28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
maxresdefault 3
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

இவ்வாறுஅரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.

கறிவேப்பிலை இந்தியாவின் பல பகுதிகளிலும், அந்தமான் தீவுகளிலும் வளரும் சிறு பூண்டுச் செடியாகவும், சிறு மரமாகவும் காணப்படும். இலையுதிர் காலத்தில் இலையுதிர்க்கும் தன்மை கொண்ட இந்தச் செடியில் நறுமணங் கொண்ட இலைகள் சமையலுக்காக மட்டுமின்றி மருத்துவத்திற்கும் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. இதன் மணம் எல்லோருக்கும் பிடிக்கும். இலைகளில் வைட்டமின் ‘ஏ’, இரும்பு, தாமிர, கந்தகச் சத்தும், கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.

 

maxresdefault 3

கோனிகின் எனும் ஒருவகை மரப்பிசினும் உண்டு. காம்புகளிலும், இலைகளிலும் சிறிது சாம்பல் உப்பு இருக்கும். கறிவேப்பிலைச் செடியின் இலைகள், பட்டை மற்றும் வேர் முதலிய பகுதிகள் பசி தூண்ட, வெப்பமுண்டாக்க பயன்படுத்தப்படுகிறது. பசும் இலைகளிலிருந்து எண்ணெய் வடித்தெடுக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் அழகுசாதனப் பொருட் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். கறிவேப்பிலையை வறுத்து உட்கொண்டால் வாந்தியைத் தடுக்கலாம். கொப்புளங்களுக்கும் விஷக்கடிகளுக்கும் தடவு மருந்தாக, மேல் பூச்சாக உபயோகிக்கலாம். சீதபேதிக்கு தளிர் இலையைத் தயிருடன் உட்கொள்ளலாம். கசக்கிய இலைகள் பற்றாக தோல் வீக்கங்களில் பயன்படுத்தலாம். தலைமுடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

images 4

கறிவேப்பிலையை பச்சைப் பயறுடன் கலந்து ஸ்நானப் பொடியாகப் பயன்படுத்தலாம். கறிவேப்பிலை 2 கைப்பிடியுடன் கசகசா 9 கிராம், கஸ்தூரி மஞ்சள் 4 கிராம் அனைத்தையும் சேர்த்து மையாக அரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும். கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங் கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும். வல்லாரைக்கு உள்ள குணங்கள் இதற்கும் உண்டு. ஞாபகசக்தியை பன்மடங்கு விரிவு படுத்துவது போல, இம்மூலிகையும் சக்தியைத் தூண்டிப் பெருக்கும். நன்றாக முற்றிய கறிவேப்பிலை 100 கிராமுடன் சுக்கு 25 கிராம், கடுக்காய் உலர்ந்த தோல் இவற்றை நன்றாக உலர்த்தி பொடியாக்கி இந்த பொடியைத் தேவைக்கேற்றவாறு வெந்நீரில் கலக்கி குடித்து வந்தால் அழிந்து போன சுரப்பிகள் புதுப்பிக்கப்பட்டு ருசி இல்லா நாக்கில் ருசியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

வாத பித்தங்கள் உடலில் ஒளிந்து கொண்டிருந்தால் அவை விடுபட்டு மறைந்து விடும். வளரும் குழந்தைகளுக்கும் வலுக்குறைந்த பெரியோர்களுக்கும் இரும்புச் சத்தை இழக்கும் பெண்களுக்கும் கறிவேப்பிலை சிறந்த சத்துணவு. தொற்று நோய்களை எதிர்க்கும் சக்தி கறிவேப்பிலைக்கு உண்டு. இரத்தத்தைச் சுத்தம் செய்யும் திறன், புண்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு. குறிப்பாக வாய்ப் புண்களைக் குணப்படுத்தும். பல் ஈறுகளை வலுப்படுத்தும். வைட்டமின் ‘சி’ ஊட்டச்சத்து, இரத்த சோகையை விரட்டியடிக்கும் பாலிக் அமிலம் எனும் உயிர்ச்சத்து இதில் அடங்கியுள்ளது. தலைமுடியின் வளர்ச்சிக்கும் வனப்புக்கும் உதவும் ஊட்டச்சத்துகள் கறிவேப்பிலையில் நிறைய உண்டு.

கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும். ஜீரணத்திற்கு உதவும் சிறந்த மருந்தாக இந்த இலை பயன்பட்டு வருகிறது. இந்த இலை தனித்தும், பிற பொருள்களோடு சேர்ந்தும் நம் நோய்களை போக்குகிறது. பசும் இலைகளிலிருந்து நீராவி அழுத்தத்தில் தைலம் வடித்தெடுக்கப்படுகிறது. இத்தைலம் குளியல் சோப்புகளில் சேர்க்கப்படும் நறுமணங்களை நிலைக்க செய்ய பயன்படுகிறது. கறிவேப்பிலைப் பழங்களில் இருந்தும் தைலம் வடிக்கப்படுகிறது. முகத்திலுள்ள அம்மைத் தழும்பினை போக்க கைப்பிடி கறிவேப்பிலையுடன், கசகசா 15 கிராம், கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், இவற்றை மை போல அரைத்து முகததில் கனமாகப் பூசி கால் மணி நேரம் ஊறவைத்து பின் வெந்நீர் கொண்டு கழுவி விட வேண்டும். இவ்விதம் காலை, மாலை இரு வேளை செய்யப் படிப்படியாக தழும்பு மறைந்து விடும். தைலம் காரச் சுவையும், அழுத்தமான நறுமணமும் கொண்டிருக்கும். நாட்டு மருந்து வகைகளில் கறிவேப்பிலைச் செடியின் இலைகள், பட்டை மற்றும் வேர் முதலிய பகுதிகள் பசி தூண்ட பயன்படுத்தப்படுகிறது. கறிவேப்பிலை மரத்தின் மலர்கள் வெண்மையாக இருக்கும். பின்னர் இது பச்சை நிறமுள்ள காய்களாகக் காய்க்கும். காய்கள் கரிய நிறமுள்ள கனியாக மாறி கீழே உதிர்ந்துவிடும். இந்த கனியினுள் கனத்த உறையுடன் கூடிய விதைகள் இருக்கும். அழகிய கரிய கூந்தலுக்கு கறிவேப்பிலை உத்தரவாதம் தரும் எளிய மருந்து.மருதோன்றி இது ஒரு புதர்ச்செடி.

