முப்பதுகளில் இருக்கிறீர்களா? கடலைமாவைத் தக்காளி ஜூஸ§டன் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். அரை மணி நேரத்தில் குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் சருமம் சுருக்கமில்லாமல் தேஜஸ§டன் ஜொலிக்கும். அப்புறமென்ன, முப்பதும் இருபதாகி விடும். ‘வழுக்’ சருமம் வேண்டுமா? கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, ரோஜா இதழ்கள், சந்தனம், பாதாம் பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் காய வைத்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வாரம் ஒரு முறை தயிரில் இந்தப் பொடியைக் கலந்து உடம்பு முழுவதும் தடவுங்கள். அரைமணி நேரம் கழித்து பீர்க்கம் நாரால் உடம்பை மென்மையாகத் தேய்த்துக் குளியுங்கள்.
உங்கள் சருமம் பட்டுக்கே சவால் விடும் போங்க! உறுதியான கூந்தல் வேண்டுமா? கொப்பரைத் தேங்காயை மெலிதாகச் சீவி மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதெல்லாம் தலைக்குத் தேய்த்துக் குளிக்கிறீர்களோ? அதற்கு மறுநாள் தலைமுடியின் மயிர்க்கால்களில் இந்த பேஸ்ட்டை அழுந்தத் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து வெறும் தண்ணீரில் அலசுங்கள். உங்கள் கூந்தல் உறுதியாகவும், ப்ட்டுப் போலவும் இருக்கும்.
அழகு முகம் கிடைக்கணுமா? இரண்டு ஸ்பூன் கொண்டைக் கடலை, 2 ஸ்பூன் பச்சரிசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். நல்ல கலர் கிடைக்கும். அகலமான பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்து முகத்தில் நீராவி பிடித்து வாருங்களேன். முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்கள் மறைந்து முகத்தின் தேஜஸ் கூடி விடும். இளநரைப் பிரச்னை உள்ளவரா நீங்கள்? சைனஸ் தொல்லையும் கூடவே உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் ஹென்னா பயன்படுத்த முடியாது. இதற்கு ஒரு மாற்று வழி இருக்கிறது. தேங்காயையும். பீட்ரூட்டையும் நன்கு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். தலை முழுக்கத் தடவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு வெறும் தண்ணீரில் அலசுங்கள். அடிக்கடி செய்து வந்தால் இளநரை மாறி விடும்.
வெள்ளரிச்சாறும், தர்ப்பூசணிப் பழச்சாறும் மிகவும் நல்ல ஆஸ்ட்ரிஞ்ஜென்ட்’கள். இவற்றை ஒரு பஞ்சால் முகத்தில் தடவி, ஊறினால் எண்ணெய் வடிதல் கட்டுப்படும். சருமமும் மிருதுவாகும். சோப்பை அடிக்கடி பயன்படுத்தினால் முகச்சருமம் வறண்டு விடும். வறண்ட சருமம் சுலபத்தில் சுருக்கம் விழுந்து வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். அதனால் கடலை மாவு, அல்லது பயத்தமாவு தேய்த்து முகத்தை அலம்பவும். வெயிலில் அலைந்து திரிந்த பிறகு வீடு வந்தால் முகம் கறுத்துப் போய் இருக்கும். இதை சரியாக்க ஒரு சுலபமான வழி. புளித்த தயிரை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசி ஊறவிடவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு கழுவினால் கறுப்பு மாறி சருமம் இயற்கையான நிறத்திற்கு வந்துவிடும். எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தோலை நன்றாகக் காயவைத்து, பொடியாக்கி, கடலைமாவுடன் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் எண்ணெய் வடிதல் நிற்கும். எண்ணெய்ப் பசை அதிகமாக உள்ள சருமத்தை உடையவர்கள் வாரம் ஒரு முறை முகத்தை ஆவியில் காட்டியபடி 10 நிமிடம் ‘ஸ்டீம்’ செய்தபின் முகத்தை சுத்தமான பஞ்சால் அழுந்தத் துடைத்து, கரும்புள்ளிகளை லேசாக பக்கவாட்டிலிருந்து அழுத்தி எடுத்தபின் குளிர்ந்த நீரால் கழுவி வரவும். வறண்ட சருமம் மற்றும் சென்சிட்டிவ் சருமத்தினர் ‘ஸ்டீம்’ செய்தால் சருமம் மேலும் வறண்டு விடும். ஸ்டீம் செய்ய அகலமான ஒரு பேசினில் தண்ணீரைக் கொதிக்க விட்டு ‘சிம்’மில் வைத்து அதற்கு 11/2 அடிக்கு மேல் முகத்தைக் காட்டவும். நெற்றிக்கு மேல் தலைமுடியை ஒரு டவலால் சுற்றிக் கொண்டு முகத்தில் மட்டும் ஆவி படும்படி காட்டவும். ஆவி பிடிக்கும் போது கண்களை மூடிக் கொள்ளவும். நன்கு ஆவி பிடித்த பின் முகத்தை சுத்தம் செய்து விட்டு ‘ஃபேஸ் மாஸ்க்’ உபயோகப்படுத்தினால் சருமம் புத்துணர்வும், பொலிவும் மழமழப்பும் பெறும்.
