25.5 C
Chennai
Monday, Dec 23, 2024
1 1531222560
முகப் பராமரிப்பு

உங்களுக்கு உதட்டை சுத்தி மட்டும் ரொம்ப கருப்பா இருக்கா? அப்ப இத படிங்க!

எல்லா காலத்திலும் நாம் அனைவரும் சருமத்தின் அழகைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். விலை மதிப்பான ஒப்பனை பொருட்கள் முதல் நமக்கு மூத்தவர்கள் கூறும் வீட்டுத் தீர்வுகள் வரை அனைத்தையும் முயற்சித்து நமது சருமத்தை பாதுகாக்க முயற்சிக்கிறோம். ஆனால் சில விஷயங்களை நாம் அலட்சியம் செய்கிறோம். அதில் ஒன்று, உதட்டை சுற்றி இருக்கும் கருமை.

இதனை தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதால் உதடுகள் அடர்ந்த கருமை நிறத்தில் மாறும். உங்கள் முகம் என்ன தான் சிவப்பாக இருந்தாலும் கருமையான உதடுகள், உங்கள் அழகை குறைவாகக் காட்டும். ஆகவே உதட்டின் கருமையைப் போக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. நாம் இப்போது அவற்றைப் பார்க்கலாம். இவற்றைப் பயன்படுத்தி உங்கள் உதட்டின் கருமையைப் போக்கி, அழகாக்கலாம்.

எலுமிச்சை சாறு சருமத்தை ப்ளீச் செய்வதற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வு, எலுமிச்சை சாறு. இதில் இயற்கையாகவே சிட்ரிக் அமிலம் இருப்பதால், சரும அணுக்களில் கருமை உண்டாவதை தடுக்கிறது. மேலும் சருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது. ஒரு எலுமிச்சையை எடுத்து பாதியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாதி எலுமிச்சையை எடுத்து உங்கள் உதடுகளைச் சுற்றி தடவி வரவும்.

மஞ்சள் மற்றும் சந்தனம் உதட்டை சுற்றியுள்ள கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு, மஞ்சள் மற்றும் சந்தனக் கலவை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு சிறு கிண்ணத்தில் சிறிதளவு சந்தனத்தூள் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, இவை இரண்டையும் சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை உதடுகளை சுற்றி தடவவும். அரை மணி நேரம் கழித்து அல்லது காய்ந்தவுடன் தண்ணீரால் முகத்தைக் கழுவவும்.

எலுமிச்சை மற்றும் ஆலிவ் எண்ணெய் எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்ர்த்து, இந்த கலவையை உங்கள் உதடுகளுக்கு பயன்படுத்தலாம். உதடுகளில் இந்த கலவையை தடவி, சில நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். ஒரு நாளில் இரண்டு முறை இதனை செய்து வருவதால் நல்ல தீர்வு கிடைக்கும்.

ஓட்ஸ் ஸ்க்ரப் உதடுகளில் இருக்கும் கருமையைப் போக்க மற்றொரு சிறந்த தீர்வு ஓட்ஸ் ஸ்க்ரப். இந்த இயற்கை ஸ்க்ரப் தயாரிக்க, உங்களுக்கு தேவை, ஓட்ஸ், தக்காளி சாறு, மற்றும் ஆலிவ் எண்ணெய். எல்லா மூலப்பொருட்களையும் நன்றாகக் கலந்து, முகத்தில் ஒரு மாஸ்க் போல் தடவவும். சில நிமிடங்கள் கழித்து முகத்தில் நீர் தெளித்து ஸ்க்ரப் செய்யவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

கற்றாழை சூரிய ஒளியால் சேதமடைந்த சருமம் மற்றும் கருமையைப் போக்க கற்றாழை சிறந்த தீர்வாகிறது. கற்றாழை இலையை பறித்து அதில் உள்ள பசையை பிழிந்து எடுக்கவும். இந்த பசையால் உங்கள் சருமம் மற்றும் உதடுகளில் மென்மையாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் இதனை முகத்தில் ஊற விடவும். பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

1 1531222560

Related posts

இயற்கை வழியில் வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

முகக்கருமை நீங்கி ஒரே வாரத்தில் முகம் பொலிவுடன் மாற சூப் டிப்ஸ்……

nathan

முகத்தில் சுருக்கத்தை போக்க என்ன செய்யலாம்?

nathan

தாடியை வளர வைக்க இந்த 9 உணவுகளில் ஒன்றை சாப்பிட்டாலே போதும்!

nathan

ஒரே இரவில் உங்கள் முகத்தை பளபளக்க வைப்பதற்கான 6 எளிய வழிகள்!!!

nathan

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan

நீங்கள் எப்போதும் அழகாய் இருக்க இந்த மார்னிங்க் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..

nathan

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

nathan