24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
1 1527762864
நக அலங்காரம்

உங்க நகமும் அழகா இருக்கணுமா? அப்ப இத படிங்க!

நகத்தை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் பல்வேறு காஸ்மெட்டிக் பொருட்களும் வந்துவிட்டன. நகங்கள் வலுவில்லாமல் இருக்க ஒரு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பதே

நீங்கள் மெனிக்யூர் போன்றவற்றை செய்து வந்தாலும் நகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற பிற கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது.

நகப் பராமரிப்பு பூண்டு மற்றும் எலுமிச்சையில் மினெரல்ஸ் மற்றும் பிற சத்துக்கள் மிக அதிக அளவில் உள்ளதால் இது உங்கள் நகத்தை வலுப்படுத்தி உடையாமல் இருக்கவும் உதவும். நகத்தை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் பல்வேறு காஸ்மெட்டிக் பொருட்களும் வந்துவிட்டன. நகங்கள் வலுவில்லாமல் இருக்க ஒரு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பதே. நீங்கள் மெனிக்யூர் போன்றவற்றை செய்து வந்தாலும் நகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற பிற கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. நகத்தை கடினப்படுத்தி ஆரோக்கியமாகவும் கடினமாகவும் வைத்துக்கொள்ள 100% சதவீதம் இயற்கை தீர்வுகள் உதவுகிறது.

வலுவூட்ட பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு நகங்களை வலுப்படுத்தவும் அழகாக்கவும் முடியும். பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தயாரித்த இந்த இயற்கை மருந்து நகம் வளரும் போது பிரிவு ஏற்பட்டால், நகத்தின் நிலையை மேம்படுத்த உதவும். இது அவசியமான ஊட்டச்சத்துக்களை ஒருங்கிணைத்து இதன்மூலம் நகத்தின் மேல் பகுதியை வலுப்படுத்த உதவுகிறது.

ஊட்டச்சத்துக்கள் பூண்டில் சல்பர் காம்பௌண்ட் உள்ளதால் அது டேமேஜ் ஆன எந்த மேற்பரப்பையும் சரிசெய்து வலிமையையும் பிரகாசத்தையும் தருகிறது. சல்பர் பிரீ ரேடிக்கல்ஸ்ஸை தடுத்து ஃபங்கஸ் அல்லது மற்ற தொற்று மற்றும் நோய்கள் வராமல் தடுக்கிறது. இது வைட்டமின் C க்கு ஒரு முக்கியமான மூலதனமாக விளங்குகிறது. போதுமான அளவு கொலாஜென் பராமரிக்க உதவும் ஒரு ஊட்டச்சத்தாகவும் விளங்குகிறது. மேலும் இந்த ஊட்டச்சத்து வலுவான மற்றும் ஆரோக்கியமான நகங்களுக்கு அவசியம்.

இது உங்கள் நகங்களில் உள்ள இயற்கையான எனாமலைப் பாதுகாக்க கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற மினெரல்ஸைத் தருகிறது. மேலும் நீங்கள் நகங்களுக்கு வைட்டமின் E கேப்ஸுல் பயன்படுத்தலாம். ஏனெனில் இது ஹைட்ரேட், மீண்டும் உருவாக்க மற்றும் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

வீட்டில் பராமரிக்கும் வழிமுறை வீட்டிலேயே நம்முடைய நகங்களை அழகாகப் பராமரித்துக் கொள்ள முடியும். இதற்கென தனியே பியூட்டி பார்லருக்குச் செல்வது வீண் செலவு. அங்கு பராமரிப்பதை விட நம்முடைய வீட்டிலேயே நகங்களை அழகாகப் பராமரித்துக் கொள்ள முடியும். அதற்குத் தேவைப்படும் பொருட்கள் எல்லாம் நம்முடைய வீட்டிலேயே கிடைக்கக்கூடிய, எளிதில் வாங்கக் கூடியதாக இருக்கும். மேலும் இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது. இதை நீங்கள் மென்மையான நகங்களிலும் பயன்படுத்தலாம்.

தேவையானவை 2 பூண்டு பல் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 வைட்டமின் E கேப்ஸுல் 1 பாட்டில் கிலேயர் நெயில் பாலிஷ்

செய்முறை பூண்டு பல்லை நசுக்கி அதில் எலுமிச்சை சாறு மற்றும் வைட்டமின் E கேப்ஸுல் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். 15 – 20 நிமிடம் கழித்து இந்த கலவையை கிலேயர் நெயில் பாலிஷில் கலந்து வைத்துக் கொள்ளவும். உங்கள் நகத்தில் இருக்கும் நெயில் பாலிஷை நீக்கி, சோப்பு கொண்டு கையை கழுவி, நகத்தின் மீது செய்து வாய்த்த கலவையை போடவும். போடும் போது முழு நகத்திலும் போடவும். சில மணிநேரம் கழித்து இதை நீக்கவும். இதை தினசரி செய்து வர உங்கள் நகம் வலுவாகவும் விரைவாகவும் வளரும்.

வேறு சில வழிமுறைகள் மென்மையான நகங்களுக்கு இந்த வீட்டு வைத்தியம் ஒரு பயனுள்ள தீர்வாக அமையும். நகம் உடையாமல் இருக்கவும் நிறம் மாறாமல் இருக்கவும் சில பழக்கங்கள் அவசியமாக உள்ளது. அதற்கு கீழே குறிப்பிட்டவற்றை பின்பற்றவும். நிறைய ப்ரோடீன்ஸ் ஆன்டி ஆக்ஸிடன் மற்றும் மினெரல்ஸ் கொண்ட ஹெல்த்தி டயட் டை உட்கொள்ளவும். தினசரி குறைந்தபட்சம் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும் கெமிக்கல் சம்பந்தமான பொருளை சுத்தம் செய்யும் போது க்ளோவ்ஸ் பயன்படுத்துவது நல்லது. நகங்களின் மேற்பரப்பில் மற்றும் வெட்டுக்காயங்கள் போன்ற இடத்தில் தினசரி நீரேற்றம் தேவை.

தவிர்க்க வேண்டியவை நகம் கடிப்பதை தவிர்க்கவும் நகத்தை கருவிகளாக பயன்படுத்த கூடாது க்யூட்டிக்கேல் வெட்டுவது கெமிக்கல் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது நகம் அழுக்காக இருக்க கூடாது1 1527762864

Related posts

எளிதாக எளிய நகங்களை வடிவமைப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கை, கால்களின் வசீகரம் கூட நகங்களை பாதுகாத்தல்!…

nathan

நகங்களில் கோடி நிலாக்கள்! வியக்க வைக்கும் நெயில் ஆர்ட்!

nathan

சரும நிறத்திற்கேற்ற நெயில் பாலிஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

நகங்களை அற்புதமாக வெளிப்படுத்தும் நெயில்பாலிஷ் கலவைகள்

nathan

வீட்டிலேயே ‘நெய்ல் ஆர்ட்’ – எளிய டிப்ஸ்

nathan

கோடை கால நெயில் ஆர்ட்

nathan

ஆரோக்கியமான நகங்களுக்கு செய்ய வேண்டியவை!…

sangika

இலகு நக அலங்காரம்

nathan