27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Pulisadam Adukkala
அறுசுவைசைவம்

புளி சாதம் எப்படிச் செய்வது?

என்னென்ன தேவை?

பச்சரிசி – 3 கப்,
உப்பு – தேவைக்கு,
கடலைப்பருப்பு – 8 டேபிள்ஸ்பூன்,
கெட்டியான புளிக் கரைசல் – 1 கப்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்.Pulisadam Adukkala

வறுத்து அரைக்க…

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6,
எள் – 5 டீஸ்பூன்,
வெந்தயம் – 1½ டீஸ்பூன்.

தாளிக்க…

நல்லெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 1,
கறிவேப்பிலை – 1 கொத்து,
வேர்க்கடலை – 5 டேபிள்ஸ்பூன்,
உடைத்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 2 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

வறுக்க கொடுத்த பொருட்களை வறுத்து அரைக்கவும். வெறும் கடாயில் அரிசி, கடலைப்பருப்பை லேசாக நிறம் மாறும் வரை வறுக்கவும். குக்கரில் புளிக்கரைசல், 5 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், வறுத்து கழுவி சுத்தம் செய்த அரிசி, பருப்பு அனைத்தையும் கலந்து மூடி வெயிட் போடாமல் அடுப்பில் வைக்கவும். ஆவி வந்ததும் குக்கரை திறந்து, ஒரு கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து புளி சாதத்தில் கொட்டி, அரைத்த பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து குக்கரை மூடி வெயிட் போட்டு 1 விசில் விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் எடுத்து பரிமாறவும்.

Related posts

வெண்டைக்காய் புளி மசாலா

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

உருளைக்கிழங்கு மசால் தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி?….

sangika

சிம்பிளான… கோவைக்காய் ப்ரை

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

பூந்தி செய்வது எப்படி ??? tamil cooking

nathan

சுவையான கடலைப்பருப்பு தேங்காய் குழம்பு

nathan

சின்ன வெங்காய குருமா

nathan

உங்களுக்காக பூண்டில் செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செய்வது எப்படி

nathan