26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
7 ingredietn 1522326758
முகப் பராமரிப்பு

காலையில வெள்ளையா தெரிவீங்க… நைட் தூங்கும் முன் இந்த மாஸ்க்கை போடுங்க..

அனைவருக்குமே திரையில் வரும் நடிகர், நடிகைகளைப் போன்று வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் எத்தனையோ க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவோம். அதிலும் வெயில் காலம் வந்துவிட்டால், வெள்ளையாக இருப்பவர்கள் கூட கருப்பாகிவிடுவார்கள். எனவே வெயில் காலத்தில் சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு கொடுத்து வந்தால் தான், சருமத்தை கருப்பாகாமல் பாதுகாக்க முடியும்.

ஆனால் தற்போதைய வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறையால், பலருக்கும் தங்களது சருமத்திற்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுக்க இரவு நேரத்தை தவிர வேறு நேரம் கிடைப்பதில்லை. அப்படியே சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதாக இருந்தாலும், இரவு நேரத்தில் தான் கொடுப்போம்.

சிலர் அதிக நேரம் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிப்பதாலேயே முகப்பொலிவை இழந்து காணப்படுவார்கள். இப்படி சரும கருமை, பொலிவிழந்த முகம் என அனைத்து பிரச்சனைகளுக்கும் இரவில் படுக்கும் போது ஒருசில மாஸ்க்குகளைப் போட்டு வந்தால் சரிசெய்துவிடலாம்.

இக்கட்டுரையில் ஒரே இரவில் ஒருவரது சரும நிறத்தை அதிகரிக்கும் மற்றும் முகப் பொலிவை மேம்படுத்திக் காட்டும் சில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் போட்டு வந்தால், ஒவ்வொரு நாளும் அழகு குறையாமல் பிரகாசமாக காட்சியளிக்கலாம்.

வாழைப்பழ மாஸ்க்
தேவையான பொருட்கள்:

* வாழைப்பழம் – 1/2

* முட்டையின் வெள்ளைக்கரு – 1

* தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவி விட்டு, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி, 30-45 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பால் மற்றும் தேன் மாஸ்க்
தேவையான பொருட்கள்:

* தேன்

* பால்

செய்முறை:

தேன் இருக்கும் இந்த மாஸ்க்கில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. வைட்டமின் ஈ சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. அத்தகைய தேனை பாலுடன் சேர்த்து சருமத்தில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் எப்போதும் பளிச்சென்று அழகாக காணப்படும்.

பாதாம் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* பாதாம் – 3-4

* பால் – சிறிது

செய்முறை:

பாதாமை நீரில் பகல் நேரம் முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் இரவில் அதை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சரும வறட்சியும் போய்விடும்.

வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணி மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* வெள்ளரிக்காய் சாறு – 2 டேபிள் ஸ்பூன்

* தர்பூசணி சாறு – 2 டேபிள் ஸ்பூன்

* தயிர் – 1 டேபிள் ஸ்பூன்

* பால் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறு நாள் காலையில் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கினால் சருமத்தில் உள்ள கருமை, அழுக்குகள் நீங்குவதோடு, சரும சுருக்கங்களும் அகலும். இது சரும நிறத்தை மேம்படுத்தும் ஃபேஸ் மாஸ்க்குகளுள் சிறந்த ஒன்று எனலாம்.

சீமைச்சாமந்தி மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* சீமைச்சாமந்தி டீ

* ஓட்ஸ் பொடி

* தேன் – 2 டேபிள் ஸ்பூன்

* பாதாம் எண்ணெய் – 2 துளிகள்

செய்முறை:

ஒரு பௌலில் ஓட்ஸ் பொடி மற்றும் சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

கடலை மாவு மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* கடலை மாவு – 1 டீஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த மாஸ்க்கில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களும் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடியது என்பதால், நிச்சயம் அனைவரும் இந்த மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளரிக்காய் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

* வெள்ளரிக்காய் சாறு – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* கிளிசரின் – 1 டீஸ்பூன் (எண்ணெய் பசை சருமத்தினர் மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும்)

செய்முறை:

ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு 40-45 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி இரவு நேரத்தில் போட்டு வந்தால், வெயிலால் பாதிக்கப்பட்ட சரும செல்கள் சரிசெய்யப்பட்டு, சரும பொலிவும், நிறமும் மேம்படும்.7 ingredietn 1522326758

 

Related posts

உதடுகளை அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுவது எப்படி என்று தெரியுமா?

nathan

பெண்களே 30 வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்..

nathan

பியூட்டி பார்லர்” போகாமலேயே முகம் பொலிவு பெற

nathan

பழங்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வது எவ்வாறு….?தெரிந்துகொள்வோமா?

nathan

உங்க முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்க…

nathan

இதோ பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க சில டிப்ஸ்…!

nathan

உங்களுக்கு தெரியுமா பருக்களினால் ஏற்பட்ட வடுக்களை சரி செய்ய இந்த அரிய வகை மூலிகைகளே போதும்…!

nathan

நீங்க ‘இந்த’ உணவுகளை மட்டும் சாப்பிட்டீங்கனா… ஹீரோயின் மாதிரி ஜொலிக்கும் சருமத்தை பெறுவீங்களாம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா தயிரை பயன்படுத்தி செய்யப்படும் அழகு குறிப்புகள்…

nathan