நல்ல மணமுள்ள பெரிய அல்லது நல்ல தரமான அதிகக் கிளைகளுடன் கூடிய சிறிய மரமாகும். வெப்ப மண்டலப் பகுதிகளில் எளிதாக வளரும். வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் பெரிய கொத்துகளான சிறிய மலர்கள் மிகுந்த மணத்துடன் காணப்படும். அழவணம், ஐவணம் என்றும் அழைக்கப்படுகிறது. இலைகள், மலர்கள் மற்றும் கனிகள், காய்கள் என அனைத்துப் பகுதிகளும் மருத்துவ பயன் உடைய பகுதிகளாகும். மருதாணி (மருதோன்றி) இலைக்கு கிருமிகளை அழிக்கும் சக்தியுண்டு. இலைகளின் சாறு தசையை இறுக்கும் தன்மை உடையவை. இலைகளின் சாறு உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மலர்கள் தூக்கத்தை தூண்டக் கூடியவை. இலைகள் தோல் வியாதிகளுக்கு நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுகின்றன. இலைச்சாறு மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தீக்காயங்கள் மற்றும் தோல் வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. இலைகளின் இளஞ்சிவப்பு நிறச்சாயம் உள்ளங்கைகள், நகங்கள், பாதங்கள் மற்றும் கேசத்திற்கு நிறங்கொடுக்கும் பொருளாகவும், துணிச்சாயமாகவும் உபயோகிக்கப்படுகிறது. நறுமணப் பொருட்கள் சேர்க்கையிலும் பயன்படுத்தப்படுகிறது. விரல்களுக்கு மருதாணி இட்டு வருவதால் நகக்கண்ணிலுள்ள இடுக்குகளில் படிந்துள்ள அழுக்கோடு கூடிய நுண்ணுயிர் கிருமிகள் அழிய அதிக வாய்ப்புண்டு. நகச்சுற்று என்ற கொடுமையான வலி நோய் தடுக்கப்படுகிறது. சுத்தமான தேங்காயெண்ணெயில் உலர்ந்த இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் மயிர் உதிர்வது தடுக்கப்படும். நரை, பூனைமயிர் உள்ளவர்கள் தேய்த்து வந்தால் கேசம் கறுப்பாகும். தலை கழுவியாகவும் செயல்பட்டு கூந்தலின் செழுமையான கேச வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. மருதாணிப் பூவை அரைத்து தொழுநோய் புண்களுக்குப் பற்றிடலாம். கேசத் தைலத் தயாரிப்பிற்கும், வாசனைத் தைலங்கள் தயாரிப்பிற்கும் மருதாணி எண்ணெய் உபயோகமாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதன் சாறு, வெயில் காலங்களில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். கேசத்திற்கு குளிர்ச்சியையும், கேசப் பராமரிப்பில் கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது. இதன் கஷாயம் வறண்ட தொண்டைக்கு தொண்டை கழுவி நீர்மமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் இலைப்பசை தலைவலி, கால் எரிச்சல் ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது. இலைகள் நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களுக்கெதிராகவும் பயன்படுகிறது. விதைகளும் வேர்ப்பட்டைகளும் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பண்டைய எகிப்தில் சடலங்கள் மருதாணி சாயத்தில் தோய்த்தெடுத்த துணிகளில் பாதுகாக்கப்பட்டன. அரேபியா மற்றும் இந்தியாவில் கைகளில் அழகிய நிற வேலைப்பாடு செய்ய இந்த சாயம் பயன்பட்டது. மருதோன்றி இலையை எண்ணெயில் காய்ச்சிய பின்னர் பச்சை நிறமாக இருந்தால்தான் அது பதமாக இருப்பதாக பொருள். சிவப்பு நிறமாக இருந்தால் அது பதம் கெட்டு முறிந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இது போல முறிந்த எண்ணெய் முடி உதிர்வதைத் தடுக்க உதவாது. தலை முழுகுவதற்குத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். பதமான எண்ணெயை தொடர்ந்து வழுக்கைக்குத் தேய்த்து வர வழுக்கையில் முடி வளரும். இலையுடன், படிகாரமும் சேர்த்து அரைத்து அதன் விழுதை, கருந்தேமல், படைகள், கால்வலி, நரம்பு இழுப்பு உள்ளவர்கள் தேய்த்து வர இந்நோய்கள் நீங்கும். இலையை உள்ளங்காலில் தேய்த்தால் கண் எரிச்சல் நீங்கும். இலையின் விழுதை தலையின் இருபுறமும் பக்கவாட்டில், நெற்றிப் பொட்டின் பற்றுப்போட தலைவலி குணமாகும். அம்மை போட்ட காலத்தில் கண்களுக்கு அம்மையால் யாதொரு தீங்கும் நேரிடாதவாறு பாதுகாக்க இலையை அரைத்து இருகாலடிகளில் வைத்துக் கட்டலாம். நகங்களுக்கு வைக்க நகம் யாதொரு நோய்க்கும் உட்படாமல் தடுக்கப்படும். பூவினை தலையில் சூட உடல் வெப்பம் மாறும். விதைச் சாற்றில் தாளகத்தை இழைத்து மெல்லியதாக வெண்குட்டத்தின் மீது பூசிவர நிறம் மாறும். மருத்துவப் பயன்கள் : கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வகற்றும். பூக்கள் துயிலைத் தூண்டுவிக்கும். மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும்.

 

வேப்பிலை (மார்கோசா, வேம்பு) வேம்பு இந்தியா முழுவதும் அனைவரும் நன்கு அறிந்த மரம். தென்னிந்திய மக்களால் தெய்வமாய் போற்றப்படும் இதில் மலை வேம்பு, சந்தன வேம்பு என பல வகைகளும் உள்ளன. இம்மரம் இந்தியாவிலும், பர்மாவிலுமே பெருமளவு காணப்படுகிறது. இதன் காய் வெளிர் பச்சை நிறத்தில் நீள உருளை வடிவில் 2 செ.மீ நீளமுள்ளதாக இருக்கும். காய் வெள்ளை நிறப் பாலுடையது. காய் கனிந்து, மஞ்சள் நிறமுடைய சதைப்பற்றுடைய கனியாக மாறுகிறது. பறவைகளுக்கு பிடித்தமான பழம் இது. இதன் இலை, காய், பூ, அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. நம் நாட்டின் சாலையோரங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. வீடுகளிலும், கோயில்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. வேப்ப மரத்தால் சுகாதார கேடுகளும், முருங்கை மரத்தால் பசிப் பிணியும் வராமல் தடுக்கலாம் என்பது நம் முன்னோர் கருத்து. வேப்பமரத்தின் அடியில் அமர்வதும், அதன் மேல் பட்டு வரும் காற்றை சுவாசிப்பதும் மக்களின் மனநிலையை சாந்தமாக்கும். மனம் அமைதி பெறும். இதன் உலர்ந்த தண்டின் பட்டைகள், இலைகள், வேர்ப்பட்டைகள் மருந்து தயாரிக்கப் பயன்படுகின்றன. இலைகள் கசப்பு சுவை உடையது. தோல் வியாதிகளுக்கும், பரு, கொப்புளங்கள் இவற்றை குணப்படுத்துவதில் கிருமி நாசினியாகவும் விளங்குகிறது. அழகு சாதனப் பொருள் தயாரிப்பில் சிறந்த கிருமி நாசினியாக சேர்க்கப்படுகிறது. இதன் இலைகள் மற்றும் வேர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியும், தோல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும் கொண்டவை. வைரஸ், பூஞ்சை, காளான் போன்ற கிருமிகளுக்கு எதிரானவை. காற்றில் கலந்து மிதந்து வரும் நுண் கிருமிகளால் வரும் நோய்கள், வேம்பின் இலையால் விலகும். வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக்களுக்குத் தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் உடைந்து காயத் தொடங்கும். வேப்பிலையால் கிருமிகள் எல்லாம் செத்து மடிந்து மண்ணோடு மண்ணாகிவிடும். இது சீதளத்தை விரட்டி உடம்பிற்குத் தேவையான சீதோஷ்ணத்தைக் கொடுத்து சமச் சீராக உடலை வைத்துக் கொள்ளும். ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைபோல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர அம்மை வடு மாறும். உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய்க்கு இதன் இலைச்சாறு நல்ல மருந்து. பசி குறைந்து உடல் மெலிந்திருப்பவர்கள் வேப்பிலை ஒரு கைப்பிடியில் பூண்டு பத்துப்பல், சீரகம் மூன்று சிட்டிகை சேர்த்தரைத்து இதை இரண்டு பகுதியாக்கி காலை, மாலை இம்மாதிரி 20 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப் பிரச்னை தீரும். பசியைத் தூண்டும். கட்டி, படை, புண்களுக்கு பற்றாகத் தடவலாம். தண்டு நுனியிலிருந்து வெளிவரும் சாறு வலுவின்மை, தோல் வியாதிகளைப் போக்கும். குளிர்ச்சி தரும். வலுவேற்றும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை. வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும். வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும். காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது. வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும். விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் காயங்களில் கிருமிகள் தோன்றாமல் தடுக்கும். முடக்குவாதம், தோல் வியாதிகளுக்கு உதவுகிறது. வேப்ப எண்ணெய் கருவுறுதலைக் தடுக்கிறது. தொடர் தோல் வியாதிகளான தொழுநோய் மற்றும் ஆறாத புண்களைக் குணப்படுத்தும். சுளுக்கு மற்றும் முடக்குவாதத்திற்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது. கொட்டையிலிருந்து வேப்ப எண்ணெய் எடுப்பார்கள். இந்த எண்ணெயில் மார்கோசிக் அமிலம் உள்ளது. இந்த எண்ணெய் மஞ்சள் நிறத்துடன் கசப்பாக இருக்கும். அந்த எண்ணெய் விளக்கெரிக்கவும் பயன்படுகிறது. வேப்ப மரம் இவ்வாறு மக்களுக்கு நல்ல மருத்துவ பயன்களைத் தருகிறது. இத்தகைய மரத்தை வீட்டிற்கொன்று வளர்த்து நன்மை பல பெறுவோம்

Related posts

மென்மையான கைகளை பெறுவதற்கு……

nathan

முகப் பரு நீக்க எளிய முறை

nathan

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் பேஸ் பேக்

nathan

பெண்களே உங்கள் கைகளே சொல்லும் நீங்கள் எப்படி பட்டவர்கள் என்று ?படிங்க!

nathan

வெயில் காலத்தில் அன்றாடம் ஏற்படும் சருமம் பிரச்சனைகளை வீட்டிலேயே சரி செய்ய இதை செய்யுங்கள்!…

nathan

4 வருடமாக கோமாவில் கிடக்கும் கார்த்திக் நரேன் படம் துருவங்கள் பதினாறு.. அடக்கம் பண்ணிய பிரபல இயக்குனர்

nathan

எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan

சூப்பர் டிப்ஸ்…உங்கள் சரும பாதுகாப்பு

nathan