39 C
Chennai
Wednesday, Jul 9, 2025
அறுசுவைஇலங்கை சமையல்

இட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

இட்லி தயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

idlivadai

தேவையான பொருட்கள்:

பச்சரிசி 1 கப்
புழுங்கலரிசி 1 கப்
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு 1 கப்
புளித்த தயிர் 1 கப்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
நெய் 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை:

அரிசியையும், உளுந்தையும் ஒன்றாக 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

அவற்றை; களைந்து சுத்தப்படுத்தி வடித்தெடுத்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும், அரைக்கும் போது உப்பு, பெருங்காயத்தூள் கலக்கவும்.

அரைத்தெடுத்த மாக்கலவையை 7-8 மணி நேரம் புளித்துப்போக (தோசைக்கு வைப்பதுபோல் பொங்க) வைக்கவும்.

பொங்கிய மாக்கலவையுள் மிளகு தூள், சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.

மாக் கலவை தோசைக்கலவை போல் இளகியதாக இராது கொஞ்சம் இறுக்கமாக இருத்தல் வேண்டும். அதன்பின்;

எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் உள்ள குண்டுகளில் பாதி அளவுக்கு மாவை ஊற்றி இடியப்பம், பிட்டு அவிய வைப்பது போல் இட்லிச் சட்டியில் வைத்து மூடி; ஆவியில் 10-15 நிமிடங்கள் வரை அவிய விடவும்.

இட்லி அவிந்ததும் இட்லித் தட்டை வெளியே எடுத்து அதன் மேல் கொஞ்ச தண்ணீர் தெளித்தபின் இட்லியை ஒவ்வொன்றாக எடுக்கவும்.

Related posts

ருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….

sangika

ருசியான ரச மலாய் எப்படி செய்வது?

nathan

வெஜ் பிரியாணி

nathan

சிம்பிளான… சுரைக்காய் குருமா

nathan

மஷ்ரூம் தொக்கு

nathan

இலங்கை ஆப்பம் ஓட்டல் ஸ்டைலில் செய்யனுமா? தொடர்ந்து படியுங்கள்

nathan

கோழி ரசம்

nathan

கேரட் பாயாசம்

nathan

மட்டன் தாழ்ச்சா செய்வது எப்படி!

nathan