26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
palakpaanir
அறுசுவைசைவம்

பாலக் பன்னீர்

தேவையான பொருட்கள்

  • பசலிக் கீரை – 200 கிராம்
  • தண்ணீர் – 1 கப்
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 1 கப் (மெல்லியதாக வெட்டியது)
  • தக்காளி – 1 கப் (சதுர வடிவில் வெட்டியது)
  • பச்சை மிளகாய் – 1
  • முழு முந்திரி பருப்பு – 4
  • உப்பு – 1 டீ ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
  • ப்ரஷ் க்ரீம் – 2 டேபிள் ஸ்பூன்
  • பன்னீர் துண்டுகள் – 1 கப்

palakpaanir

செய்முறை

கீரையை சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்பு வெட்டிய தக்காளி பழத்தை சேர்த்து கிளறி விடவும்.

நறுக்கிய பச்சை மிளகாய் , முந்திரி பருப்பை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த கலவையை அதில் கொட்டி நன்றாக வதக்கவும்.

வதங்கியவுடன் சுவைக்கேற்ப உப்பு , மிளகாய் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்றாக கலந்து ஒரு நிமிடம் சமைக்கவும்.

வேக வைத்த கீரையை மிக்ஸியில் சேர்த்து அரைத்து கடாயில் உள்ள மசாலா கலவையுடன் சேர்த்து மறுபடியும் ஒரு நிமிடம் வரை சமைக்கவும்.

இறுதியாக துண்டுகளாக வெட்டிவைத்துள்ள பன்னீரை கறியில் சேர்க்கவும். விரும்பினால் பன்னீரை வறுத்துக்கொள்ளலாம்.

சுவையான பன்னீர் ரெசிபி ரெடி

Related posts

சம்பா கோதுமை புலாவ்

nathan

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

சைடிஷ் சேனைக்கிழங்கு மசாலா வறுவல்

nathan

முருங்கைக்காய் அவியல்

nathan

சுவையான முட்டை மிளகு மசாலா

sangika

ஈரப்பலா ஸ்பெசல் கறி, சிப்ஸ்

nathan

சூப்பரான மீல் மேக்கர் – மஷ்ரூம் பிரியாணி

nathan

ராகி பூரி

nathan

சத்தான பட்டர் பீன்ஸ் – கேரட் பொரியல்

nathan