29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
16 1523869647
முகப் பராமரிப்பு

வெயில் கொடுமை தாங்கமுடியலையா? அப்ப இத படிங்க!

இந்த வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனை சமாளிப்பது எப்படி வெயில் காலம் வந்து விட்டாலே போதும் சுட்டெரிக்கும் சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இவை நமக்கு தாங்கவே முடியாத வெப்பத்தை கொடுப்பது மட்டுமல்ல நமது சருமத்தையும் பாதிப்படையச் செய்து விடுகிறது.

அதிதீவிர சூரிய ஒளி நமது சருமத்தில் செல்லும் போது சரும அடுக்குகளை பாதித்து சரும கேன்சரை கூட ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கு எல்லாம் காரணம் சூரியனின் வெப்ப மிகுந்த புற ஊதாக் கதிர்கள் தான்.

பாதிப்புகள் இந்த கதிர் வீச்சு பாதிப்பால் சருமத்தில் எரிச்சல், சிவத்தல், அழற்சி, வேர்க்குரு, வலி, தோல் உரிதல், தாங்க முடியாத வலி போன்ற பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. சில சமயங்களில் குமட்டல், வாந்தி காய்ச்சல், கொப்புளங்கள்,சருமம் பொத்து போதல் போன்ற தீவிர பிரச்சினைகள் கூட ஏற்படுகின்றன.தீவிர பிரச்சினை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இதற்கு நீங்கள் என்ன தான் தீர்வுகள் கண்டுபிடித்தாலும் பக்க விளைவுகள் இல்லாத எளிதான விரைவான தீர்வு என்றால் அதற்கு இந்த இயற்கை முறை தான்.

ஜஸ் பேக் ஒத்தடம் தீவிர சூரியக் கதிர்கள் நமது சருமத்தை எரித்து விடும். இதனால் பாதிப்படைந்த பகுதி பொத்து போய் சிவந்து காணப்படும். இதற்கு உடனடி தீர்வு என்றால் ஐஸ் கட்டிகளை ஒரு மஸ்லின் துணியில் கட்டி அந்த இடத்தில் ஒத்தடம் கொடுக்கும் போது ஐஸ்ஸின் குளு குளு தன்மை இரத்த குழாய்கள் சுருங்கி ஏற்பட்டுள்ள அழற்சி யிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஐஸ் கட்டியை நேரடியாக சருமத்தில் தடவக் கூடாது.

தேன் தேனில் உள்ள மாய்ஸ்சரைசர் தன்மை பாதிக்கப்பட்ட சருமத்தை புதுப்பிக்க பயன்படுகிறது. எனவே தேனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவியோ அரெலது அதனுடன் லெமன் சாறு சேர்த்தோ7 நாட்களுக்கு 3 முறை பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு ஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து பாதிக்கப்பட்ட சருமம் விரைவாக குணமாகும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள், அஸ்ட்ரிஜெண்ட், அசிடிக் அமிலம் போன்றவை வெயிலினால் ஏற்படும் அழற்சி மற்றும் சரும பாதிப்புகளை சரி செய்கிறது. ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஆப்பிள் சிடார் வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு காட்டன் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் பாதிக்கப்பட்ட சருமம் சரியாகிவிடும். 2 கப் ஆப்பிள் சிடார் வினிகரை குளிக்கும் டப்பில் கலந்து குளித்து வந்தாலும் சூரியக்கதிர்களால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகி விடும்.

கார்ன் ஸ்டார்ச் கார்ன் ஸ்டார்ச்யை தண்ணீரில் கலந்து அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும். வெயிலில் ஏற்பட்ட எரிச்சல், அழற்சி, அரிப்பு கொப்புளங்கள் குணமாகும்.

பேக்கிங் சோடா 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை குளிக்கிற்ற டப்பில் கரைத்து அதில் கொஞ்சம் நேரம் உடலை நனையுங்கள். பிறகு சருமத்தை துடையுங்கள். வெயிலினால் ஏற்பட்ட வீக்கம், வேனிற்கட்டி சரியாகும். படுப்பதற்கு முன் பாதிக்கப்பட்ட பகுதியில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலந்து பேஸ்ட்டாக்கி தடவி விட வேண்டும். காலையில் எழுந்ததும் கழுவவும்.

