கருப்பு மற்றும் வெள்ளை இந்த வண்ணக் கலவையை பயன்படுத்தும் போது, 8 வெள்ளை நிற நகங்கள் மற்றும் 2 கருப்பு நிற நகங்களைக் கொண்டிருப்பீர்கள். கருப்பும், வெள்ளையும் உன்னதமான வண்ணங்களாக கருதப்படுவதால், இந்த வண்ணக்கலவைகள் தீட்டப்பட்ட நகங்களுடன் நீங்கள் அலுவலகத்திற்கும் சென்று வரலாம்.
கடல் நீலம் மற்றும் சில்வர் உங்களுடைய நகங்களின் பளபளப்பில் சற்றே மாற்றத்தைக் காட்ட விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய வண்ணம் சில்வர் ஆகும். எனினும், இந்த வண்ணத்தை தேவைக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். நல்லதொரு விளைவை ஏற்படுத்த விரும்பினால், இரண்டு சில்வர் நகங்களைக் கொண்டிருந்தால் கூட போதுமானது.
ஊதா மற்றும் இளஞ்சிவப்பு ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களை நகங்களில் தீட்டப் போகிறோம் என்று நீங்கள் முடிவெடுக்கும் போது, இது சற்றே குழந்தைத்தனமாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றும். எனவே, நிறமாலையில் உள்ளதைப் போலவே இந்த வண்ணங்களை நீங்கள் அளவாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் பிரெஞ்சு முறையில் அலங்காரம் செய்து கொள்ள விரும்பினால், ஊதா மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்கள் மிகவும் எளிமையாகவும் மற்றும் புத்துணர்வுடனும் உங்களைக் காட்டும்.
மெரூன் மற்றும் சாம்பல் நிறம் மெரூன் மற்றும் சாம்பல் நிறங்களைப் பயன்படுத்தி நகங்களை அழகுபடுத்தினால், அவை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். உங்களுடைய மோதிர விரல் தவிர பிற அனைத்து நகங்களுக்கும் சாம்பல் நிறத்தைப் தீட்டுங்கள் அல்லது இதற்கு மாறாக மெரூன் நிறத்தை தீட்டுங்கள். மீதமுள்ள நகத்திற்கு மற்ற வண்ணத்தை தீட்டுங்கள், அழகைப் பெற்றிடுங்கள்.