25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
201803261416381357 kadai biryani SECVPF
அசைவ வகைகள்

செட்டிநாடு காடை பிரியாணி…….

காடையில் வறுவல், குழம்பு, தொக்கு செய்து இருப்பீங்க. இன்று காடையை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான செட்டிநாடு காடை பிரியாணி
தேவையான பொருட்கள் :

காடை – 4
சீரகச் சம்பா அரிசி – 750 கிராம்
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 5
புதினா இலை – 50 கிராம்
கொத்தமல்லித்தழை – 50 கிராம்
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தயிர் – 50 மில்லி
தேங்காய்ப்பால் – 100 மில்லி
பட்டை – 2
ஏலக்காய் – 2
கிராம்பு – 4
பிரிஞ்சி இலை – ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 100 மில்லி
நெய் – 50 மில்லி

பிரியாணி மசாலா செய்ய :

பட்டை – 2
ஏலக்காய் – 4
கிராம்பு – 6
பூண்டு – 50 கிராம்
இஞ்சி-1 துண்டு

செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து வறுத்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்கவும்.

அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து அது கரையும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை இத்துடன் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.

பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

சூப்பரான செட்டிநாடு காடை பிரியாணி ரெடி.201803261416381357 kadai biryani SECVPF

Related posts

சிம்பிளான… நாட்டுக் கோழி குழம்பு

nathan

கணவாய்ப் பொரியல்

nathan

சிக்கன் லெக் ப்ரை

nathan

முட்டை தக்காளி குழம்பு ,

nathan

ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

இறால் சாதம்

nathan

வயிற்றுப்புண்ணை ஆற்றும் ஆட்டுக்குடல் குழம்பு

nathan

உங்களுக்கு தெரியுமா ஸ்பேஷல் மட்டன் கிரேவி செய்வது எப்படி????

nathan

கேரட் முட்டை ஆம்லெட்

nathan