அரைத்த திராட்சைப் பழக்கூழைப் பூசி ஊறியபின் குளித்தால், சருமம் பளிச்சென்று இருக்கும். புளித்த தயிரில் கடலை மாவு கலந்து தினமும் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறிக் குளியுங்கள். உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கும். எலுமிச்சைத் தோலைக் காயவைத்து நைஸாகப் பொடித்து ஸ்நானப் பொடியுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் சருமம் அழகாகும். தேன் இயற்கையாகவே ‘ப்ளீச்’ செய்யக்கூடிய குணம் உள்ளது. முகத்தில் முளைத்துள்ள உரோமங்கள் மீது (புருவங்கள், இமைகள் தவிர) தேனைத் தடவி 30 நிமிடம் ஊறினால் இவைகள் வெளிறி தோலோடு ஒன்றிவிடும். பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்காது. வாரம் இரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கடலைமாவு, பயத்தமாவு, சந்தனப்பொடி கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பட்டுப் போல மென்மையாக இருக்கும். ஒரு முட்டையை உடைத்து நன்கு கலக்கி அதில் சிறிது யூடிகோலோனையும் சேர்த்து உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூசிக் காயவிடவும். கண்களைச் சுற்றி பூச வேண்டாம். இக்கலவை நன்கு காய்ந்தபின் இதை கழுவி முகத்தைத் துடைக்கவும். சருமம் பளபளக்கும். மிகவும் ஆரோக்கியமாக ஜொலிக்கும். இக்கலவை முகத்தில் காயும் போது பேச, சிரிக்க வேண்டாம். இதை மாதம் இரு முறை செய்து வந்தால் சருமம் தொய்ந்து, தளர்ச்சியடையாமல், சுருக்கம் விழாமல் இருக்கும். ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை பளீர் என்று பிரகாசிக்கச் செய்ய ஒரு பஞ்சு உருண்டையை பன்னீரில் நனைத்து மூடிய கண்களின் இமைகள் மீது 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். கண்களை மசாஜ் செய்வதற்கு உங்கள் மோதிர விரலையே உபயோகியுங்கள். அதுதான் கண்களைச் சுற்றியுள்ள மெல்லிய சருமத்திற்கு அதிகப்படியான அழுத்தத்தைத் தராது. டி.வி. பார்க்கும் போது உங்கள் கண்களுக்கும் டி.வி. பெட்டிக்கும் குறைந்தபட்சம் 7 அடிதூரம் இடைவெளி இருப்பது உங்கள் கண்களுக்கு நல்லது. இல்லாவிடில் கண்பார்வை பாதிக்கப்படும். படிக்கும் போது உங்கள் கண்களுக்கும், புத்தகத்துக்கும் இடையில் குறைந்தபட்சம் இரண்டடி இடைவெளி இருக்க வேண்டியது உங்கள் கண்களின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானது. உஷ்ணத்தால் எரியும் கண்களைக் குளிரவைக்க ஐஸ்வாட்டரில் நனைத்த பஞ்சு அல்லது கைக்குட்டையை உங்கள் மூடிய கண்கள் மீது 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஓய்ந்து போய்க் காணப்படும் கண்களை புத்துணர்வு பெறச்செய்ய, சிறிது உப்பு கரைத்த நீர் நிறைந்த கிண்ணத்தை கண்ணோடு ஒட்டி வைத்து இந்தக் கரைசலுக்குள் விழியை முக்கி கண்களைத் திறந்து, கண் விழியை இடமும், வலமும், மேலும் கீழுமாக உருட்டவும். இது கண்களில் உள்ள அழுக்கு, தூசு ஆகியவற்றை அகற்றி விடும். கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்கவும். உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும். கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும். பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.