24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 1523342048
கால்கள் பராமரிப்பு

உங்க பாதமும் இப்படி வெடிச்சிருக்கா? அப்ப இத படிங்க!

பெண்கள் தங்களை அழகாக காண்பித்துக் கொள்ள எப்போதும் விரும்புவார்கள். அவர்கள் அழகில் ஒரு குறை ஏற்பட்டால் அதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

பெண்களின் அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு. உடலின் மேல் சரியான அக்கறை எடுத்துக் கொள்ளாத போது இந்த நிலை ஏற்படும்.

பாத வெடிப்பு பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால் பாதங்களில் உள்ள தோல் வறண்டு காணப்படும். இந்த வறட்சியால் தோலில் வெடிப்பு ஏற்படுகிறது. ஈரப்பதம் குறைபாடு, அதிகரித்த மாசு, எக்சிமா , நீரிழிவு, தைராய்ட் , சொரியாசிஸ் போன்ற மருத்துவ பிரச்சனைகள் வறண்ட மற்றும் வெடிப்புகள் நிறைந்த பாதங்களைத் தருகிறது. கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தெரிந்து கொள்வதால், அழகான பாதங்களைப் பெறுவது உறுதி.

எலுமிச்சை மாஸ்க் எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் பாதங்களில் உள்ள வறட்சியைப் போக்கி, நீர்ச்சத்து கொண்டதாக மாற்றும். அதோடு கிளிசரினும் பன்னீரும் சேரும்போது, பாதங்கள் மிருதுவாகும். 1/2 கப் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கிளிசரின் 2 ஸ்பூன் பன்னீர் வெதுவெதுப்பான நீர் படிகக்கல் உப்பு சிறிதளவு

ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளவும். அந்த நீரில் 10 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். மேலும் அந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். இவைகள் சேர்ந்த நீரில் 15-20 நிமிடங்கள் உங்கள் பாதங்களை ஊற வைக்கவும். படிகக்கல் அல்லது ஸ்கரப்பர் பயன்படுத்தி உங்கள் பாதங்களைத் தேய்க்கவும். பிறகு, ஒரு ஸ்பூன் கிளிசரின் மற்றும் ஒரு ஸ்பூன் பன்னீர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாதங்களில் தடவவும். இந்த கலவை ஓட்டும் தன்மை கொண்டதால், இதனை பாதங்களில் தடவியவுடன் சாக்ஸ் அணிந்து கொள்ளலாம் இரவு முழுதும் அப்படியே விட்டு விட்டு, மறுநாள் காலையில் கழுவலாம். இந்த மாஸ்க்கை இத்தனை முறை தான் அப்ளை செய்ய வேண்டும் என்ற கணக்கெல்லாம் கிடையாது. பாத வெடிப்பு நீங்கிய பின்னும் கூட இதை அடிக்கடி செய்து வரலாம். உங்கள் பாதங்கள் மென்மையாக மாறும் வரை இதனை தொடர்ந்து செய்து வரலாம்.

பயன்கள் எலுமிச்சை சாறில் உள்ள அமிலத் தன்மை சொரசொரப்பான வறண்ட தோலை குணப்படுத்தி வெடிப்பிலிருந்து பாதங்களைக் காக்கிறது . எலுமிச்சையின் அமிலத்தன்மையுடன் பன்னீர் மற்றும் கிளிசரின் செயலாற்றி ஒரு சிறந்த சிகிச்சையைத் தருகின்றன. கிளிசரின் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது.இந்த தன்மையால் தான் , இதனை ஒப்பனைப் பொருட்களில் பயன்படுத்துகின்றனர். பன்னீர் , அண்டிசெப்டிக் தன்மையைக் கொண்டது மற்றும் வீக்கங்களைக் குறைக்கிறது . இதனால் பாதத்தில் ஏற்பட்ட வெடிப்பு மறைகிறது. சில நேரங்களில் எலுமிச்சை சாறு, சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். உடலின் ஒரு சிறிய பகுதியில் இதனைத் தடவி சோதனை செய்த பின் பயன்படுத்துவதால் ஒவ்வாமையில் இருந்து தப்பிக்கலாம்.

வெஜிடபிள் ஆயில் உங்கள் பாதங்களைச் சுத்தமாக கழுவி ஒரு துணியால் துடைத்துக் கொள்ளவும். பிறகு உங்கள் பாதங்களில் ஒரு லேயர் வெஜிடபிள் எண்ணெய்யை தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். காலையில் கால்களைக் கழுவவும். இரவு உறங்கச் செல்வதற்கு முன் தினமும் இதனைச் செய்து வரலாம். ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட வெஜிடபிள் எண்ணெயில் உள்ள கொழுப்பு, சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து வெடிப்புகளைப் போக்குகிறது.

