26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
20180102 172832
முகப் பராமரிப்பு

உங்களுக்கு முகப் பொலிவு முதல் இதய ஆரோக்கியம் வரை எதற்கெல்லாம் ‘வைட்டமின் – ஈ’ எண்ணெய்யைப் பயன் படுத்தலாம் தெரியுமா?

நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியம். ஒவ்வொரு வகையான எண்ணெய்யிலும் பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதில் வைட்டமின் – ஈ எண்ணெய்யில் இருந்து நமக்குக் கிடைக்கும் பயன்களைப் பற்றி பார்ப்போம்.

நமது சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருவது, மென்மையான கூந்தல் மற்றும் புற்று நோய் முதல் இதய நோய் வரையிலான பிரச்னைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது என நீங்கள் நினைத்துக் கூட பார்க்காத அளவு நன்மைகளை வாரி வழங்கக் கூடியது வைட்டமின் – ஈ எண்ணெய்.

இந்த எண்ணெய்யை இரு முறைகளில் நாம் பெறலாம் ஒன்று செயற்கையாக சில கெமிக்கல்களை பயன்படுத்தித் தயாரிப்பது, மற்றொன்று இயற்கையாகவே வைட்டமின் – ஈ சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து எண்ணெய்யைப் பிரித்தெடுப்பது என. இப்போதெல்லாம் மெடிக்கல் ஷாப்கள் முதல் அழகு சாதன பொருட்கள் விற்கும் கடைகள் வரை இந்த எண்ணெய் கிடைக்கிறது, ஆகையால் சரியான எண்ணெய்யைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டியது மிகவும் அவசியம்.

சருமம் பளிச்சிடும்:

வைட்டமின் – ஈ எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் நரம்புகள் வலுப்பெற்று ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் சரும ஆரோக்கியமும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். ரத்த ஓட்டம் சீராக இருந்தால் முகம் தனது இயற்கையான பொலிவை திரும்பப் பெற்று பளிச்சிடும்.

தழும்புகள் மறையும்:

குழந்தை பெற்றதால் வயிற்றில் வரும் தழும்புகள், உடற் பயிற்சிகள் மூலம் கை கால்களில் வரும் தழும்புகள் என அனைத்தையும் வைட்டமின் – ஈ எண்ணெய்யைப் பயன்படுத்தி மறையச் செய்யலாம். இந்த எண்ணெய்யில் இருக்கும் ஊட்டச்சத்துகள் சருமத்திற்கு ஊடுருவி இந்தத் தழும்புகளை மறையச் செய்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தோலில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும்:

சுற்றுச்சூழல் மாசு, கெமிக்கல்கள் நிறைந்த அழகு சாதன் பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற காரணத்தால் இப்போதெல்லாம் சீக்கிரமாகவே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. வைட்டமின் – ஈ எண்ணெய்யைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த பிரச்னை பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம் என்று டெர்மடாலிஜிஸ்ட்களே பரிந்துரைக்கிறார்கள்.

இதய நோயில் இருந்து விடுபட:

நமது உடலில் வைட்டமின் – ஈ சத்து அதிகமாக இருந்தால் அது இதய நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளை பன்மடங்கு குறைக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இதய நோய் மட்டுமில்லாமல் இந்த எண்ணெய்யைத் தொடர்ச்சியாக பயன் படுத்தினால் டைப் 2 நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், புற்று நோய் போன்ற பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம்.

வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்:

இந்த எண்ணெய் பிசுப் பிசுப்பு தன்மை அற்றது என்பதால் நீங்கள் குளித்து முடித்த பிறகு ஒரு மாய்ஸ்ட்ரைஸரை போல இதை உங்கள் உடல் முழுவதும் தடவினால் சில வினாடிகளிலேயே இந்த எண்ணெய்யைச் சருமம் உள் இழுத்துக் கொண்டு மிகவும் மென்மையாக மாறுவதை நீங்களே உணர முடியும். பனிக்காலங்களில் உதட்டில் தடவினால் வெடிப்புகள் ஏற்படாது.

மேக் அப்பை முற்றிலுமாக அகற்ற:

நாம் போடும் மேக் அப் குறைந்தது 8 மணி நேரமாவது தாக்கு பிடிக்க வேண்டும் என்று 9-5 அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் கடைசியாக முகத்தைக் கழுவினாலும் கண்ணில் வைத்த மை, லைனர் போன்றவை போவதில்லை. அதை அழிக்கப் படாத பாடு பட வேண்டி இருக்கும், இனி இந்தக் கவலை வேண்டாம் வைட்டமின் – ஈ எண்ணெய்யைச் சிறிதளவு முகத்தில் தேய்த்து மசாஜ் செய்த பின்னர் முகத்தைக் கழுவி பாருங்கள் எந்தத் தடயமும் இல்லாமல் உங்கள் மேக் அப் கலைந்திருக்கும்.

இன்று பயன் படுத்திய உடனே நாளையே பலனை கண்டுவிட வேண்டும் என்று ஆசைப் படாதீர்கள். வைட்டமின் – ஈ எண்ணெய் நமது உடலுக்குள் சென்று தேவையான மாற்றங்களை ஏற்படுத்த ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் தேவைப்படும், அதுவரை பொறுமையாக காத்திருந்து பலனை அனுபவியுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!20180102 172832

Related posts

பெண்களே உங்கள் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறைய!

nathan

தங்க நாணயம் கொண்டு எப்படி ஜொலிக்கும் முகத்தை பெறலாம் எனத் தெரியுமா?

nathan

அழகு சிகிச்சைகள் – முக அழகிற்கு குங்குமப்பூ

nathan

முகப்பரு இருக்கும் போது பேசியல் செய்யலாமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்

nathan

சூப்பர் டிப்ஸ்! இரவு படுக்கச் செல்லும் முன்பாக இந்த அழகு குறிப்புகளை பயன்படுத்தி பாருங்க….!

nathan

முகத்தில் உள்ள அழுக்கை நீக்க சோப்பிற்கு பதிலாக இத யூஸ் பண்ணுங்க…

nathan

பெண்களே வெள்ளையாகணுமா? அப்ப பாலைக் கொண்டு இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! !

nathan

எலுமிச்சை சாற்றினை முகத்திற்குப் பயன்படுத்தலாமா?

nathan