ஆப்ரிகாட் ஆப்ரிகாட் பழத்தை தோலை நீக்கி மசித்து பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்புறம் கழுவ வேண்டும். இதை நன்றாக காய்ந்த பிறகு துண்டை கொண்டு தேய்த்து எடுத்தால் இன்னும் நிலைமை மோசமாகி விடும். ஆப்ரிகாட் இலைகளை மிக்ஸியில் போட்டு அடித்து ஜூஸ் எடுத்து தடவி வந்தால் வெயிலினால் ஏற்பட்ட சிவந்த சருமம் சரியாகி விடும்.

பால் 1 கப் பாலக் அதனுடன் கொஞ்சம் ஐஸ் கட்டிகள், 4 கப் தண்ணீர் சேர்த்து அதில் ஒரு சுத்தமான துணியை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். இதற்கு பாலின் குளிர்ந்த தன்மையே காரணம். கொஞ்சம் ஜாதிக்காய் பவுடரை குளிர்ந்த பாலில் கலந்து தடவி வந்தாலும் சூரிய ஒளி பாதிப்பு சரியாகும்.

க்ரீன் டீ பேக் ஒரு கப் சூடான நீரில் க்ரீன் டீ பேக்கை நனைத்து அந்த தண்ணீரை வடிகட்டி கொள்ளவும். அதில் ஒரு சுத்தமான துணியை நனைத்து பாதிக்கப்பட்ட சருமத்தில் போடவும். வெயிலினால் ஏற்பட்ட சிவந்த சருமம் சரியாகி விடும். இதில் உள்ள டானிக் அமிலம் பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்கிறது.

யோகார்ட் யோகார்ட்டை எடுத்து சூரிய ஒளியால் பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். யோகார்ட் டில் உள்ள ஈரப்பதம் சருமம் சிவந்து போதலை தடுக்கும்.

உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கை துண்டு துண்டாக வெட்டி பாதிக்கப்பட்ட சருமத்தில் தேய்க்கவும். பிறகு தண்ணீரை கொண்டு கழுவி விட வேண்டும். இது வெயிலினால் ஏற்பட்ட அழற்சி, எரிச்சல் போன்றவற்றை போக்குகிறது.

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி சில நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசவும். இதிலுள்ள டேனின்ஸ் பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பிக்கிறது.

ஓட்ஸ் 1 கப் ஓட்ஸ்யை எடுத்து நன்றாக அரைத்து அதை குளிர்ந்த தண்ணீரில் கலந்து கொள்ளவும். சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பு சரியாகி விடும். ஓட்ஸ் பவுடர் 1/4 கப், 2 டேபிள் ஸ்பூன் தேன், 1/4 கப் பால் சேர்த்து கலந்து இதை பாதிகப்பட்ட பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும். நீங்கள் பாலிற்கு பதிலாக பப்பாளி பழ மசியல், ஓட்ஸ் மற்றும் தேன் கலந்து கூட பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் ஒரு நாளைக்கு 2-3 தடவை பாதிக்கப்பட்ட சருமத்தில் தேங்காய் எண்ணெய்யை தடவ வேண்டும். நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படும்

முட்டையின் வெள்ளைக் கரு தொடர்ச்சியாக முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி வந்தால் வெயிலினால் ஏற்பட்ட நமநமப்பு, அழற்சி, சிவத்தல் போன்றவை சரியாகும். முட்டை வெள்ளை கரு மற்றும் தேன் கலந்து பயன்படுத்தி வந்தாலும் கூடுதல் பலன் கிடைக்கும்.

வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் பாதிப்பை சரியாக்குகிறது. வெள்ளரிக்காய் ஜூஸ் எடுத்து ரோஸ் வாட்டர், கிளிசரின் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும்.