அவகாடோ மற்றும் வாழைப்பழம் மாஸ்க் வாழைப்பழம் மற்றும் அவகாடோவை ஒன்றாக மசித்துக் கொள்ளவும். இந்த அடர்த்தியான கலவையை பாதங்களில் வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவவும். 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கால்களைக் கழுவவும். உங்கள் பாதங்கள் மென்மையாக மாறும் வரை தினமும் இதனைச் செய்து வரலாம். அத்தியாவசிய எண்ணெய், வைட்டமின் மற்றும் கொழுப்புகள் , அவகாடோவில் அதிகமாக உள்ளது. இவை வறண்ட சருமத்தை போக்க உதவுகின்றன. வாழைப்பழம் ஒரு சிறந்த மாயச்ச்சரைசர் . இது சருமத்தை மென்மையாக மாற்றுகிறது.

எலுமிச்சை சாறு மற்றும் வாஸ்லின் வெதுவெதுப்பான நீரில் கால்களை 20 நிமிடம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும். பிறகு கால்களை நன்றாக துடைத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் வாசலினுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை பாதங்களில் தடவவும். சருமம் இந்த கலவையை உறிஞ்சிக் கொள்ளும்வரை இதனைத் தடவவும். தடவி முடித்ததும், கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளவும். இரவு முழுதும் அப்படியே விட்டு, மறுநாள் காலை கழுவவும். சாக்ஸ் அணிவதால் உடலின் சூடு முழுவதும் ஈர்க்கப்பட்டு, இந்த கலவையை இன்னும் சிறந்ததாக மாற்றுகிறது. தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் இதனை செய்யலாம். எலுமிச்சையின் அமிலத் தன்மையும் வாசலின் உடைய ஈரப்பதமும் சேர்ந்து பாதங்களின் வறட்சியைப் போக்கி மென்மையைத் தருகின்றன.

பாராஃப்பின் மெழுகு பாராஃப்பின் மெழுகுடன் சிறிது கடுகு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வாணலியில் வைத்து மெழுகு உருகும் வரை சூடாக்கவும். இந்த கலவையை நன்றாக ஆற வைக்கவும். இரவு உறங்கச் செல்வதற்கு முன், இந்த கலவையை உங்கள் பாதங்களில் தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணியவும். மறுநாள் காலையில் நன்றாக கழுவவும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இரவில் உறங்குவதற்கு முன் இதனை செய்யலாம். பாராஃப்பின் மெழுகு சருமத்தை மென்மையாக்க உதவுகிறது. பாதங்களில் வலி மற்றும் வெடிப்பிற்கு இது ஒரு சிறந்த தீர்ர்வைத் தருகின்றது. மெழுகு சூடாக இருக்கும்போது அதில் காலை வைக்க வேண்டாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் இந்த சிகிச்சையை பின்பற்ற வேண்டாம்.

தேன் ஸ்க்ரப்பர் அரை டப் வெந்நீரில் ஒரு கப் தேன் சேர்த்து கலக்கவும். இந்த நீரில் 15-20 நிமிடங்கள் உங்கள் பாதங்களை ஊற விடவும். பிறகு மென்மையாக பாதங்களை ஸ்க்ரப் செய்யவும். இதனால் உங்கள் பாதம் மிகவும் மென்மையாக மாறுகிறது. பாதங்களில் உள்ள வெடிப்புகளை முற்றிலும் போக்க இதனை தொடர்ந்து செய்து வரலாம். தேன் ஒரு இயற்கையான கிருமி நாசினியாக இருப்பதால் இவை பாத வெடிப்புகளை விரைந்து குணமாக்குகிறது. இதன் மென்மையான குணம், சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது .

அரிசி மாவு இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அரிசி மாவுடன் , சில துளிகள் தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பாதங்கள் மிகவும் வறண்டு வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் பாதங்களை வெந்நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து , பின்பு இந்த பேஸ்டால் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். இதன்மூலம் உங்கள் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மறைந்து விடும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்து வரலாம். அரிசி மாவு சருமத்தை சுத்தீகரித்து, மெருகூட்டுகிறது. இதனால் சருமம் மென்மையாக மாறுகிறது.

