27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
shutterstock 115597345
முகப் பராமரிப்பு

உங்களுக்கு ஒட்டிய கன்னமா? ஒரே வாரத்தில் அழகாக மாற்ற இதோ சூப்பர் டிப்ஸ்!

உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும்.

இவர்களுக்கு என்று வீட்டில் செய்யக்கூடிய எளிய வைத்தியங்கள் உள்ளன. இதை தினமும் செய்து வந்தால் உங்கள் கன்னங்கள் அழகாக கவர்ச்சியாக காட்சியளிக்கும்.

தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வாருங்கள். ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும். ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் `பேசியல் ஸ்ட்ரோக் கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும்.

ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்துச் சாப்பிடுவது கன்னத்தை பொலிவாகக் காட்டும். நல்லெண்ணெய் (அ) தேன் ஒரு டிஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி.

தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் மின்னும் கன்னம்.

மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகளை துருவி ஜுஸ் எடுத்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு… கலர், பளபளப்புக் கூடும். ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு வாஷ் பண்ணுங்கள். தேன், சருமத்தின் சுருக்கங்களைக் போக்கி, கன்னத்தை பளபளப்பாகும்.

ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்… சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும்.முகத்துக்கு மஞ்சள்தூள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது சருமத்தை வறட்சியாக்கி, கன்னங்களைப் பொலிவிழிக்கச் செய்து விடும்.

அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண்ணாததும், கன்னம் ஒட்டிப்போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண்டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் நட்ஸ், டிரை ப்ரூட்ஸ், நிறைய தண்ணீர் சேர்த்துக் கொண்டால் ப்ரெஷ் கன்னம் கிடைக்கும்.

எல்லாம் சூப்பர் இதற்கான டிப்ஸ் ஏதாவது… ப்ளீஸ்… என்பவர்களுக்கு…

பால் – 1 டீஸ்பூன், வெண்ணை – 1 டீஸ்பூன், பார்லித்தூள் – 2 டீஸ்பூன்

சிறிய கிண்ணம் ஒன்றில் இவை மூன்றையும் நுரை வருமாறு நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் க்ரீமை, முகம், கழுத்து, கண்களைச்சுற்றி. என எல்லாப் பகுதிகளிலும் பூசவும்… அரை மணி நேரம் கழித்து, வெது வெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். பிறகு பாருங்கள், கன்னம் வெண்மைப் பொலிவுடன், முகம் மினுமினுப்புடன் பிரகாசிப்பதை காணலாம்.shutterstock 115597345

Related posts

இளமையாக மாற்றும் பேஸ் மாஸ்குகள் -face packs

nathan

முகத்தில் எண்ணெய் வழியுதா? அதை தடுக்க இயற்கை வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை

nathan

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

எண்ணைய் வடியும் முகம் என்ற ஏக்கமா?

nathan

ஒளிரும் பிங்க் நிற சருமத்தை பெற கடலை மாவை இதனுடன் இப்படி கலந்து பயன்படுத்தனும் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

வெள்ளையான சருமம்

nathan

பெண்களே உங்க முகத்தில் அழுக்கு அதிகமா இருக்குற மாதிரி இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

நீங்க கருப்போ சிகப்போ ஆனா பார்க்க பளபளன்னு இருக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan