நாம் அனைவருமே ஏதேனும் விஷேங்களுக்கு மட்டுமின்றி தினமும் அலுவலகம், கல்லூரிகளுக்கு செல்லும் போதும் கூட பளிச்சென்று அழகாக செல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் பார்லர்களுக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக்கொண்டால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது செலவாகும்.
ஆனால் அங்கே பயன்படுத்தும் கெமிக்கல்கள் மற்றும் சுத்தமற்ற பொருட்களால் நமது முகம் பழாகிவிடுமோ என்ற அச்சமும் இருக்கும். நிச்சமாக தரம் குறைந்த சில பார்லர்களுக்கு, விலை மலிவாக இருக்கிறது என்று செல்வோம், ஆனால் அங்கே இன்னொருவருடைய முகத்தை சுத்தம் செய்ய பயன்படுத்திய பஞ்சு போன்றவற்றை உங்களுக்கும் பயன்படுத்தாலாம். இதனால் முகப்பரு போன்ற பிரச்சனைகள் வரலாம். உஷார்..!
இவ்வளவு பிரச்சனை எதற்கு? நமக்கு வீட்டிலேயே பார்லர் பொழிவு கிடைக்கும் போது நாம் ஏன் பார்லர்களுக்கு சென்று பணத்தை விரையம் செய்ய வேண்டும் இதோ உங்களுக்காக வெள்ளரிக்காய் பேசியல்..!
1. க்ளேன்சர்: பேசியல் செய்வதற்கு முன்பு உங்கள் முகம் அழுக்குகள் இன்றி இருக்க வேண்டியது அவசியம். அதற்கு க்ளேன்சர் அவசியமாகிறது. இரண்டு டிஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு டிஸ்பூன் வெள்ளரி சாற்றை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த சாறுகளை பஞ்சினால் நனைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். எலுமிச்சை முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. வெள்ளரிக்காய் முகத்திற்கு குளிர்ச்சியை தருகிறது. இதை 10 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
2. ஸ்கிரப்: ஸ்கிரப் செய்வது உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவியாக உள்ளது. இறந்த செல்கள் நீங்குவதால் முகத்தில் உள்ள கருமை நீங்குகிறது. இந்த ஸ்கிரப் எண்ணெய் சருமம், முகப்பரு உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. கடைகளில் கிடைக்கும் ஸ்கிரப் மிகவும் கடினமாக இருப்பதால் இவர்களுக்கு அது உகந்ததாக இருக்காது. சிறிதளவு துருவிய வெள்ளரிக்காய் தோல், சிறிதளவு துருவிய எலுமிச்சை தோல் இவற்றுடன் மில்க் க்ரீம் அல்லது பால் சேர்த்து கலந்து முகத்தில் மென்மையாக 15 நிமிடங்கள் வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.
3. ஜெல்: இது முகத்தில் உள்ள இரத்த ஓட்டத்தை அதிகரிக்கரித்து முகத்திற்கு பொலிவை தருகிறது. அரைத்த வெள்ளரிக்காய் ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் கற்றாளை ஜெல், 3 சொட்டு கிளிசரின் ஆகியவற்றை கலந்து 15 நிமிடங்கள் நன்றாக முகத்தில் மசாஜ் செய்வதால், முகத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கிறது. முகத்தில் உள்ள சொரசொரப்பு நீங்கி முகம் மென்மையாகிறது.
4. மாஸ்க்: மாஸ்க் பேசியலின் கடைசி நிலையாகும் இதை செய்து முடித்தவுடன் உங்கள் முகம் இயற்கையான பொலிவுடன் இருப்பதை உணரலாம். அரை தக்காளி, அரை வெள்ளரிக்காய் ஆகியவற்றை மிக்சியில் ஒன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த அரைத்த பேஸ்ட் உடன் ஒரு ஸ்பூன் அதிமதுரம் மற்றும் ஒரு ஸ்பூன் முல்தானி பௌடரை கலந்து முகத்தில் கெட்டியாக அப்ளை செய்ய வேண்டும். இது வெயிலுக்கு ஏற்ற ஒரு பேசியலாகும்.
குறிப்பு: இந்த பேசியலை செய்த உடன் வெயிலில் செல்ல கூடாது. முகத்தை சோப் கொண்டு கழுவக்கூடாது. இதை மாலை நேரத்தில் செய்வது சிறந்தது. முகத்தில் அதிகமான கேமிக்கல்களை உபயோகப்படுத்துவது உடலுக்கு கேடு விளைவிக்கும். இது போன்ற இயற்கை பேசியலை செய்தால் ஆரோக்கியத்திற்கும் நல்லது முகமும் பளிச்சிடும். செலவும் குறைவு 50 ரூபாய் கூட ஆகாது.