்ப்புண்டு என்கிறார்கள், மேலைமருத்துவர்கள். ஆண்ட்ரோஜெனிக் அலோபெசியா எனும் இந்த பாதிப்புக்கு, மினாக்சிடில் எனும் லோஷனைத் தலையில் தடவிவர, முடி உதிர்தல் கட்டுப்படும் என்கின்றனர், மேலை மருத்துவ நிபுணர்கள்.

தலைமுடியை இறுக்கமாகப் பின்னுவது. தலைமுடியை இறுக்கமாகப் பின்னினால் தானே, முடி நெற்றியில் விழாமல் இருக்கும், இல்லையென்றால், வாகனத்தில் செல்வது முதல், அலுவலகத்தில் வேலை செய்வது வரை, எல்லா நேரமும், முடியைக்கையால் சரிசெய்து கொண்டேயல்லவா, இருக்க வேண்டியிருக்கும், என நாம் எண்ணலாம். முன்னெல்லாம், தலைமுடியை இறுக்கி சடை பின்னிவிட்டால், மாலை வீட்டுக்கு வந்தால்கூட, சடையை அவிழ்ப்பது சிரமமாக இருக்கும். அப்போதெல்லாம் முடிஉதிர்வு இருக்காதா? என்றும் சிலர் கேட்கக்கூடும். நிச்சயம் முடி உதிராது.

ஈரமான கூந்தல் முதல் காரணம், ஈரத்தலையில் அவர்கள் சடை பின்ன மாட்டார்கள், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்காமல் ஒருநாளும் இருக்கமாட்டார்கள். சில கிராமங்களில் தலைக்கு இன்னும், வேப்பெண்ணைதான். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம், இன்றைய பரபரப்பு, மனஅழுத்தம், ஜங்க் உணவுகள் மற்றும் ஸ்மார்ட் மொபைல்கள் அன்று இல்லை. அதனால்தான், அவர்களின் தலைமுடி பாதியுடல்வரை, வளர்ந்திருக்கும்.

ஆயில் அப்ளை நாகரிக வளர்ச்சியில் இப்போது கழுத்து வரை இருக்கும் முடிகூட உதிர்ந்து, முடியே இல்லாதத் தலையாகிவிடுமோ என்ற அச்சம்தான், இன்று பல தாய்மார்களுக்கும் தங்கள் பிள்ளைகளைக் கண்டபின், ஏற்படுகிறது. தற்காலத்தில், தலைக்கு எண்ணை தடவாமல், அவசரமாகக்குளித்தபின், தலையை வாரி, சிறு சடை போலவோ அல்லது கொண்டைபோலவோ போட்டுக்கொண்டு, அதற்கு சப்போர்ட்டாக, இரப்பர்பேன்ட் அல்லது பிளாஸ்டிக் கிளிப் இட்டுக் கொள்ளும் போது, தலைமுடி வேர்க்காலிலிருந்து இழுக்கப்பட்டு, பின்னர் அவிழ்க்கும்போது, முடி உதிர்கிறது.

இதுபோல முடியுதிரும்போது, அதைக்கண்டு, மனஅழுத்தத்துக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை, மிக அதிகம். அழுத்தி தளர்வாக தலைமுடிகளைப் பின்னி, அவ்வப்போது மீண்டும் பின்னிக் கொள்வதன் மூலம், தலைமுடி உதிர்தல் குறையும். இதை தினசரி வழக்கமாக்கும்போது, அந்தநேரங்களில், மொபைல் ஈடுபாடு குறையும். இதன்மூலம் மனதை இலகுவாக்கிக் கொள்ள ஏதுவாகும். ஸ்டைலுக்காக அல்லது புதுஃபேஷன் என்று தலையை அலங்கோலமாக்கினாலும், தலைமுடிகள் அதிகம் உதிரும்.

ஹேர் டிரையர் தலைமுடிகளின் ஈரத்தை உலரவைக்க, ஹேர்டிரையர் எனும் மின்உலர்த்தியை அதிகம் உபயோகிப்பது. ஈரத்தலையை சீவி, முடிஉதிர்வது ஒருசிலருக்கு பிரச்னை என்றால், குளித்தவுடன் தலைஈரமாக இருப்பதால், பருத்தித்துண்டால் துவட்டி, ஈரத்தைப்போக்காமல், ஹேர் டிரையரை தலையில் வைத்து, ஈரத்தைப் போக்குவது. தலைமுடி அதிகம் உதிர, இந்த ஒரு பழக்கமும் காரணம். செயற்கை வெப்பத்தினால், முடியிலுள்ள இயற்கை ஈரப்பசை உலர்ந்து, மயிர்க்கால்களின் பிடிப்பை இழந்து, முடியை உறுதியற்றதாக்கி, எளிதில் உடையக் கூடியதாகிறது. இதனால் தினமும் ஏராளமான முடிகள் உதிர்ந்து, விரைவில் தலைமுடியைத் தலையில் தேடும் நிலை ஏற்பட, வாய்ப்புண்டு.

