27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
maxresdefault 2
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும்

ஆரோக்கியம் கருதி பழங்களை சாப்பிட்டு வரும் பெண்கள், அழகுக்காகவும் அதனை தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். பெண்கள் வழக்கமாக பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களில் ரசாயனம் கலந்திருக்கிறது. அது சிலரது சருமத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. பழங்களால் கிடைக்கும் அழகு எந்த பக்கவிளைவும் இல்லாததாக இருக்கிறது.maxresdefault 2

பழங்கள் அழகுக்காக எப்படி பயன்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆப்பிள்: இது சருமத்திற்கு பொலிவு தரும் ‘ஸ்கின் டோனர்’. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும். ஆப்பிளை கூழ்போல் ஆக்கி, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.

மாம்பழம்: எல்லாவித சருமத்திற்கும் இது ஏற்றது. அதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி போன்றவை சருமத்திற்கு நிறத்தையும், பளபளப்பையும் தரும். நன்றாக பழுத்த பழத்தின் தோலை நீக்கிவிட்டு, தசைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பிசைந்து தினமும் முகத்தில் பூச வேண்டும். சருமத்தின் சுருக்கங்களை இது போக்கும்.

ஆரஞ்ச்: வைட்டமின் சி நிறைந்திருக்கும் பழம் இது. இரண்டாக வெட்டி, ஒரு பகுதியால் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்தால் சருமம் பிரஷ் ஆகிவிடும். பழத்தோலை நகங்களில் தேய்த்தால் கறை நீங்கும். தோலை வெயிலில் காயவைத்து தூளாக்கி பாதுகாத்திடுங்கள். அதில் முல்தானிமெட்டியும், தண்ணீரும் கலந்து குழைத்து முகத்தில் ‘பேக்’ செய்யலாம். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவி விட்டால் முகம் பளிச் சிடும்.

நேந்திரன் பழம்: பழத்தின் உள்ளே கறுப்பாக இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு கூழாக்கி முகத்தில் பூச வேண்டும். காய்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். பழத்தில் இருக்கும் பொட்டாசியம் சருமத்திற்கு புத் துணர்ச்சியை தரும்.

திராட்சை: எண்ணெய் தன்மை கொண்ட, பருக்கள் உருவாகும் சருமத்திற்கு இது மிகவும் ஏற்றது. தினமும் திராட்சை சாறு பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.

மாதுளை: சுருக்கத்தையும், கருப்பு படையையும் போக்கும் தன்மைகொண்டது. மாதுளையை அரைத்து முகத்தில் பூசி கழுவி விட்டால் முகமும் மாதுளை போல் பளிச்சிடும். செயலிழந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உருவாக்கும் திறன் இதற்கு உண்டு.

பப்பாளி: பப்பாளி பழக்கூழை தினமும் முகத்தில் பூசிக்கொள்ளலாம். சருமத்திற்கு நிறமும், மினிமினுப்பும் கிடைக்கும். பப்பாளி கூழ், ஓட்ஸ், தேன் போன்றவைகளை கலந்து ‘பேஸ் பேக்’காக பயன்படுத்தலாம். பழங்கள் பெண்களின் சருமத்தை பளிச்சிடவைக்கிறது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…மர்மங்களுடன் புதைந்துபோன இலங்கையின் அதிசயம்….

nathan

இந்த ஒரு வகை பானங்களைத் தவிர்த்தாலே போதுமாம் தொப்பையை கரைக்க…

nathan

எல்லா க்ரீமையும் தூக்கி வீட்டு இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தி பாருங்கள்..

nathan

முகத்திற்கு முத்தான சில யோசனைகள்

nathan

தளர்ந்த சருமத்தை இளமையாக மாற்றும் காபி ஸ்க்ரப் !!

nathan

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

உங்க புருவமும் கண் இமையும் அடர்த்தியா இருக்கனும்னு ஆசையா?அப்ப இத படிங்க!

nathan

குளிக்கும் முன் 10 நிமிஷம் இதை மட்டும் செய்து பாருங்க! சூப்பர் டிப்ஸ்…

nathan

உங்களுக்கு தெரியுமா தேனை முகத்தில் தடவலாமா?… தடவினா எனன ஆகும்?

nathan