25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 1522295578
தலைமுடி சிகிச்சை

பொடுகையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்… அப்ப இத படிங்க!

பொடுகு நம்மை சங்கடப்படுத்துகிற விஷயம் மட்டுமல்ல. இதனால் சில சமயம் அதிகப்படியான எரிச்சலும் நமக்கு உண்டாகிறது. இது உச்சந்தலையில் நமைச்சலை உருவாக்கும். பொது இடங்களில் இருக்கும்போது, இதுபோல் அரிப்பு ஏற்பட்டால், நம்மீதே நமக்கு உண்டாகும் கோபம் உச்சத்தைத் தொடும். நமைச்சலே பெரிய சிக்கல் என்றால் இதில் இருந்து வரும் வெள்ளை செதில்கள் பயங்கர சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த சிக்கலையும் சங்கடத்தையும் துடைக்க ஓர் நிரந்தர தீர்வு நமக்கு எட்டும் தூரத்தில் நம்முடைய கையிலேயே இருக்கிறது. ஆனால் நாம் அதைப்பற்றி தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறோம். எனன்வென்று கேட்டால் நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள். நீங்களே வந்து பாருங்கள்.

வேற பெருசா ஒன்னும் தேவையில்லைங்க. நம்ம வீட்ல இருக்கிற வெங்காயமே போதும். எப்பேர்ப்பட்ட பொடுகையும் போக்கிடும்.

1. பொடுகை போக்க வெங்காயச்சாறு எப்படி உதவுகிறது? வெங்காயச்சாறு தலை பொடுகு மற்றும் முடிகொட்டும் பிரச்சனைகளுக்கான ஒரு பாரம்பரிய சிகிச்சை முறையாகும். இது பாக்டீரியாவைக் கொன்று, உச்சந்தலையில் உள்ள வெள்ளை செதில்களை நீக்குகிறது. அதோடு முடியின் வேர்களை உறுதிப்படுத்தி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இதனால் முடி கொட்டுவது நிற்பதோடு தலைமுடியும் நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். வெறும் வெங்காயச்சாறை தேய்ப்பதைவிட, கீழ்கண்ட வேறு சில பொருள்களுடன் சேர்த்தும் தேய்க்கலாம். இதன் மூலம் எளிதாகவும் வேகமாகவும் பொடுகை விரட்டி, கூந்தலை பளபளப்பாக வைத்திருக்கலாம்.   Loading ad

2. வெங்காயம் சாறு ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து பிளண்டரில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதை தலைமுடியின் வேர்ப்பகுதிகள் முழுக்க தேய்க்கவும். முடியில் தேய்க்கத் தேவையில்லை. 20 நிமிடங்கள் வரை உலரவிடுங்கள். அதன்பின் ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் 10 நிமிடங்களுக்கு மேல் இதை தலையில் வைத்திருக்க வேண்டாம்.

3. வெந்தயம் மற்றும் வெங்காயச்சாறு தேவையான பொருள்கள் 2 தேக்கரண்டி வெந்தயம் 2 தேக்கரண்டி வெங்காயச்சாறு செய்முறை வெந்தயத்தை இரவு முழுக்க ஊறவைத்து, காலையில் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் வெங்காயச்சாறு கலந்து தலையில் தேய்த்து அரைமணி நுரம் ஊறவிடுங்கள். அதன்பின் தலைமுடியை நன்கு அலசுங்கள். பொடுகுத் தொல்லை நீங்குவதோடு உங்கள் கூந்தல் பளபளவென மின்னும். மேலும் இது தலைமுடியில் உண்டாகும் பூஞ்சைத்தொற்றையும் சரிசெய்யும்.

4. கற்றாழை மற்றும் வெங்காயச்சாறு தேவையான பொருள்கள் கற்றாழை ஜெல் 2 தேக்கரண்டி வெங்காயச்சாறு 3 தேக்கரண்டி செய்முறை வெங்காயச்சாறு மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட்டாக்கி தலைமுடியின் வேர்க்கால்களில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசுங்கள். வாரத்துக்கு இரண்டு முறை இதை செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

5. பாசிப் பயறு மற்றும் வெங்காயச்சாறு தேவையான பொருட்கள் பாசிப்பயறு பொடி 2 தேக்கரண்டி வெங்காயச்சாறு 1 தேக்கரண்டி செய்முறை பாசிப்பயறு பொடியுடன் வெங்காயச் சாறு கலந்து பேஸ்ட்டாக்கி, உச்சந்தலையில் இந்த கலவையை அப்பிவிடுங்கள். நன்கு உலரவிட்டு, ஷாம்பு கொண்டு அலசுங்கள். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்தால் பொடுகுத் தொல்லை விரைவில் நீங்கும்.

6. பீட்ரூட் மற்றும் வெங்காயச்சாறு தேவையான பொருட்கள் 2-3 பீட்ரூட் 1 தேக்கரண்டி வெங்காயச்சாறு செய்முறை பீட்ரூட்டை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். வெங்காயச்சாறுடன் பீட்ரூட் பேஸ்டை கலக்கவும். நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் உச்சந்தலையில் இந்த கலவையை கொண்டு மசாஜ் செய்யவும். பொடுகு குறையும் வரை தினமும் இதை செய்யலாம். பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் முடி உதிர்வைத் தடுக்கிறது.

