24.7 C
Chennai
Monday, Jan 13, 2025
சரும பராமரிப்புஅழகு குறிப்புகள்

சருமத்தில் உள்ள அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய

ஸ்டரேட்ச் மார்க்கை போக்குவதற்கு எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், அந்த சிகிச்சை முறைகள் பக்க விளைவுகள் இல்லாமல் இருப்பதில்லை. வேறு எதாவது அழகு சாதன முறைகளை உபயோகித்தால் பணம் அதிகமாக செலவிட நேரிடும். எனவே, இது போன்ற பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகள்

கையாளுவதற்கு பதிலாக இயற்கை நமக்கு அளித்த பொருட்களை வைத்து நாமே இவற்றை எளிமையாக சரிசெய்து விடலாம்

அந்த மாதிரியான இயற்கை அளித்த அற்புத பொருள் தான் தேங்காய். தேங்காயை எண்ணெயை பயன்படுத்தி உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்களை கண்ணுக்கு எளிதில் தெரியாத மாதிரி குறைத்துவிடும். உடலில் எளிதில் உறிஞ்சிக் கொள்ளக்கூடிய எண்ணெய் தேங்காய் எண்ணெய். இத்துடன் பிற இயற்கை பொருட்களை சேர்த்து உபயோகித்தால் சீக்கிரம் கோடுகள் மறைவதை நீங்களே பார்க்கலாம். இங்கே, தேங்காய் எண்ணெயை எப்படி எல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தி ஸ்ட்ரெட்ச் மார்க்களை போக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றை பார்க்கலாம்… பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக தடவவும் :

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் விரைவில் சருமத்தில் உள்ள அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய ஆரம்பிக்கும். நல்ல பலனைப் பெற இந்த முறையை தினமும் குறைந்தது 2 தடவை செய்யுங்கள்.

தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் ஆயில் : 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். தேங்காய் எண்ணெயுடன் கொக்கோ வெண்ணெய் : 1 டீஸ்பூன் கொக்கோ வெண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த பழங்கால சிகிச்சை முறையை வாரத்திற்கு குறைந்தது 3 முறை பின்பற்றி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல் : 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து, நீரில் நனைத்த துணியால் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய ஆரம்பிப்பதைக் காணலாம்.

தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் : 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் காபி : 1 டீஸ்பூன் காபி தூளுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூள்: 1 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ ஆயில் 3-4 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுத்து அதில் உள்ள எண்ணெயை ஊசி பயன்படுத்தி துளையிட்டு ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் பகுதியில் தடவி குறைந்தது 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் இது தான் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்குவதற்கான கடைசி வழி. அதற்கு 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 4 முறை செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வேகமாக மறைவதைக் காணலாம்.

Related posts

அழகான, வாளிப்பான, நீண்ட தொடைகளை பெறுவது எப்படி?

nathan

காலணிகள் வாங்கும் போது கட்டாயம் இவற்றை கவனியுங்கள்

sangika

முகம் மற்றும் கை,கால்களில் ஏற்படும் கருமை அப்படியே திட்டுகளாக படிந்துவிடும்.

nathan

கோடைக்காலங்களில் சரும நோய்

nathan

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்(Video)?

nathan

கைகால் மூட்டுகளின் கருப்பு நீங்க

nathan

பிரேம்ஜி யாருக்கு ப்ரோபோஸ் செய்திருக்கிறார் பாருங்க! வீடியோ

nathan

கருமைநிறம் தோன்றும் உடலின் மறைவான இடங்களை சரிசெய்யும் வழிமுறைகளைக் காணலாம்.

nathan

உங்க வீட்டில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய எளிய குறிப்புக்கள்

nathan