1.உங்கள் கூந்தலை உங்கள்முகத்துக்கு ஏற்ற ஒரு வடிவில் வெட்டிக்கொள்க. முடியை வெட்ட விருப்பம் இல்லாதவர்கள் முடியின் நுனியை நேர்த்தியான வடிவில் வெட்டி கொள்க. குளித்தபின் கூந்தலுக்கு கன்டிசனர் பயன்படுத்துவதால் கூந்தலை மிருதுவாகதாக பேணலாம்.
2.கை மற்றும் கால்களின் நிறத்தை உங்கள் உடலின் நிறத்திற்கு பராமரியுங்கள். எலுமிச்சை சாற்றில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, அதனை கை மற்றும் கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்த பின் மாய்ஸ்சுரைசர் தடவி வர வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால், கருமைகள் நீங்கும்.
3.நகங்களை நேர்த்தியாக வெட்டி விரும்பினால் பொருத்தமான நெயில் போலிஸ் போட்டு அழகுபடுத்தலாம்.
4.உதடுகளை தொடர்ந்து வெஸ்லீன் அல்லது பட்டர் தடவுவதன் மூலம் கருமை நிறத்தைப்போக்கலாம். விரும்பினால் மெல்லிய நிறங்களை பயன்படுத்தி அழகு படுத்தலாம்.
5. கிழமையில் ஒருநாள் முகத்துக்கு பெக்போடுவதனால் முகத்தை தொடர்ந்து பொலிவாகவும் அழகாகவும் பேணலாம்.
முகத்ததை பலிச்சிட செய்ய சில டிப்ஸ்..
- 2 ஸ்பூன் யோகார்டுடன் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் தேன் கலந்து முகத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால், பொலிவான முக அழகினைப் பெறலாம்.
ஒரு முட்டையை எடுத்து அதை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதனுடன் சில - துளி எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். பின் அது நன்றாக காய்ந்ததும் தண்ணீரில் கழுவ வேண்டும். இதனால் கருமை நிறம் மறைந்து முகம் வெண்மையாக இருக்கும்.