தக்காளி தக்காளியில் உள்ள விட்டமின் சி வெயிலினால் ஏற்படும் பாதிப்பை விரைவாக குணமாக்குகிறது. தக்காளி கூழை தினமும் இரவில் தடவி வந்தால் வெயில் எரிச்சல் சரியாகும். 3 பழ தக்காளி ஜூஸ், 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட், சேர்த்து வடிகட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் போதும் நல்ல மாற்றத்தை காணலாம்.

நல்லெண்ணெய் ஒரு நாளைக்கு 3-4 தடவை நல்லெண்ணெய்யை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவினால் எரிச்சல், சிவத்தல் இல்லாமல் போகும். நல்லெண்ணெய்யில் உள்ள மாய்ஸ்சரைசர் தன்மை இதற்கு உதவுகிறது. கொத்தமல்லி எண்ணெய், கடலை எண்ணெய் இவையும் சூரியக் கதிர்களின் பாதிப்பை குறைக்கின்றன.

பூண்டு 1/2 கப் வொயிட் வினிகர் நன்றாக நசுக்கிய பூண்டு சேர்த்து அதில் ஒரு காட்டன் பஞ்சை நனைத்து சருமத்தில் தடவ வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

மஞ்சள், யோகார்ட், பார்லி யோகார்ட், மஞ்சள் மற்றும் பார்லி எல்லாவற்றையும் சம அளவு கலந்து அழற்சி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி காய்ந்த பிறகு நீரில் கழுவவும். 3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் மஞ்சள் சேர்த்து பயன்படுத்தினால் சூரியனால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யலாம்.

பாதாம் பருப்பு இரவில் ஒரு கைப்பிடியளவு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளுங்கள். வெளித் தோலை உரித்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டு பால் சேர்த்து பேஸ்ட்டாக்கி தினமும் இரண்டு தடவை தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே சரும பிரச்சினைக்கு பயன்படுகிறது. கொஞ்சம் ஆலிவ் ஆயிலை கையில் எடுத்து 3-4 நாட்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் வெயிலினால் ஏற்பட்ட சரும பாதிப்புகள் விரைவில் குணமாகும். இதற்கு காரணம் இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் தான்.

விட்டமின் ஈ ஆயில் விட்டமின் ஈ மாத்திரைகள் மெடிக்கல் கடைகளில் கிடைக்கிறது. 1 அல்லது 2 மாத்திரைகளை பிழிந்து பாதிக்கப்பட்ட பகுதியில் அப்ளே செய்ய வேண்டும். சூரியக் காந்தி விதைகள், நட்ஸ் போன்றவற்றில் விட்டமின் ஈ இருப்பதால் இதை சாப்பிட்டு வருவதும் நல்லது.

சேவிங் க்ரீம் சேவிங் க்ரீம் பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்கிறது. இதில் மெந்தால் இருப்பதால் சூரியனால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு ஒரு குளு குளுப்பை தரும். எனவே கொஞ்சம் சேவிங் க்ரீம்யை அதில் தடவி மசாஜ் செய்தாலே போதும்.

கற்றாழை ஜெல் இதிலுள்ள குளிர்ச்சியான தன்மை, ஆன்டி செப்டிக் பொருட்கள், ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் போன்றவை பாதிக்கப்பட்ட சருமத்திற்கு நிவாரணம் அளிக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவ வேண்டும்.

கீரை 10-12 கீரை இலைகளை எடுத்து ஒரு ஐஸ் கட்டியுள்ள பக்கெட்டில் சில நிமிடங்கள் ஊற வைக்கவும். இப்பொழுது எரிச்சலான சருமத்தில் வைத்து இரண்டு நாட்களுக்கு என செய்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது ஒரு கூலிங் ஏஜெண்ட் மாதிரி செயல்பட்டு சூரியக்கதிர்களால் ஏற்படும் எரிச்சல், ஸ்கின் டோனை தடுக்கிறது.

சந்தன கட்டை மஞ்சள் மற்றும் சந்தனப் பொடி யை சம அளவு எடுத்து குளிர்ந்த நீரில் கலந்து பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இதன் குளிர்ச்சியான தன்மை சூரியக்கதிர்களால் ஏற்படும் வெப்ப தாக்குதலை குறைக்கும்.