ஆலிவ் எண்ணெய் காட்டன் பஞ்சில் சிறிது ஆலிவ் எண்ணெய்யை எடுத்து வெடிப்புகள் உள்ள பாதத்தில் தடவவும். பிறகு பாதங்களை மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து ஒரு மணி நேரம் கழித்து கால்களை கழுவவும். தினமும் இதனை செய்து வரலாம். சருமத்தை மென்மையாக மாற்றும் ஒரு மந்திரத் தன்மை ஆலிவ் என்னிக்கு உண்டு. இயற்கையான வழியில் சருமம் மென்மையாக, மிருதுவாக மற்றும் ஆரோக்கியமாக மாற ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

ஓட்ஸ் ஒட்சுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்புகளில் தடவவும். அரை மணி நேரம் அப்படியே விட்டு, பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் வெடிப்புகள் குணமாகும் வரை செய்து வரலாம். ஓட்ஸ் எதிர்ப்பு அழற்சி மற்றும் ஈரப்பதமூட்டுதல் பண்புகளை கொண்டுள்ளது, இது இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது மற்றும் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது .

நல்லெண்ணெய் பாதங்களில் நல்லெண்ணெய்யை தடவி விடுங்கள். எண்ணெய் சருமத்தில் உறிஞ்சும் வரை மென்மையாக மசாஜ் செய்யவும். தினமும் இரவு உறங்குவதற்கு முன் இதனை செய்யலாம். நல்லெண்ணெய் சருமத்திற்கு புத்துணர்ச்சியும் ஈரப்பதமும் தருகிறது. சருமத்தை மிருதுவாக்கி, மென்மையாக்குகிறது. இதனால் வெடிப்புகள் விரைவில் மறைகிறது.

தேங்காய் எண்ணெய் : உங்கள் பாதங்களில் தாராளமாக தேங்காய் எண்ணெய்யை தடவுங்கள். தடவிய பின் கால்களில் சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். காலையில் வழக்கம் போல் கழுவிக் கொள்ளுங்கள். தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்பு மறைந்து விடும். தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. வறண்ட சருமத்தை மாயச்ச்சரைஸ் செய்து, இறந்த செல்களை போக்குகிறது. சருமத்தின் ஆழத்திற்குள் சென்று ஊடுருவி, புத்துணர்ச்சியைத் தருகிறது.

லிஸ்டரின் ஒரு டப் தண்ணீரில் லிஸ்டரின், வினிகர் போன்றவற்றை சேர்த்து 10-15 நிமிடம் உங்கள் பாதங்களை ஊற வைக்கவும். பிறகு உங்கள் பாதங்களை படிகக்கல் கொண்டு மென்மையாக தேய்க்கவும். இதனால் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும். பின்பு பாதங்களைக் கழுவி மாயச்ச்சரைஸ் செய்யவும். தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்கள் செய்து வந்தால் இறந்த செல்கள் வெளியேறி பாதங்கள் மென்மையாகும். லிஸ்டரின் கலந்த தண்ணீரில் கால்களை ஊற வைப்பதால், இறந்த செல்கள் கடினமாகி ஸ்க்ரப் செய்தவுடன் எளிதாக வெளியேறுகிறது. லிஸ்டரின் ஒரு கிருமி நாசினி மற்றும் இதில் உள்ள மென்தால் மற்றும் தய்மோல் சருமத்தை மென்மையாக்குகின்றன .

பேக்கிங் சோடா ஒரு டப்பில் தண்ணீர் வைத்து அதில் பேக்கிங் சோடாவை சேர்க்கவும். பேகிங் சோடா கரைந்தவுடன் உங்கள் பாதங்களை அந்த நீரில் ஊறவைக்கவும். 10-15 நிமிடம் கழித்து கால்களை படிகக்கல்லால் மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். பிறகு சுத்தமான நீரில் கால்களைக் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம். பொதுவாகவே பேகிங் சோடாவில் அழற்சியை போக்கும் தன்மை இருப்பதால் , சருமத்தின் இறந்த செல்களை அழித்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

ஆப்பிள் சிடர் வினிகர் ஒரு டப்பில் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்துக் கொள்ளவும். இந்த நீரில் 15 நிமிடங்கள் கால்களை ஊற வைக்கவும். பிறகு பாதங்களை மென்மையாக மசாஜ் செய்வதால் இறந்த செல்கள் வெளியேறுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்து வரலாம். ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள மென்மையான அமிலம், சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்றி சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இறந்த செல்கள் வெளியாவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது.

எப்சம் உப்பு ஒரு டப் தண்ணீரில் அரை கப் எப்சம் உப்பை கலந்து கொள்ளவும். உங்கள் பாதங்களை அந்த நீரில் 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு கால் பாதங்களை மென்மையாக ஸ்க்ரப் செய்யவும். இறந்த செல்கள் வெளியேறியவுடன் கால்களை சுத்தமாக கழுவவும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்து வரலாம். எப்சம் உப்பு, சருமத்தை மென்மையாக்கி பாதங்களை மிருதுவாக மாற்றுகிறது.

