201806041309117207 1 fruti skin. L styvpf
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வாழைப்பழத் தோலை பயன்படுத்தினால்……?

வாழைப்பழத்தோலுடன் பால் சேர்த்து சருமத்துக்கு அழகு சேர்க்கலாம். சரும வறட்சி, எண்ணெய் பசைத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம். முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்னர் பாலை முகத்தின் அனைத்து பகுதியிலும் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சிடும்.201806041309117207 1 fruti skin. L styvpf

தேனுடன் வாழைப்பழ தோலை சேர்த்து பயன்படுத்தினால் முகப்பருக்களை போக்கலாம். சருமத்தில் ஈரப்பத தன்மையை தக்கவைக்கலாம். சரும வறட்சியை கட்டுப்படுத்தலாம். முகப் பருவால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கலாம். இதற்காக வாழைப்பழ தோலை கூழாக்கி அதனுடன் தேன் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் ஒருதடவை இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் கற்றாழை இலை ஜெல்லுடன் வாழைப்பழ தோலை சேர்த்து பயன்படுத்தி நிரந்தர தீர்வு காணலாம். இரண்டையும் சேர்த்து பசை போல் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்துவந்தால் முகப்பரு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.

வாழைப்பழ தோலை கூழாக்கி அதனுடன் மஞ்சள் தூள் கலந்தும் முகத்தில் பூசி வரலாம். முகப்பரு பிரச்சினையால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க இது உதவும். இரண்டு நாட் களுக்கு ஒருமுறை மேற்கண்ட கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வரலாம்.

ரோஸ் வாட்டருடன் வாழைப்பழ தோல் கூழை கலந்தும் சருமத்திற்கு பொலிவு சேர்க்கலாம்.

Related posts

நாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி!…

nathan

இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

nathan

முகம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க சில எளிய குறிப்புகள்

nathan

சூப்பரான முந்திரி காளான் மசாலா:

nathan

வீட்டிலேயே பிளீச் செய்வது எப்படி?

nathan

அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம்….தெரிஞ்சிக்கங்க…

nathan

90ஸ் கனவுக்கன்னி நடிகை ஹீரா.. தற்போது எப்படி இருக்கிறார்

nathan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்

nathan

30 வயதை நெருங்குபவரா நீங்கள்? கட்டாயம் இவற்றை செய்யுங்கள்!

sangika