24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
bodyodor 1521894095
சரும பராமரிப்பு

உங்கள் மீது வீசும் வியர்வை நாற்றத்திற்கு குட்-பை சொல்ல வேண்டுமா? அப்ப இத படிங்க!

அன்றாட வாழ்வில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை உடல் துர்நாற்றம். எப்போதாவது வியர்வையினால் ஒருவர் மீது நாற்றம் வீசினால் பிரச்சனையில்லை. ஆனால் பொது இடங்களுக்கு செல்லும் போது, எந்நேரமும் அளவுக்கு அதிகமாக வியர்த்துக் கொண்டே இருந்தால், அதனால் பெரும் சங்கடத்தை தான் சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவருக்கு அதிகமாக வியர்ப்பதற்கு வியர்வை சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக வேலை செய்வது தான். வியர்ப்பதுடன், சருமத்தில் உள்ள பாக்டீரியாக்களுடன் வியர்வை சேரும் போது, அது கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் அதிகம் வியர்க்கும் என்று தெரியுமா?

அளவுக்கு அதிகமாக காப்ஃபைன் பானங்களைப் பருகுவது, குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்வது, காரமான உணவுகளை உண்பது, இறுக்கமான உடைகளை அணிவது, உடல் வறட்சி, மன அழுத்தம் மற்றும் டென்சன், மது அருந்துவது, மோசமான டயட், ஹார்மோன் மாற்றங்கள், பூப்படைதல் போன்றவை தான் முக்கிய காரணங்களாகும்.

உடலில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க சிலர் டியோடரண்ட்டுகளைப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் அந்த டியோடரண்ட்டுகள் தற்காலிகம் தான் என்பதை மறவாதீர்கள். உங்களுக்கு உடல் துர்நாற்றத்தில் இருந்து நிரந்தர தீர்வு வேண்டுமானால், சுத்தமாக இருப்பதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

ஒருவரது உடலில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. கீழே அந்த எளிய இயற்கை தீர்வுகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து பின்பற்றி, உடல் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லுங்கள்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி, உடல் துர்நாற்றத்தைக் குறைக்க உதவும். மேலும் இது பாக்டீரியாக்களை அழித்து, நேச்சுரல் டியோடரண்டு போன்று செயல்படும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குளில் தடவி சில நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் என சில வாரங்கள் தொடர்ந்து பின்பற்ற, நல்ல பலன் கிடைக்கும்.

ஆல்கஹால் ஆல்கஹால் உடல் துர்நாற்றத்தைப் போக்க உதவும் மற்றொரு நிவாரணி. இது எளிதில் ஆவியாவதோடு, துர்நாற்றத்தையும் குறைக்கும். மேலும் இது சருமத்துளைகளை மூட செய்து, வியர்வை உற்பத்தியைக் குறைக்கும். அதற்கு பஞ்சுருண்டையை எடுத்து ஆல்கஹாலில் நனைத்து, அக்குளில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, கழுவுங்கள். இல்லாவிட்டால், ஒரு கப் நீரில் சிறிது ஆல்கஹால் சேர்த்து கலந்து, அக்குளைக் கழுவுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், பாக்டீரியாக்களின் வளர்ச்சியை எதிர்க்கும். இது சருமத்தின் pH அளவை நிலையாக பராமரித்து, உடல் துர்நாற்றத்தைப் போக்க உதவும். ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சுருண்டையில் நனைத்து, அக்குளில் தடவி 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை காலை மற்றும் இரவு படுக்கும் முன் செய்து வந்தால், வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டர் அக்குள் நாற்றத்தைப் போக்க உதவும். அதற்கு சிறிது ரோஸ் வாட்டரை அக்குளில் தடவுங்கள். இல்லாவிட்டால், குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரைக் கலந்து குளியுங்கள். இதனால் நாள் முழுவதும் உடல் ஒரு நல்ல மணத்துடன் இருக்கும்

தக்காளி கூழ் தக்காளியில் உள்ள அசிடிட்டி, துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் சருமத்துளைகளை சுருங்கச் செய்யும். இதனால் இது உடலில் இருந்து வீசும் வியர்வை நாற்றத்தைக் குறைக்க உதவும். அதற்கு தக்காளி கூழை நேரடியாக அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி சில வாரங்கள் தினமும் பின்பற்றி வந்தால், ஒரு நல்ல பலனைப் பெறலாம்.

எலுமிச்சை பழங்காலம் முதலாக உடல் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு தினமும் குளிகும் முன், ஒரு துண்டு எலுமிச்சையை அக்குளில் தேய்க்க வேண்டும். நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.

லெட்யூஸ் லெட்யூஸ் உடல் துர்நாற்றத்தைத் தடுக்க உதவும் ஒரு கீரை. சிறிது லெட்யூஸ் கீரையின் சாற்றினை அக்குளில் நேரடியாக தடவ வேண்டும். சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், குளித்து முடித்த பின், இந்த கீரையின் சாற்றினை அக்குளில் தடவி உலர வையுங்கள். வேண்டுமானால், லெட்யூஸ் கீரையின் சாற்றினை ஃப்ரிட்ஜில் சேகரித்து வைத்துக் கொண்டு தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சந்தன பவுடர் சந்தன பவுடர் பல்வேறு அழகு நன்மைகளை உள்ளடக்கி இருப்பதோடு, நல்ல நறுமணத்தையும் கொண்டது. முக்கியமாக சந்தனம் அக்குளில் இருந்து வீசும் துர்நாற்றத்தை நீக்க உதவியாக இருக்கும். அதற்கு சந்தன பவுடரை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் அக்குள் பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர வியர்வை நாற்றம் போவதோடு, அக்குளில் உள்ள கருமையும் அகலும்.
bodyodor 1521894095

Related posts

சரும அலர்ஜியை போக்க வழிகள்

nathan

உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

nathan

எப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா? இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க!!

nathan

உரோமங்களை அகற்ற ஈஸி வழி

nathan

கருமைநிறம் தோன்றும் உடலின் மறைவான இடங்களை சரிசெய்யும் வழிமுறைகளைக் காணலாம்.

nathan

உங்கள் சரும அழகை மெருகூட்டும் திராட்சை

nathan

வீட்டிலேயே எளிய முறையில் முகத்தை பளிச்சிட செய்யும் டிப்ஸ்

nathan

சருமத்தை காக்கும் உணவுகள்

nathan

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan