28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
ci 1525260156
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா இந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்

நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு மிக முக்கியமான அழகு சார்பான தலைவலி தலைமுடி உதிருதல். நம் வாழ்வில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக நாம் எதிர்கொள்ளும் அல்லது எதிர்கொள்ளப்போகும் பிரச்சனை தலைமுடி உதிர்தல். மாறிவரும் சுற்றுச்சூழல் மாற்றங்களினாலும், நீர் மாசுபடுவதாலும், ஹார்மோன்க சமநிலையின்மையாலும் தலைமுடி உதிருதல் ஏற்படுகிறது.

ப்ரிம்ரோஸ் எண்ணெய் சிலருக்கு தலை முடி உதிர்தல் தற்காலிக பிரச்சனையாக இருக்கும். சிலருக்கு அது ஒரு தொடர் கதையாக இருக்கும். தலைமுடி உதிர்வதற்கு பல காரணிகள் உள்ளன, காரணிகள் எதுவாயினும் அதை தடுக்க அல்லது சரி செய்ய சில வழிகள் உள்ளன. அதில் ஒன்று மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய்.

மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் மஞ்சள் நிறம் கொண்ட ஒரு வகை மலரில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய். மாலை ப்ரிம்ரோஸ் என்பது வசந்த காலம் மற்றும் வெயில் காலத்தில் மலரக்கூடிய ஒருவகை காட்டு செடி. இந்த செடி வகை வடக்கு அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது. இது ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த செடியின் விதைகளில் இருந்து எண்ணெய் மற்றும் மருந்துகள் தயாரிக்க தேவையான மூலப்பொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் மூலம் எவ்வாறு தலை முடி உதிர்வை குறைப்பது மற்றும் தலை முடியை மீண்டும் வளர செய்வது எப்படி என்று இங்கு காணலாம்.

 

மாலை ப்ரிம்ரோஸ் எண்ணையின் உபயோகங்கள். மாலை ப்ரிம்ரோஸ் எண்ணையில் கொழுப்பு அமிலங்களான(fatty acid) எதிர் ஆக்சிகரணிகள் (antioxidents) மற்றும் காமா லினோலெனிக் அமிலம்(gamma linolenic acid) ஆகியன மிக அதிக அளவில் உள்ளன. இது தலையில் உள்ள தோலுக்கு அதில போஷாக்கையும் அதிக எதிர்ப்பு சக்தியையும் வழங்குகின்றன. இது தலையில் உள்ள செல்களை தூண்டி தலை தோலுக்கு தேவையான சத்துக்களை அளித்து உதிர்ந்த தலை முடியை மீண்டும் வளர செய்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட தலை முடிக்கு(damaged hair) தேவையான சத்துக்களை அளித்து முடி உதிராமல் பாதுகாக்கிறது. மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயின் சில முக்கியமான பயன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மாலை ப்ரிம்ரோஸ் எண்ணையில் அதிர் அழற்சி(anti inflammatory) பண்புகள் உள்ளன அவை தலை தோலுக்கு(scalp ) தேவையான உதவிகளை செய்து தலையில் பொடுகு வராமல் தடுக்கும். இது தலை முடி உதிர்வை தடுக்க உதவுகிறது. மாலை ப்ரிம்ரோஸ் எண்ணையில் உள்ள காமா லினோலெனிக் அமிலம்(gamma-linolenic acid) தலை தோலை உறுதிப்படுத்தி, தலை முடி வளர்தலை மீண்டும் உருவாக்குகிறது. மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் தலை தோலுக்கு(scalp) ஊட்டமளிக்கிறது இதன் மூலம் தலை முடி வளர்தல் அதிகரிக்கிறது. மாலை ப்ரிம்ரோஸ் எண்ணையில் உள்ள எதிர் ஆக்சிகரணிகள் (anti oxidents) தலை தோலை(scalp) வலுப்படுத்தி தலை முடி உதிர்வதை தடுத்து அதற்கு தேவையான பாதுகாப்பை அளிக்கிறது.

எப்படி பயன்படுத்துவது?

முறை 1 : மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயின் மூலம் தலை முடி உதிர்வை தடுத்தல் தேவையான பொருட்கள் 1 தேக்கரண்டி மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் செய்ய தேவையான நேரம் 2 நிமிடங்கள் சிகிச்சை நேரம். 45 நிமிடங்கள் செய்முறை எண்ணெயை 30 நொடிகள் லேசாக சூடாக்கவும். எண்ணெயை தலையில் தேய்த்து 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் 30 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் ஷாம்பு மூலம் தலையை கழுவி பின்னர் காற்றில் உலர்த்தவும். செய்யும் காலம் வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்யவும். எப்படி வேலை செய்யும்?

இந்த மருத்துவ முறை தலை முடி உதிர்வதை தடுப்பது மட்டும் அல்லாது தலையில் ஏற்படும் பொடுகையும் குறைக்கவல்லது பொடுகுகள் இல்லையெனில் தலைமுடி உதிர்வது கட்டுக்குள் வரும் எனவே இந்த மருத்துவ முறை தலையில் உள்ள பொடுகு பிரச்சனையையும் சரி செய்யும். இதை தொடர்ந்து செய்து வரும் போது தலை முடி அடர்த்தியாவதுடன் முடியின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

முறை 2 : தேங்காய் எண்ணெய் மற்றும் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயின் மூலம் தலை முடி உதிர்வை தடுத்தல் தேவையான பொருட்கள் 1 தேக்கரண்டி மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் செய்ய தேவையான நேரம் 2 நிமிடங்கள் சிகிச்சை நேரம். 45 நிமிடங்கள்

செய்முறை தேங்காய் எண்ணெய் மற்றும் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை சரி விகிதத்தில் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். எண்ணெய் கலவையை 30 நொடிகள் லேசாக சூடாக்கவும். எண்ணெய் கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் 30 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் ஷாம்பு மூலம் தலையை கழுவி பின்னர் காற்றில் உலர்த்தவும். செய்யும் காலம் வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்யவும்.

எப்படி வேலை செய்யும்? தேங்காய் எண்ணெய் ஒரு வகை ஊடுருவும் எண்ணெய் வகை. இது மண்டையோட்டின் உள்ள துவாரங்களின் வழியே ஊடுருவி செல்லும் தன்மை கொண்டது. இது மாலை ப்ரிம்ரோஸ் எண்ணையின் தன்மையோடு இணைந்து செயல்படும்போது ஒரு சிறந்த மருத்துவ பண்புகள் கொண்ட கலவையாகிறது. இதன் மூலம் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணையின் திறன் கூடுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் கொழுப்பு அமிலங்கள் தலை தோலுக்கு தேவையான ஊட்டமளிக்கின்றன. இது தலை முடி உதிர்வதை தடுத்து தலைமுடியின் வேரில் இருந்து பலம் கொடுக்கிறது. இதன்மூலம் தலைமுடி உதிர்வது கட்டுப்படுத்தப்படும் மேலும் உதிர்ந்த தலைமுடி மீண்டும் வளரும்.

முறை 3 : ஆலிவ் எண்ணெய் மற்றும் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயின் மூலம் தலை முடி உதிர்வை தடுத்தல் தேவையான பொருட்கள் 1 தேக்கரண்டி மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் செய்ய தேவையான நேரம் 2 நிமிடங்கள் சிகிச்சை நேரம். 45 நிமிடங்கள்

செய்முறை ஆலிவ் எண்ணெய் மற்றும் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை சரி விகிதத்தில் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். எண்ணெய் கலவையை 30 நொடிகள் லேசாக சூடாக்கவும். எண்ணெய் கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் 30 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் ஷாம்பு மூலம் தலையை கழுவி பின்னர் காற்றில் உலர்த்தவும். செய்யும் காலம் வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்யவும்.