மிளகுக்கீரை எண்ணெய் சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெய்யை டிஸ்டில்டு வாட்டருடன் கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து கொள்ளவும். சில நிமிடங்கள் நன்றாக குலுக்கி கொண்டு அதை பிரிட்ஜில் வைத்து கொள்ளுங்கள். தீவிர சூரிய ஒளி பாதிப்பை கூட இது குணப்படுத்தும். உலர்ந்த மிளகுக்கீரையை வெதுவெதுப்பான நீரில் கலந்து தண்ணீரை வடிகட்டி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். எண்ணெய்யை அப்படியே கொப்புளங்களில் தடவ வேண்டாம்.

கேலண்டூலா ஒரு பாத்திரத்தில் 4 அவுன்ஸ் தண்ணீர் எடுத்து அதில் 20 துளிகள் கேலண்டூலா மருந்து சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட அழற்சி குணமாகும். கேலண்டூலா க்ரீம்கள், ஜெல், களிம்பு போன்ற உடனடியாக நிவாரணம் அளிக்கும் பொருட்களும் மார்க்கெட்டில் கிடைக்கின்றன

மார்ஸலோ 2 கப் தண்ணீர் உடன் 2 டீ ஸ்பூன் உலர்ந்த மார்ஸலோ வேரை போட்டு கொதிக்க விடவும். அப்படியே 10 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வடிகட்டி ஆற விடவும். ஒரு சுத்தமான துண்டை அதில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

லாவண்டர் எண்ணெய் உங்களுக்கு சூரியக்கதிர்களால் சருமம் கறுத்து போய் இருந்தால் அதற்கு இது தீர்வளிக்கும். ஒரு ஸ்பிரே பாட்டிலில் 1/2 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல், சில துளிகள் ஹெலிஸ்ரியம் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலக்கவும். பாதிக்கப்பட்ட சருமத்தில் இதை ஸ்பிரே செய்தாலே போதும் இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் அலற்சிக்கு எதிராக நிவாரணம் அளிக்கிறது.

செய்ய வேண்டியவை ஒரு நாளைக்கு 10-15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் நீராடினால் நல்ல பலன் கிடைக்கும். வெளியே போகும் போது சன் ஸ்கிரீன் லோசன் (SPF 15 அல்லது 30) பயன்படுத்த வேண்டும். மைல்டு சோப் பயன்படுத்துங்கள். முழுமையான ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே செல்லுங்கள். மாய்ஸ்சரைசர் பயன்படுத்தி கொள்ளுங்கள். தொப்பி அணிந்து கொண்டு வெளியே செல்லும் போது தலை மற்றும் கண்களை பாதுகாக்கலாம்.

செய்யக் கூடாதவை அதிகமாக சருமத்தை சொரிய மற்றும் தேய்க்காதீர்கள். அதிக கதிர்கள் விழும் நேரமான காலையில் 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை வெளியே செல்லாதீர்கள். லிடோகைன், பென்ஷோகைன் போன்றவற்றை தவிருங்கள். சருமத்தில் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தாதீர்கள். இது பாதிப்பை தீவிரப்படுத்தும்.16 1523869647

Related posts

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

முகத்தின் அழகை மெருகேற்றும் புருவம்

nathan

பெண்களே இந்த பொருட்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க முகத்துல நேரடியா பயன்படுத்தாதீங்க…!

nathan

சருமத்தை பளிச்சென வைப்பதற்கு ஏற்ற ‘ஸ்கிரப்’ எது?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெரிய மூக்கை சிறியதாக மாற்ற வேண்டுமா? உங்களுக்கான இயற்கை சிகிச்சை இங்கே!

nathan

கருவளையங்களை முழுமையாக போக்க சில டிப்ஸ்…

nathan

நீங்கள் நைட் தூங்கறதுக்கு முன்னாடி இந்த ஒரு விஷயத்த மட்டும் பண்ணுங்க… அப்புறம் என்ன நடக்குமென்று பாருங்கள்…

nathan

முகத்தைப் பொலிவாக்கும் கடலை மாவு பேஷியல்

nathan

பெண்களுக்கு மீசை போல் முடி வளர்கிறதா?இதை படியுங்கள்…

nathan