24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
110425 hair 700
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முயன்று பாருங்கள் உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகுத் தொல்லை தீரும்.

கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தல். சிறிதளவு தயிரை தலையில் தேய்த்து சிறிது நேரத்தில் சீயக்காய் அல்லது ஷாம்பு தேய்த்து குளித்தல்.110425 hair 700

பூச்சித்தாக்குதலினால் பொடுகு ஏற்படுவது இயற்கை.அதனால் அந்நேரங்களில் ரசாயன ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்த்து வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தல்.

கறிவேப்பிலை,துளசியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தல். வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து,அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வருதல்.

எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய்எண்ணெய் கலந்து தலையில்தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம்பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சைபயிறுமாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்புபோட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்தல்.நெல்லிக்காய் தூள், வெந்தயப்பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்து குளிக்கவேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்துவர வேண்டும்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.சோற்றுக்கற்றாழை தேய்த்தும் குளிக்கலாம்.நெய், பால், வெண்ணெய் முதலிய கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

இந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை கிடைக்கிறது.. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடிகளைக் காப்பாற்றலாம்.

பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தது.

நல்ல மிளகு – 15-20
வேப்பிலை – 2 கைப்பிடி

இரண்டையும் அரைத்துத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.

தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை கழுவினாலும் பொடுகு மறைவதுடன் முடியும் பளபளப்பாகும்.பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு நீங்குவதோடு நல்ல கண்டிஷனராகவும் பயன்படும்.

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தல்..

தேங்காய் பால் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 4 டீ ஸ்பூன்
வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்தது

இம்மூன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளிப்பதால். கூந்தல் நுனி வெடிக்காமல் நீண்டு வளருவதுடன் பொடுகும் மறையும்.

முட்டை வெள்ளைக் கரு, தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில்
தேய்த்துக் குளித்தல்.வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் அரைத்துத் தலைக்குத் தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்தல்.

Related posts

தலையில் ஏற்படும் அதிக அரிப்பை குறைக்க இத முயற்சி பண்ணுங்க!

nathan

உறுதியான தலை முடிக்கு……

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பின் ஏற்படும் கூந்தல் உதிர்தலைத் தடுக்க சில டிப்ஸ்…

nathan

இதனை ஒரு வாரம் பயன்படுத்தினாலே போதும்!! இளநரையை முழுமையாக போக்க வேண்டுமா:?

nathan

அடர் கூந்தலுக்கு அசத்தலான ஹேர் ஸ்பிரே! வெந்தயம் இப்படியும் பயன்படுமா?

nathan

கோடையில் கூந்தல் பராமரிக்கும் வழிகள்

nathan

சுருள் முடியை மெயின்டெய்ன் செய்ய

nathan

ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கும் முறை

nathan

ஆண்களுக்கு முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்க காரணமாக இருக்கும் பழக்கவழக்கங்கள்!!

nathan