கற்றாழை வெதுவெதுப்பான நீரில் கால்களை நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு கால்களை துடைத்து நன்றாக காய வைத்துக் கொள்ளவும். கற்றாழை ஜெல்லை கால் பாதங்களில் தாராளமாக தடவவும். பிறகு கால்களில் சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். நான்கு முதல் ஐந்து நாட்கள் தொடர்ந்து இதனை செய்து வரலாம். நல்ல மாற்றம் கிடைக்கும் வரை இதனை தொடர்ந்து செய்யலாம். வறண்ட சருமத்தை மிருதுவாக மாற்ற கற்றாழை உதவுகிறது. சருமத்தில் கொலோஜென் உற்பத்தியை அதிகரித்து, வெடிப்புகளைப் போக்குகிறது. கற்றாழையில் இருக்கும் அமினோ அமிலங்கள் சருமத்தின் மேன்மையை அதிகரிக்கும்.

டீ ட்ரீ எண்ணெய் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் டீ ட்ரீ எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை ஒன்றாக கலக்கவும். வெடிப்புகள் உள்ள பாதத்தில் இதனை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விடவும். வெடிப்புகள் குணமாகும் வரை தினமும் இரவில் இதனை பயன்படுத்தவும். டீ ட்ரீ எண்ணெய் சருமத்தை சுத்தம் செய்து கண்டிஷன் செய்கிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் மென்மையாகிறது. டீ ட்ரீ எண்ணெய்யை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவது கூடாது. இதனால் சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம்.

படிகக்கல் ஒரு டப்பில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி கால்களை 15 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு படிகக்கல்லால் மென்மையாக ஸ்க்ரப் செய்து இறந்த செல்களைப் போக்கலாம். பிறகு குளிர்ந்த நீரால் கால்களைக் கழுவவும். தினமும் ஒரு முறை இதனை செய்யலாம். படிகக்கல்லில் உள்ள சொரசொரப்பான பகுதி, இறந்த செல்களை போக்குவதால், அதற்கு அடியில் இருக்கும் ஆரோக்கியமான தோல் வெளிப்படுகிறது. படிகக்கல்லை கடினமாக தேய்க்கக் கூடாது. அப்படி செய்வதால் சருமத்தின் ஆரோக்கிய பகுதி சேதமடையலாம்.

வைட்டமின் ஈ எண்ணெய் வைட்டமின் ஈ மாத்திரையில் துளையிட்டு அதன் எண்ணெய்யை வெளியில் எடுத்துக் கொள்ளவும். பாதங்களில் வெடிப்பு உள்ள இடங்களில் இந்த எண்ணெய்யை தடவவும். ஒரு நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்யலாம். வைட்டமின் ஈ எண்ணெய், சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதனால் பாதங்கள் மென்மையாக மாறுகிறது.

ஷியா வெண்ணெய் ஷியா வெண்ணெய்யை உங்கள் பாதங்களில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். வெண்ணெய் உங்கள் பாதங்களில் ஊடுருவி செல்லும். பிறகு ஒரு சாக்ஸ் அணிந்து இரவு முழுதும் அப்படியே விடவும். சில தினங்கள் தொடர்ந்து இதனை செய்து வருவதால் விரைவில் நல்ல பலனை உணர்வீர்கள். ஷியா வெண்ணெய் ஒரு நல்ல சரும மாயச்ச்சரைசெர். இது சருமத்தை நீர்சத்தொடு வைத்து புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. இதில் இருக்கும் குணப்படுத்தும் தன்மை காரணமாக சருமத்தின் வறட்சி குறைந்து மேன்மை தன்மை அதிகமாகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ , சரும தொந்தரவுகளை போக்க பெரிதும் உதவுகின்றன.cover 1523342048

Related posts

பெண்களே உங்கள் தொடையில் அதிகபடியான சதை இருக்கிறதா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா முடியை நீக்க வேக்சிங் செய்வதே சிறந்தது

nathan

முழங்காலில் உள்ள கருமையை போக்க சில அற்புத வழிகள்!

nathan

பாத பராமரிப்புக்கு உப்பு எவ்வாறு உதவுகிறது தெரியுமா?

sangika

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால்

nathan

பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு….

sangika

வழவழப்பான அழகான கால்களுக்கு டிப்ஸ்

nathan

சேற்றுப் புண் வந்தால் உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?சூப்பர் டிப்ஸ்

nathan

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!

sangika