29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201803191515061611 potato cheese balls SECVPF
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்…. மிகவும் பிடிக்கும்

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
கேரட் – 2
சீஸ் – 1/2 கப்
கார்ன் – தேவைக்கேற்ப
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

[பாட்டி மசாலா] கரம் மசாலா – 1 தேக்கரண்டி
சோள மாவு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவைக்கேற்ப
பிரெட் தூள் – தேவைக்கேற்ப

201803191515061611 potato cheese balls SECVPF

செய்முறை :

கேரட், சீஸை துருவிக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

கார்னை வேக வைத்து கொள்ளவும்.

சோள மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், கொத்தமல்லி, [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

உருண்டைகளை கரைத்து வைத்துள்ள சோள மாவில் முக்கி எடுத்து, பின்னர் பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.

கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அதில் இந்த உருண்டைகளை போட்டு பொரிக்கவும். உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெயில் இருந்து எடுக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.

தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.

Related posts

கொக்கோ தேங்காய் பர்ஃபி

nathan

பனீர் காளான் சீஸ் மிக்ஸ்

nathan

மைக்ரோவேவினுள் வைக்க எந்த மாதிரியான பாத்திரங்கள் சிறந்தவை?

nathan

சுவையான மைசூர் போண்டா….

sangika

சோள தயிர் வடை /கார்ன் தஹி வடா

nathan

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

nathan

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

nathan

சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி

nathan