23.7 C
Chennai
Monday, Dec 23, 2024
new designer Kurti dress
ஃபேஷன்

புதிய டிசைனர் குர்தி மாடல் சுடிதார்…

அம்ப்ரெல்லா கட் டிசைனர் குர்தி

இந்த டிசைன் பெரும்பாலும் ஜார்ஜட் துணியில், காலர் கழுத்து கொண்ட மாடலாக இருக்கிறது. இக்குர்தி முட்டி வரை நீண்டு அங்கு அரை வட்டமாக குடை போல் வெட்டப்பட்டிருக்கும். இந்த வடிவத்திற்கு பல வித பிரண்ட் கொண்ட துணியே எடுப்பாக இருக்கும். மிக மெல்லிய துணியில் ஆன இக்குர்தி இளம் பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

கைட் (காற்றாடி) டிசைனர் குர்தி

இது மிகவும் வித்தியாசமான கோணத்தில் தைக்கப்பட்டிருக்கும் டிசைனாக இருக்கிறது. இந்த குர்தி இடுப்பு வரை சாதாரணமாக வந்து இடுப்பிலிருந்து கீழே வரும் பகுதி முக்கோண வடிவில் இருக்கும் இந்த முக்கோண பகுதி கால் முட்டி வரையோ அல்லது கணுக்கால் வரையிலோ நீண்டிருக்கலாம்.

ஹை-லோ டிசைனர் குர்தி

இந்த மாடல் குர்தி முன்புறம் குட்டையாகவும், இருபுறங்களிலும் நீண்டும் பல அடுக்குகளாக இருக்கும். இது நீண்ட அகலமான முழு நீள ஸ்கர்ட் போலவும் முன்புற நடுப்பகுதி மட்டும் குட்டையாகவும் இருக்கும்.

ட்ரையோ கட் குர்தி

சிறு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரையில் பலரையும் கவரும் டிசைனாக இந்த குர்தி இருக்கிறது. உட்புற துணி நீளமாக கால் முட்டி வரையிலோ அல்லது கணுக்கால் வரையிலோ இருக்கும். அதன் மேல் உட்புற துணியின் வண்ணத்திற்கு மாற்றான நிறத்தில் வரும் மேற்புற துணி முன்புறம் ஒரு துண்டாகவும், மற்ற இரு புறமும் இரண்டு துண்டாகவும் பிரிந்து நீண்டிருக்கும். இது பெரும்பாலும் சில்க், சில்க்-காட்டன், ரா-சில்க், டஸ்ஸர் போன்ற துணிகளில் போடும்போது அழகாக இருக்கும்.

பேட்-விங் டிசைன்

இது கிட்டத்தட்ட ‘கஃப்தான்’ மாடல் போல் தோன்றும். சிறகை விரித்த வெளவால் போல் தோற்றம் தரும் இந்த டிசைன் அணிந்துக் கொள்ள சவுகரியமாக இருக்கும். மெல்லிய துணிகளில் பல வண்ணங்களும், சிறு பூக்களும் நிறைந்த ஃப்ளோரல் டிசைன் கொண்ட துணிகளில் தைக்கப்படும்போது இந்த குர்தி மிக அழகாக இருக்கும்.

ஃப்ராக் டிசைன்

இது சிறு பெண்கள் அணியும் ஃப்ராக் போல தோற்றம் தரும். மேலேயிருந்து இடுப்பு வரையில் உடலோடு ஒட்டியும், அதற்கு கீழே மடிப்புகளுடன் அகன்றும் ஃப்ராக் போல தோற்றம் தரும் இந்த குர்தி. இதற்கு கால்களோடு ஒட்டி இருக்கும் டைட் ஃபிட் பேன்ட் போட்டால் எடுப்பாக இருக்கும்.

லேபர்ட் டிசைன்

இது பல அடுக்குகளாக இடுப்பிலிருந்து கால் முட்டி வரையிலோ, கணுக்கால் வரையிலோ நீண்டிருக்கும். இந்த குர்தியை பிரன்ட் எதுவும் இல்லாமல் ப்ளெயின் துணியில் போட்டாலும் கூட அழகாக இருக்கும். மிகவும் தளர்வாக இந்த டிசைன் வயதான பெண்களுக்கும் கூட பொருத்தமாக இருக்கும்.

விங்ஸ் டிசைன்

இந்த மாடல் குர்தி இரண்டு துணிகளால் ஆனது. நடுப்பகுதி பூக்கள் அல்லது பிரிண்ட் போட்ட துணியால் தைக்கப்பட்டிருக்கும். உடலின் இருபுறமும் ப்ளென் துணியில், முன்புற துணி அளவிற்கு இடுப்பிற்கு சற்று கீழே வரை நீண்டு அதன் பின்பு அப்படியே நீண்டு கணுக்காலிற்கு சற்று மேலே வரையில் வந்து தொங்கும். முன் மற்றும் பின்புற துணிகள், உடலின் இருபுறமும் இது மாதிரி தொங்கும்போது பார்ப்பதற்கு இறக்கை போல் இருக்கும். இது ஒரு வித்தியாசமான டிசைன் என்று சொல்லலாம்.new designer Kurti dress

Related posts

ஆண்கள் அழகை பேணுவதில் கவனம் வேண்டும்!…

sangika

ஆடி தள்ளுபடியில் அசத்தும் தரமான ஆடைகளின் அணிவகுப்பு

nathan

ஜொலிக்கும் டஸ்ஸர் பட்டு சேலைகள்

nathan

தக தக தங்கம்!

nathan

வளையல் வண்ண வளையல்!!

nathan

விழாக்கால அழகு பராமரிப்பிற்கு….

nathan

நளினமான விரல்களுக்கேற்ப ஜொலிக்கும் வைர மோதிரங்கள்

nathan

பெண்களே உங்கள் உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு..?

nathan

மலர்களின் தோரணமாய் – ஷிக்கன்காரி சேலைகள்

nathan