7. புடலங்காய் – வெங்காயச்சாறு தேவையான பொருட்கள் 1 தேக்கரண்டி புடலங்காய் சாறு வெங்காயச்சாறு 1 தேக்கரண்டி செய்முறை புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச்சாறு இரண்டையும் கலந்து உச்சந்தலை முழுவதும் நன்றாக தேயுங்கள். பிறகு அரை மணி நேரம் அதை விட்டுவிட்டு, அலச வேண்டும். வாரம் 2-3 முறை பயன்படுத்துங்கள். புடலங்காய் சாறு உச்சந்தலையில் வறட்சியைப் போக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது தலை பொடுகு அகற்ற உதவுகிறது.

8. எலுமிச்சை சாறு – வெங்காயம் சாறு தேவையான பொருட்கள் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி வெங்காயம் சாறு செய்முறை எலுமிச்சை சாறுடன் வெங்காய சாற்றைக் கலந்து, உச்சந்தலையில் நன்றாக தடவவும். தடவிய பின்பு சுமார் 20 நிமிடங்கள் கழித்து அலசி விடுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம். வெங்காயச் சாறின் நாற்றத்தை எலுமிச்சை சாறு நீக்கிவிடும்.

9. ஆலிவ் ஆயில் – வெங்காயம் சாறு தேவைப்படும் பொருட்கள் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் வெங்காயம் சாறு 3 தேக்கரண்டி செய்முறை வெங்காய சாறை ஆலிவ் ஆயிலுடன் கலந்து உச்சந்தலைமற்றும் முடியில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அதன்பின் ஒரு டவலால் முடியை கட்டி வைத்திருங்கள். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். முடிக்கு இது பளபளப்பையும் உண்டாக்கும்.

10. தேங்காய் எண்ணெய் – வெங்காயம் சாறு தேவைப்படும் பொருட்கள் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு தேங்காய் எண்ணெய் 5 தேக்கரண்டி வெங்காயம் சாறு 3 தேக்கரண்டி செய்முறை ஒரு மிஸ்சரில் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காயச்சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி , 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து அதை கழுவவும். நல்ல முடிவுக்கு வாரம் இரண்டு முறை இதை செய்யுங்கள். இது வெள்ளை செதில்களை கட்டுப்படுத்துகிறது.

11. ஆப்பிள் சீடர் வினிகர் – வெங்காயம் சாறு தேவையான பொருட்கள் ஆப்பிள் சீடர் வினிகர் 1 தேக்கரண்டி வெங்காயம் சாறு 1 தேக்கரண்டி செய்முறை ஆப்பிள் சாறு வினிகர் மற்றும் வெங்காயம் சாறு கலந்து 5 முதல் 7 நிமிடங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யுங்கள். இதை வாரம் ஒரு முறை செய்யுங்கள். ஆப்பிள் சைடர் வினிகர் இயற்கையாகவே எதிர்பூஞ்சை பண்புகளைக் கொண்டது, இது தலை பொடுகு போக்குவதற்கு வல்லது . இது உச்சந்தலையின் பி.ஹெச் அளவுகளை சமப்படுத்துகிறது மற்றும் பூஞ்சை வளர்ச்சியை தடுக்கிறது

12. ஆப்பிள் சாறு மற்றும் வெங்காயம் சாறு தேவைப்படும் பொருட்கள் ஆப்பிள் பழச்சாறு 2 தேக்கரண்டி வெங்காயம் சாறு 2 தேக்கரண்டி செய்முறை வெங்காயம் சாறுடன் ஆப்பிள் பழச்சாறை கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு பின்னர் தலைமுடியை நன்கு கழுவி விடுங்கள். ஆப்பிள் சாறு இறந்த சரும செல்களை தலை பொடுகு செதில்களிலிருந்து உறிஞ்சி சருமத்தையும் மெருகேற்றும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்தாலே நல்ல தீர்வு கிடைக்கும்.

1 1522295578

Related posts

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்,நீண்ட கூந்தலுக்கான ரகசியம்

nathan

வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி

nathan

முயற்சிக்கவும்.. நரை முடியை மீண்டும் கருமையாக்கும் எண்ணெய்..!

nathan

பார்லர் செல்லாமலே கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்யனுமா? நீங்கள் அறிந்திராத 5 எளிய டிப்ஸ் !!

nathan

பூண்டை இதோட கலந்து தேய்ச்சா முடி கிடுகிடுனு வேகமா வளருமாம்…

nathan

அடர்த்தியான தலைமுடி வேண்டுமா?!!

nathan

தினமும் தலைக்கு ஏன் ஷாம்பு போடக்கூடாது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க க்ரீன் டீயை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

nathan

உறுதியான தலைமுடிக்கு… 5 வழிகள்

nathan