எப்படி வேலை செய்யும்? ஆலிவ் எண்ணெய் மிகச் சிறந்த தலை கண்டிஷனர். இது தலையில் உள்ள அழுக்குகளை அகற்றி தலை முடியின் வேரில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதனை மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயுடன் சேர்க்கும் போது தலை முடி உதிர்த்த இடத்தில் மீண்டும் தலை முடி உதிர்வதை தூண்டி தலை முடியை பலப்படுத்துகிறது

முறை 4 : ஆமணக்கு எண்ணெய் மற்றும் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயின் மூலம் தலை முடி உதிர்வை தடுத்தல் தேவையான பொருட்கள் 1 தேக்கரண்டி மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் 1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் செய்ய தேவையான நேரம் 2 நிமிடங்கள் சிகிச்சை நேரம். 45 நிமிடங்கள்

செய்முறை ஆமணக்கு எண்ணெய் மற்றும் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை சரி விகிதத்தில் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். எண்ணெய் கலவையை 30 நொடிகள் லேசாக சூடாக்கவும். எண்ணெய் கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் 30 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் ஷாம்பு மூலம் தலையை கழுவி பின்னர் காற்றில் உலர்த்தவும். செய்யும் காலம் வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்யவும்.

எப்படி வேலை செய்யும்? ஆமணக்கு எண்ணெய் அதிக புரத சத்து கொண்டது. இது தலையின் மேல் தோலில் உள்ள உள்ள இடைவெளியை குறைக்க உதவுகிறது. இதில் மேலும் அதிக அளவில் ரிஸினோலெயிக் அமிலங்கள் உள்ளன இது தலைமுடி மீண்டும் வளர்வதை தூண்டும் ஆற்றல் மிக்கது. மேலும் இது தலை முடி வளரும் வேகத்தை அதிகரிக்க உதவும்

முறை 5 : கருப்பு திராட்சை வத்தல் எண்ணெய் (மணத்தக்காளி வகை) மற்றும் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயின் மூலம் தலை முடி உதிர்வை தடுத்தல்

தேவையான பொருட்கள் 1 தேக்கரண்டி மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் 1 தேக்கரண்டி கருப்பு திராட்சை வத்தல் எண்ணெய் செய்ய தேவையான நேரம் 2 நிமிடங்கள் சிகிச்சை நேரம். 45 நிமிடங்கள்

செய்முறை கருப்பு திராட்சை வத்தல் எண்ணெய் மற்றும் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை சரி விகிதத்தில் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். எண்ணெய் கலவையை 30 நொடிகள் லேசாக சூடாக்கவும். எண்ணெய் கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்னர் 30 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் ஷாம்பு மூலம் தலையை கழுவி பின்னர் காற்றில் உலர்த்தவும். செய்யும் காலம் வாரத்திற்கு 3 முதல் 4 முறை செய்யவும்.

எப்படி வேலை செய்யும்? கருப்பு திராட்சை வத்தல் எண்ணெய், தலைமுடி உதிர்வதை தடுக்கும் மிகச்சிறந்த மூலப்பொருள். கருப்பு திராட்சை வத்தல் எண்ணெயில் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயில் இருப்பதைவிட இரு மடங்கு காமா லினோலெனிக் அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளன. இதை மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயுடன் கலக்கும்போது அது மிகுந்த சக்தியுடன் வினை புரிகிறது இதன்மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுக்க ஒரு மிகச்சிறந்த தீர்வு கிடைக்கிறது.

மாலை ப்ரிம்ரோஸ் உட்கொள்ளுதல் இந்த எண்ணெய் மாத்திரை(capsule) வடிவிலும் உள்ளது. இந்தியாவில் இந்த எண்ணெய் மற்றும் மாத்திரைகள் பல்வேறு வலைதளங்களில் விற்கப்படுகிறது. மேலும் இயற்கை அங்காடிகளில் இந்த வகை எண்ணெய் மற்றும் மாத்திரைகள் விற்பனைக்காக உள்ளது. மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெயை மாத்திரைகளாக உட்கொள்வதன் மூலமும் தலைமுடி உதிர்வதை குறைக்க முடியும் இந்த மருந்து மேலும் பல உடல் வலிகளுக்கு நிவாரணியாகும். அதற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. காலை மற்றும் மாலை மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் தலைமுடி உதிர்வதை குறைக்கவும் மேலும் வளரும் முடியின் வேகத்தை அதிகரிக்கவும் முடியும். 500mg அளவிற்கு தினமும் காலையும் மாலையும் எடுத்து கொள்ளுதல் சிறந்த தீர்வை கொடுக்கும். இந்த மாத்திரைகள் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் முடி உதிர்வது தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வுகள் அளிக்கும். இது ஆண்களைவிட பெண்களுக்கே மிகுந்த பலன் தரும் வழியாகும்.