அதீத முடி உதிர்வு அடிக்கடி ஷாம்பூ மற்றும் தலைமுடி எண்ணெய்களை மாற்றிக் கொண்டிருப்பது. நம்மில் பலர் செய்யும் மற்றொரு தவறு, அடிக்கடி ஷாம்பூ மற்றும் ஹேர் ஆயிலை மாற்றிக்கொண்டிருப்பது. தலைமுடி உதிர்வுக்காக இதைச்செய்கிறோம் என்று கூறினாலும், அடிக்கடி மாற்றும் இவற்றிலுள்ள பல்வேறு வேதிப் பொருட்களே, தலையின் PH வேதித் தன்மையைப் பாதித்து, முடி உதிர்வை அதிகரித்து விடுகிறது.

முடி பிடுங்குதல் ட்ரிசோடில்லோ மேனியா எனும் முடியைப் பிடுங்கும் வியாதி. Trichotillo Mania மனநல பாதிப்புள்ள சிலர், தங்களையறியாமல் தலைமுடிகளை அடிக்கடி, மயிர்க்கால்களில் இருந்து பிய்த்து எடுத்துக்கொண்டே, இருப்பார்கள். இதன்மூலம், மயிர்க்கால்கள் சேதப்படுவதோடு மட்டுமல்ல, அங்கே மீண்டும் முடி முளைப்பது அரிதாகிவிடும். அத்துடன் தலையெங்குமுள்ள காயங்கள், வலியை ஏற்படுத்தும். அதிகமாகப் பெண்களைப் பாதிக்கும் இந்த பழக்கத்தைத் தடுக்க, மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது, மிக அவசியமாகும்.

மெனோபாஸ் முடியைப் பிடுங்க உந்துதல் ஏற்படும் சமயங்களில், கைகளை இறுகப் பற்றிக் கொள்வதும், வேறு காரியங்களில் மனதை செலுத்துவதும் நம்மால் முடியாத ஒன்றாக இருந்தாலும், மருத்துவர் அந்தப் பழக்கத்தை மாற்ற, தீர்வுகள் அளிப்பார். இவற்றைத் தவிர, ஹார்மோன் பாதிப்பால், பெண்களின் மெனோபாஸ் பருவத்திலும் முடி உதிர்தல் அதிகரிக்கும்.

கர்ப்ப காலம் பெண்கள் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு, பிரசவ நேரத்தில் அதிகமாக இருந்த தலைமுடி சில மாதங்களில் சட்டெனக் குறையத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு பிரவச காலத்தில் அதிகரிப்பதே, தலைமுடி அதிகம் வளரக் காரணம். இந்த ஹார்மோன் சுரப்பு, குழந்தை பெற்ற சில மாதங்களில் குறையும்போது, தலைமுடி உதிர ஆரம்பிக்கும். சத்தான உணவுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள, முடி உதிர்வு கட்டுப்படும்.

இதையும் மீறி, முடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டதென்றால், பூசணிக் கொழுந்து இலைகளை சாறெடுத்துத் தலையில் தடவி வரலாம். ஊமத்தை பிஞ்சை அரைத்து முடி உதிர்ந்த இடத்தில் தடவி குளித்துவர, நிவாரணம் கிடைக்கும்.

6 1532676022

Related posts

தலைமுடியில் வெடிப்பு ஏற்பட்டு முடி வளராம இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்ப இதை டிரை பண்ணுங்க

nathan

ஆண்களே! முடி அதிகமா கொட்டுதா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க…

nathan

முடி உதிர்தலை தடுத்து, நீளமான கூந்தல் பெற துளசியை எப்படி உபயோகிக்கலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா இளநரை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா…?

nathan

உங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா?

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம்

nathan

தலை முடி உதிராமல் நன்கு வளர

nathan

ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ்களை ட்ரை பண்ணுங்க…

nathan