27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
20180225 110254
முகப் பராமரிப்பு

நீங்கள் சீக்கிரம் வெள்ளையாவீங்க தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..

நல்ல பொலிவான, வெள்ளையான சருமம் வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். இதற்காக பலர் தினமும் ஏராளமான க்ரீம்களைப் பயன்படுத்துவோம். இப்படி கெமிக்கல் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தினால், சரும செல்கள் ஆரோக்கியத்தை இழந்து, விரைவில் முதுமை தோற்றத்தைக் கொடுக்கும்.

அதோடு, அந்த க்ரீம்களைப் பயன்படுத்துவதால், பலர் பல்வேறு சரும பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இதைத் தவிர்க்க ஒரே வழி, க்ரீம்களின் உபயோகத்தைக் குறைத்து, இயற்கை வழிகளின் மூலம், சரும நிறத்தை அதிகரிக்க முயற்சிப்பது தான்.

அதிலும் நம் வீட்டில் உள்ள குறிப்பிட்ட பொருட்களுக்கு சரும நிறத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. அதில் ஒன்று தான் பாதாம் எண்ணெய். பலருக்கு இந்த எண்ணெயை எப்படி உபயோகிப்பது என்று தெரியாது. உங்கள் வீட்டில் பாதாம் எண்ணெய் இருந்து, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருந்தால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் கீழே சரும நிறத்தை அதிகரிக்க பாதாம் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றி சரும நிறத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

ஃபேஷியல் மசாஜ்

* உள்ளங்கையில் சிறிது பாதாம் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின் அந்த எண்ணெயை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

* இரவு முழுவதும் எண்ணெயை நன்கு ஊற வையுங்கள்.

* மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

* இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

* பின்பு 10 நிமிடம் கழித்து, நீரால் கிளின்சர் பயன்படுத்திக் கழுவுங்கள்.

* இச்செயலை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் லாவெண்டர் ஆயில்

* ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயில் 2-3 துளிகள் லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த எண்ணெயை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வையுங்கள்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

* இந்த எண்ணெய் கலவையை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துங்கள்.

பாதாம் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள்.

* பின் அதை முகத்தில் தடவி 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள்.

* பின்பு மைல்டு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுங்கள்.

* அதைத் தொடர்ந்து ஸ்கின் டோனர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

* இந்த செயலை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த, சரும நிறம் மேம்படுவதைக் காணலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ ஆயில்

* ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* மறுநாள் காலையில் கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தினால், முகம் பளிச்சென்று பொலிவாக காணப்படும்.

பாதாம் எண்ணெய், ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின்

* ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 3-4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 4-5 கிளிசரின் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அவற்றை நன்கு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, எஞ்சிய அதே கலவையால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* அதைத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இப்படி வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் பயன்படுத்த, முகப் பொலிவு சிறப்பாக இருக்கும்.

பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர்

* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் பால் பவுடரை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* அதன் பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.

* இந்த மாஸ்க்கை வாரந்தோறும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் வாழைப்பழம்

* நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20-25 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

* இந்த மாஸ்க்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.

* தகவலை பிறரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தயவுசெய்து அதிகமாகப் பகிருங்கள்……20180225 110254 1024x717

Related posts

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்….

nathan

வறண்ட சருமம் உள்ளவங்க இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம்…

nathan

சரும கருமையைப் போக்க வேண்டுமா? அப்ப சோள மாவு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

முகத்தை அழகாக்கும் தக்காளி! சூப்பர் டிப்ஸ்…..

nathan

முக அழகில் முதன்மையானது புருவ அழகு

nathan

ரகாசமான முகம் வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் பேஷியல்

nathan

ஏழே நாட்களில் முகத்தில் உள்ள சுருக்கங்களை முழுமையாகப் போக்க வேண்டுமா?

nathan

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக முயன்று பாருங்கள்!….

sangika