பயோட்டின் மற்றும் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் பயோட்டின் தலை முடி ஆரோக்கியத்திற்க்கான வைட்டமின் ஆகும். மருத்துவர்கள் தலைமுடி தொடர்பான பிரச்சனை உருவாகும் போது இந்த பயோட்டின் விட்டமின் மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பர். பயோட்டினில் வைட்டமின் பி-காம்ப்லெஸ் (b complex) உள்ளது. இதில் உள்ள கொழுப்பு(fat), கார்போஹைட்ரெட், அமினோ அமிலம்(amino acids) போன்றவை உடலில் வளர்சிதை மாற்றம் உருவாக உதவும். இதன் மூலம் தலை முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் அது தலை முடி வளர்வதை அதிகரிக்கும் அதற்கு பயோட்டின் வைட்டமின் உதவும். பயோட்டின் உடன் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் சேர்க்கும் போது அது சிறந்த பலனை அளிக்கும்.இந்த மருத்துவ வழி முறைகளை கையாளும் போது ஒரு சிறந்த மருத்துவரைச் சந்தித்து அவர் மூலம் மருந்தளவு மற்றும் தேவையான ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. ஏதேனும் அழற்சி ஏற்பட்டால் அதற்கு செய்ய வேண்டிய பின் நடைமுறைகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.

செய்ய வேண்டியவை. மருத்துவரை சந்தித்து மாத்திரையை உட்கொள்ளும் பற்றி ஆலோசிப்பது நல்லது. மருத்துவருக்கு உங்களது மருத்துவ வரலாறு(medical history) தெரிந்திருத்தல் அவசியம். மருத்துவர் மூலம் எவ்வளவு மாத்திரை சாப்பிட வேண்டும் மேலும் மாத்திரையின் மருந்தளவு எவ்வளவு என்பதை கேட்டறிதல் அவசியம். தலைக்கு மேற்பூச்சாக உபயோகிக்கும்போது மருத்துவரின் ஆலோசனை அவசியமற்றது. எண்ணையுடன் வைட்டமின் சி மாத்திரைகள் உட்கொள்ளும் போது அது மேலும் சிறப்பான செயலாற்றலை வழங்கும். மருத்துவரின் ஆலோசனையோடு தகுந்த வைட்டமின் சி மருந்துகளை பெற்றுக்கொள்ளவும்.ci 1525260156

Related posts

உங்களுக்கு வெள்ளை முடி இருக்கா? அப்ப இதை டிரை பண்ணுங்க

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் மசாஜ்

nathan

எப்போதும் கூந்தல் மிருதுவாக இருக்க வேண்டுமா? இந்த ரெசிபி ட்ரை பண்ணுங்க

nathan

கூந்தல் கருமையான நிறத்துடன் செழித்து வளர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பொடுகுத் தொல்லைக்கு தீர்வு காண்பது எப்படி?அப்ப இத படிங்க!

nathan

கொலாஜன் ஹேர் மாஸ்க்! முடி உதிர்வு அதிகம் இருப்பவர்கள் மாதம் இருமுறை இந்த மாஸ்க் போடுவதன் மூலம் முடி வளர்ச்சி ஆரொக்கியமாக இருக்கும்.

nathan

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா

nathan

முடிப் பிளவுகளை தடுக்கும் வழிகள்

nathan

முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் இவற்றைக் கட்டுப்படுத்தத் தேவையான கூந்தல் சிகிச்சைதான் ‘ஹேர் ஸ்பா’

nathan