எண்ணெய்ப்பசையுடைய சருமம் கொண்டவரா? நீங்கள்… என்ன க்ரீம் வாங்கிப் போட்டாலும் அந்த பிரச்னையை சரிசெய்யவே முடியவில்லையா?…
கவலையை விடுங்க… சின்ன சின்ன ட்ரிக்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணினாலே போதும்.
பொதுவாக எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு மேக்கப் போட்டாலும் , சிறிது நேரத்தில், முகத்தில் எண்ணெய் மினுமினுக்கத் தொடங்கி ,முகத்தை டல்லாகக் காட்டும்.
அதனால், எண்ணெய் சருமம் உடையவர்கள், முகத்துக்கு மேக்கப் போடும் முன் ice cubes-ஐ ஒரு காட்டன் டவலிலி சுற்றி முகத்தில் பரவலாக ஒற்றி எடுங்கள்.
பிறகு , உலர்ந்த டவல் கொண்டு, முகத்தை மிக மென்மையாகத் துடைத்து , முகம் உலர்ந்தபின், உங்களது வழக்கமான மேக்கப்பைத் தொடங்குங்கள்.
இவ்வாறு செய்வதால், மேக்கப் நீண்டநேரம் கலையாமலும் இருக்கும். எண்ணை பிசுபிசுப்பும் இருக்காது.
முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
சருமத்தில் உள்ள நுண்ணிய துளைகள் இறுக்கமாக்கப்படும்.
கண்கள் பூத்துப்போனது போல் இல்லாமல் பிரகாசமாகத் தெரியும்.
முகத்தில் உள்ள மெல்லிய சுருக்கங்கள் மறையும்.
முகத்தில் ரத்தஓட்டம் அதிகரிப்பதால் பொலிவான சருமத்தை பெறலாம்.
சாத்துக்குடி சாறு அல்லது எலுமிச்சைசாறு கலந்த நீர் எதாவது ஒன்றை ice tray-யில் ஊற்றி , ice cube ஆனதும் முகத்துக்குப் பயன்படுத்தலாம்.
* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்…