31.8 C
Chennai
Wednesday, Jul 16, 2025
images 1
தலைமுடி சிகிச்சை

எவ்வித பக்கவிளைவும் இல்லாத ஷாம்பூ கண்டிஷனர் மாஸ்க்

ஏன் வீட்டிலே ஷாம்பு தயாரித்து பயன்படுத்த வேண்டும்? இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷாம்பு எவ்வளவு தரமாக இருக்கிறது என்பதை நீங்களே தெரிந்துகொள்ள முடியும். மற்றொன்று எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் சிறந்த ஷாம்புவாக இருக்கும்.

ஷாம்பு தயாரிக்கும் முறை – 

images 1

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா,
ஒரு கப் தண்ணீர்.

செய்முறை

ஒரு  பாத்திரத்தில் பேக்கிங் சோடாவையும் தண்ணீரையும் சரிசமமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாகக் கூழாகும் வரை கலக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

உச்சந்தலை தொடங்கி கூந்தல் முழுவதும் நன்றாக தடவ வேண்டும். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து முடியில் இருக்கக்கூடிய அழுக்கு  நீங்கும் வரை அலச வேண்டும்.

கண்டிஷனர் தயாரிக்கும் முறை

இந்த கண்டிஷனர் கடைகளில் கிடைக்கக்கூடியது போன்று இல்லாமல்  எளிமையாக இருக்கும். இது போன்ற கிரீம் கண்டிஷனர் கடைகளில் கிடைக்காது. இதை பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலன் கிடைப்பதை நம்மால் காண முடியும்.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் வினிகர்,
ஒரு கப் தண்ணீர்.

செய்முறை

ஆப்பிள் வினிகரையும், தண்ணீரையும் சம அளவாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். கிரீம் போன்ற பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

உள்ளங்கையில் சிறிதளவு எடுத்து கைகளை பயன்படுத்தி, தலை முடியில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். மண்டைஓட்டுப் பகுதியில் படாதவாறு ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

மாஸ்க் தயாரிக்கும் முறை 

தேவையான பொருட்கள்

முட்டை, எண்ணெய், கண்டிஷனர்.

செய்முறை

ஒரு கிண்ணத்தில் எண்ணெய், முட்டை மற்றும் தரமான கண்டிஷனர் கலந்து சமமாகவும் தாராளமாகவும் முடி மீது தடவ வேண்டும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு ஒரு லேசான ஷாம்பு கொண்டு முற்றிலும் கழுவி உங்கள் முடியை இயற்கையாக காய விடுங்கள்

Related posts

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் சீன மருத்துவம்!!

nathan

பொடுகுத் தொல்லை பெரும் தொல்லை

nathan

தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்

nathan

ஆரோக்கியமாக கூந்தல் வளர இயற்கையான முறையில் எப்படி ஷாம்பு தயாரிக்கலாம்?

nathan

உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை உள்ளதா? நெல்லிக்காய் தைலம் முயற்சி செய்துபாருங்கள்..!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! வெள்ளை முடி அதிகமா இருக்கா? இதோ அற்புதமான எளிய தீர்வு…

nathan

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்துக்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்களுக்கு முடி வெள்ளையாக மாறுவதற்கு இந்த உணவுகள் தான் காரணம்..!

nathan

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் வெங்காயச்சாறு

nathan